திவ்யதர்சினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திவ்யதர்சினி
பிறப்பு திவ்யதர்சினி நீலகண்டன்
பெப்ரவரி 17, 1985 (1985-02-17) (அகவை 33)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள் டிடி
பணி தொகுப்பாளினி, நடிகை, பேராசிரியை,
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998–நடப்பு
உறவினர்கள் பிரியதர்சினி (அக்கா)

திவ்யதர்சினி (Divyadarshini) தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி[1] இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்[2]. இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார்.

தொகுப்பாளினி[தொகு]

திவ்யதர்சினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் தற்பொழுது ஜோடி சீசன் 7 மற்றும் காபி வித் டிடி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்குச் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013 இல் விகடன் வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Penchant for the past. The Hindu (2004-05-29). Retrieved on 2014-01-01.
  2. "DD as Professor". chennaionline.com (Oct 03, 2013). பார்த்த நாள் 10 January 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யதர்சினி&oldid=2518452" இருந்து மீள்விக்கப்பட்டது