தீபிகா பள்ளிக்கல்
தீபிகா பள்ளிக்கல் | |
---|---|
தீபிகா பள்ளிக்கல் கிண்டி பொறியியல் கல்லூரியில் சங்கர்ஷ் நிகழ்ச்சியின் போது | |
தேசம் | இந்தியா |
பிறப்பு | சென்னை, இந்தியா | செப்டம்பர் 21, 1991
உயரம் | 5'-4" |
எடை | 60 கி |
தொழில்ரீதியாக விளையாடியது | 2006 |
பயிற்சியாளர் | சாரா பிட்ஸ்-ஜெரால்ட் |
பயன்படுத்தப்படும் மட்டை | டெக்னிஃபைபர்(Technifibre) |
மகளிர் ஒற்றையர் | |
அதி கூடிய தரவரிசை | No. 10 (டிசம்பர், 2012) |
தற்போதைய தரவரிசை | No. 14 (ஜனவரி, 2013) |
தலைப்பு(கள்) | 7 |
இறுதிச் சுற்று(கள்) | 5 |
உலக திறந்தவெளி போட்டிகள் | QF 2011 மகளிர் உலக சுவர்ப்பந்து சாம்பியன்ஷிப் |
கை ஆளுகை | வலது |
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஜனவரி, 2013. |
தீபிகா பள்ளிக்கல் ஒரு இந்திய சுவர்ப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். உலக மகளிர் சுவர்ப்பந்து போட்டி தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் வந்த முதல் இந்திய விளையாட்டு வீரர் ஆவார்[1]. இவர் 2011-ம் ஆண்டு 3 WISPA பட்டங்களைப் பெற்று தன் விளையாட்டு வாழ்வில் சிறந்த தரவரிசை இடமாக 13-ம் இடம் பெற்றார். அதன் பின்னர்2012-ம் ஆண்டு அந்த தரவரிசை இடத்தையும் தாண்டி முதல் 10 இடத்திற்குள் வந்தார்.
தனி வாழ்க்கை
[தொகு]தீபிகா பள்ளிக்கல் என்று அறியப்படும் தீபிகா ரெபக்கா பள்ளிக்கல் 21 செப்டம்பர் 1991-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சிரியன் கிறித்தவ பெற்றோருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். நவம்பர் 15, 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிக்கா இருவரும் திருமண நிச்சயம் செய்து கொண்டனர். இவர் தனது முதல் பன்னாட்டு பந்தய விளையாட்டை லண்டனில் விளையாடினார். இதுவரை ஜெர்மன் ஓபன், டட்ச் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன் ஆகியவற்றில் பட்டம் வென்றுள்ளார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]தீபிகா பள்ளிக்கல் 2006-ம் ஆண்டு முதல் தொழில்முறை சுவர்ப்பந்து விளையாட்டு வீரரானார். தொடக்க காலத்தில் பல ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்த இவரது தொழில் வாழ்க்கை, 2011-ல் எகிப்தில் இவர் எடுத்துக்கொண்ட பயிற்சிக்குப் பிறகு சீரானதாகவும், பல வெற்றிகளுடையதாவும் மாறியது[2].
போட்டி | வருடம் | முடிவு |
---|---|---|
வின்னிபெக் இன்டெர் கிளப் ஓபன் | 2015 | வெற்றி |
மாகு சுவர்ப்பந்து ஓபன் | 2013 | வெற்றி [3] |
மீடோ பார்மசி ஓபன் | 2013 | வெற்றி |
ஆஸ்திரேலியன் ஓபன் | 2012 | அரைஇறுதி |
டோர்னமெண்ட் ஆப் சாம்பியன்ஸ் | 2012 | இரண்டாம் இடம் |
க்ரோகடைல் சேலஞ்ச் கப் | 2011 | வெற்றி |
உலக ஓபன் | 2011 | காலிறுதி |
டிரீட் ஸ்போர்ட்ஸ் தொடர் | 2011 | வெற்றி |
ஆரஞ்சு கன்ட்ரி ஓபன் | 2011 | வெற்றி |
தங்க பதக்கம்
[தொகு]2014ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்தில் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன் வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
தேசிய சுவர்ப்பந்து சாம்பியன்ஷிப் புறக்கணிப்பு
[தொகு]தேசிய சுவர்ப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பரிசு தொகை வேறுபாட்டை களைய வலியுறுத்தி தீபிக்கா பள்ளிக்கல் நான்காவது ஆண்டாக போட்டிகளில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தீபிகா பள்ளிக்கல் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வந்தார்". தி இந்தியன் எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "எகிப்து பயிற்சியும், தீபிகாவும்". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Dipika triumphs". The Hindu. 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2013-11-30.
- ↑ "பாலின பேதத்துக்கு எதிராக தொடரும் தமிழக வீராங்கனை தீபிகாவின் 'புறக்கணிப்பு' போர்!". பார்க்கப்பட்ட நாள் ஜூலை 17, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)