கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை
இயக்குனர்ராம் குமாரதாஸ் கே. சுலைமான்
நடிப்பு
 • கிருஷ்ண பிரியா
 • விஷ்ணு உன்னிகிருஷ்ணன்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
தொகுப்பாளர்கள்சி. சஜின்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
சேனல்ஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்1 ஏப்ரல் 2019 (2019-04-01) –
ஒளிபரப்பில்

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிய காதலையும் குடும்பத்தையும் பின்னணியாகக் கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் ஏப்ரல் 1, 2019 இல் ஒளிபரப்பானது.

இந்த தொடரில் புதுமுக நடிகை கிருஷ்ணா பிரியா, பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக டிக் டாக், சரவணன் மீனாட்சி (பகுதி 3), அரண்மனை கிளி போன்ற தொடர்களில் நடித்த விஷ்ணு உண்ணிகிருஷ்ணன், விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் பிரபல நடிகை சீமா, அன்பழகன், அமிர்தா வர்மன் போன்ற பலர் நடிக்கிறார்கள்.[1][2][3] இத்தொடர் கொரோனா தொற்றுநோய் மூலம் பகுதி-258 டில் முடிவடைந்தது.[4]


கதை சுருக்கம்[தொகு]

பிரீத்தி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள், விக்ரம் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன். இருவரும் காதலிக்கிறார்கள் ஆனால் இவர்கள் சேர்ந்தால் விக்ரம் குடும்பத்தின் சாபத்தின் படி விக்ரம் இறந்து விடுவான். சாபத்தை மீறி இவர்கள் எப்படி வாழ்வில் ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

 • கிருஷ்ண பிரியா - பிரீத்தி[5]
 • விஷ்ணு உண்ணிகிருஷ்ணன் - விக்ரம்
 • சீமா[6] - அஞ்சனா தேவி (விக்ரமின் பாட்டி)
 • அனு - கிருபா
 • அன்பழகன் - ராம்கி
 • அமிர்தா வர்மன் - சந்திரிகா
 • சரவணன் - வீரபாகு
 • பிரேமலதா - விக்ரமின் அத்தை
 • மது மோஹன் - விக்ரமின் மாமா
 • மதுமிதா - ஸ்ரீஜா

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 1, 2019 முதல் சூலை 5, 2019 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. சூலை 8, 2019 முதல் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பூவே பூச்சூடவா என்ற தொடர் ஒளிபரப்பானது. அதன் பிறகு நவம்பர் 4, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி, பிப்ரவரி 24, 2020 முதல் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி, தற்போது சூலை 27, 2020 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 10:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் திங்கள் - சனி இரவு 10:30 மணி தொடர்கள்
Previous program கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
(முடிவடைந்தது)
Next program
இனிய இரு மலர்கள் இனிய இரு மலர்கள்
(ஒளிபரப்பில்)·
ஜீ தமிழ் திங்கள் - வெள்ளி பகல் 1:30 மணி தொடர்கள்
Previous program கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் Next program
தேவதையை கண்டேன் இரட்டை ரோஜா
(ஒளிபரப்பில்)·
ஜீ தமிழ் திங்கள் - வெள்ளி மாலை 6 மணி தொடர்கள்
Previous program கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் Next program
இனிய இரு மலர்கள் பிரியாத வரம் வேண்டும்
(முடிவடைந்தது)
ஜீ தமிழ் திங்கள் - வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள்
Previous program கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் Next program
சத்யா
மறுஒளிபரப்பு
பூவே பூச்சூடவா
ஜீ தமிழ் திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணி தொடர்கள்
Previous program கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் Next program
ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் பூவே பூச்சூடவா