உள்ளடக்கத்துக்குச் செல்

இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் வளாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் வளாகம்
வகைநிகர்நிலை
உருவாக்கம்2005
Parent institution
ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகம்
வேந்தர்சுவாமி சுகிதானந்தா
துணை வேந்தர்சுவாமி ஆத்மப்பிரியானந்தா, சுவாமி அபிராமானந்தா (நிர். தலைவர்)
அமைவிடம், ,
வளாகம்நகரியம்
மொழிஆங்கிலம்
சுருக்கப் பெயர்RKMVU
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 பிரிவு 3[1]
இணையதளம்www.vivekanandauniversity-cbe.org

இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் (RKMVU) கொல்கத்தா பேலூர் மடத்தில் அமைந்துள்ள இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் வெளிவளாக சிறப்புக் கல்வி மையமாகும். இப்பல்கலைக்கழகத்தைக் குறித்த கருத்துரு சுவாமி விவேகானந்தருக்கு 111 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இதனை தரநிலை பல்கலைக்கழகமாக ஏற்றுள்ளனர்.

இந்த பல்கலைக்கழகப் பிரிவு கோயம்புத்தூரில் உள்ளது.

மேலோட்டம்

[தொகு]

கோயம்புத்தூர் இராமகிருசுணா மிசன் விவேகாநந்தா பல்கலைக்கழகம் (RKMVU), கொல்கத்தா பேலூர் மடத்திலிருந்து இயங்கும் விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் வெளிவளாக பல்கலைக்கழகப் பிரிவு ஆகும். இது கோவையிலுள்ள இராமகிருஷ்ண மிசன் வித்தியாலய வளாகத்தில் இயங்குகின்றது.

கோயம்புத்தூர் வளாக இராமகிருசுண மிசன் விவேகானந்த பல்கலைக்கழகத்தின் கல்விக் கட்டிடத் தொகுதி

இதன் (பதவிசார்) வேந்தராக சுவாமி சுகிதானந்தா உள்ளார்; இவர் இராமகிருசுண மடம் மற்றும் இராமகிருசுண இயக்கம் இரண்டிற்கும் உலகளாவிய பொதுச்செயலாளராக உள்ளார். துணை வேந்தராக ஆத்மப்பிரியானந்தாவும் நிர்வாகத் தலைவராக அபிராமானந்தாவும் உள்ளனர். துறைத்தலைவர்களும் கல்விப்பிரிவு தலைவர்களும் இவர்களுக்கு உறுதுணையாக உள்ளனர்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.