உள்ளடக்கத்துக்குச் செல்

சீதா ராமன் (தமிழ் தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதா ராமன்
வகை
மூலம்சிபோன் சாத்தி
நடிப்பு
முகப்பு இசைஅரிகரன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்ஒரு அத்தியாயத்திற்கு 20-22 நிமிடங்கள்
விநியோகம்சீ5
ஒளிபரப்பு
அலைவரிசைசீ தமிழ்
படவடிவம்உயர் வரையறு தொலைக்காட்சி

சீதா ராமன் (Seetha Raman) என்பது இந்திய நாட்டின் தமிழ்-மொழி தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் வரவிருக்கும் ஒரு தொலைக்காட்சித் தொடராகும்.

இத்தொடரில் பிரியங்கா நல்கரி [1] மற்றும் செய் டிசோசா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்தத் தொலைக்காட்சித் தொடர் சீ பங்களா என்ற வங்காள மொழி தொலைக்காட்சியின் பிரபலமான நாடகமான சிபோன் சாத்தியின் அதிகாரப்பூர்வ மறு ஆக்கம் ஆகும். இத்தொடர் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சீ தமிழ் தொலைக்காட்சியில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.[2]

கதை[தொகு]

சீதாவின் (பிரியங்கா நல்காரி) மூத்த சகோதரி மதுமிதா தான் முன்பு காதலித்த ராம் (செய் டிசோசா) என்ற நபரை சீதா திருமணம் செய்து கொள்ளும் கதை. ஆனால் அவள் மூத்த சகோதரி தோற்றத்தால் சமூகம் மற்றும் ராமனின் குடும்பத்தில் இருந்து நிராகரிப்பை எதிர்கொண்டாள். எல்லா முரண்பாடுகளையும் மீறி தன் கணவனை வெல்வதில் சீதை எப்படி உறுதியாக இருக்கிறாள் என்பதை கதை சொல்கிறது.

நடிகர்கள்[தொகு]

முக்கிய கதாபாத்திரம்[தொகு]

 • சீதையாக பிரியங்கா நல்காரி
 • ராமாக செய் டிசோசா

தொடர்புடையவர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

நடிப்பு[தொகு]

ரோஜா (தொலைக்காட்சித் தொடர்) புகழ் பிரியங்கா நல்கரி[3][4][5] சீதையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.[6] அவருக்கு ஜோடியாக செய் டிசோசா ஆண் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை ராணி[7] மற்றும் ரேச்மா பசுபுலேட்டி [8] முக்கிய வேடத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.சாக்சி சிவா மற்றும் வினோதினி சீதை மற்றும் மதுமிதாவின் அப்பா மற்றும் அம்மாவாக நடித்துள்ளனர்.

வெளிவரும் தேதி[தொகு]

இதன் முதல் விளம்பரம் 2023 சனவரி 31 அன்று வெளியிடப்பட்டது. இதில் கதாநாயகி பிரியங்கா நல்காரி அறுமுகத்துடன் தலைப்பின் பெயர் வெளியிடப்பட்டது.[9] இரண்டாவது விளம்பரம் 2023 பெப்ரவரி 3 அன்று வெளியிடப்பட்டது. இதில் பிரியங்கா நல்காரி , கதாநாயகன் செய் டிசோசா, ரேச்மா பசுபுலேட்டி மற்றும் அக்சிதா போபையா ஆகியோர் 2 நிமிட கதைப் பாடலை வெளிப்படுத்தினர்.[10]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Priyanka Nalkari Is All Set To Appear In Her New TV Show Seetharaman, Check Promo". www.news18.com (in ஆங்கிலம்).
 2. "New TV serial 'Seetharaman' to be launched soon; deets inside". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
 3. "ஜீ தமிழுக்கு தாவிய சன் டிவி நடிகை". www.instanews.city.
 4. "சீதா இங்கே.. ராமன் எங்கே? ரோஜா நாயகியின் புதிய சீரியல் ப்ரமோ வைரல்". tamil.indianexpress.com.
 5. "Priyanka Nalkari Doing Lead Role in Zee Tamil Serial Seetharaman". www.indiantvinfo.com (in ஆங்கிலம்).
 6. "சினிமாவை துரத்தும் சீரியல்கள்.. ரோஜா பிரியங்கா நடிக்கும் புதிய சீரியல் 'சீதா ராமன்'!". tamil.news18.com.
 7. "சீரியலுக்கு வரும் நாட்டாமை பட டீச்சர்... கேரக்டர் இதுதானாம்.. இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்". tamil.oneindia.com.
 8. "குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீரியல் நடிகை… ஜீ தமிழ் சீரியலில் ரோஜா பிரபலம் : டாப் 5 சீரியல்". tamil.indianexpress.com.
 9. சீதா ராமன் விரைவில் உங்க ஜீ தமிழ்ல. சீதா ராமன் | Seetha Raman | Zee Tamil.
 10. சீதா ராமன்… விரைவில் - இது நம்ம டைம்... இனி அழகான டைம். சீதா ராமன் | Seetha Raman | Zee Tamil.