மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை நகரில் அமைந்துள்ள தனியார் மற்றும் அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தென் தமிழகத்தின் கல்வித் தேவைகளை சமாளித்து வருகிறன. மதுரை மாவட்டத்தில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இது தவிர இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் தனது மண்டல மையத்தை மதுரையில் வைத்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகள், இரண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகள், ஏழு தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மகளிருக்கான கல்லூரிகளும் அடங்கும். மதுரை மாவட்டத்தில் ஐந்து பெண்கள் கல்லூரிகள் உள்ளன. மதுரையில் பாரம்பரியம் மிக்க பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகள் சில உள்ளன.

பல்கலைக்கழகங்கள்[தொகு]

மதுரை மாவட்டத்தில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இது தவிர இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் தனது மண்டல மையத்தை மதுரையில் வைத்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகள், இரண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகள், ஏழு தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மகளிருக்கான கல்லூரிகளும் அடங்கும். மதுரை மாவட்டத்தில் ஐந்து பெண்கள் கல்லூரிகள் உள்ளன. மதுரையில் பாரம்பரியம் மிக்க பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகள் சில உள்ளன.

மதுரை காமராசர் பல்கலைக் கழகம்[தொகு]

மதுரையில் மதுரை பல்கலைக்கழகம் என்கிற பெயரில் பல்கலைக்கழகம் 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகமானது, 1978 ஆம் ஆண்டு, மறைந்த தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர் காமராசர் நினைவாகமதுரை காமராசர் பல்கலைக் கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் 133 கல்லூரிகள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மதுரை[தொகு]

2010 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட போது மதுரையிலும் தனி பல்கலைக்கழகமாக அமைக்கப்பட்டது. இதற்காக மதுரை நகரின் வடக்கே மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலைநேர கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக இடவசதி வழங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. 2011 இல் தமிழகத்தின் பொறுப்பேற்ற புதிய அதிமுக அரசு அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு முன்பு இருந்ததைப்போலவே செயல்படும் என்று அறிவித்தது.

கல்லூரிகள்[தொகு]

அமெரிக்கன் கல்லூரி

இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களுள் சில மதுரையில் அமைந்துள்ளன. இரண்டு கல்லூரிகள் நூறு ஆண்டுகளுக்கு மேலாகவும், சில கல்லூரிகள் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாவும் செயல்பட்டு வருகின்றன.

தியாகராஜா பொறியியல் கல்லூரி

நகருக்குள் அமைந்துள்ள கல்லூரிகள்[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

தொழிற்கல்லூரிகள்[தொகு]

புறநகரில் உள்ள கல்லூரிகள்[தொகு]

Contact us Alfaa catering college No 63/4 Alagar kovil main road, Nayakkanpatti , Poiyakkraipatti , Madurai - Recognised by : Govt of Indian ( NDA – HRD) Govt of Tamil Nadu. Approved by Bharatiyar university

வேளாண்மைக் கல்லூரி[தொகு]

மதுரைப் புறநகர் பகுதியில் அரசு வேளாண்மைக் கல்லூரி ஒன்று உள்ளது.

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியாக தியாகராஜர் பொறியியல் கல்லூரி விளங்குகிறது. இது அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரியாகும். இது தவிர மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றுள் சில:

  1. எஸ். ஏ. சி. எஸ்(SACS) எம்.ஏ.வி.எம் பொறியியல் கல்லூரி, கிடாரிப்பட்டி.
  2. லதா மாதவன் பொறியியல் கல்லூரி, கிடாரிப்பட்டி.
  3. பி.டி.ஆர். பொறியியல் கல்லூரி, திருமங்கலம்.
  4. வைகை பொறியியல் கல்லூரி, மதுரை
  5. Raja College of Engineering & Technology, Veerapanjan, Madurai
  6. Velammal Engineering College, Viraganoor

பள்ளிகள்[தொகு]

இந்நகரில் இருக்கும் சேதுபதி மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பணியாற்றியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.