தேன்மொழி பி.ஏ
தேன்மொழி பி.ஏ | |
---|---|
வகை | குடும்பம் அரசியல் நகைச்சுவை நாடகம் |
இயக்கம் | கதிரவன் அருள் ராஜன் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 491 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 26 ஆகத்து 2019 13 நவம்பர் 2021 | –
தேன்மொழி பி.ஏ - ஊராட்சி மன்றத் தலைவர் என்பது விஜய் தொலைக்காட்சியில் 26 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் அரசியல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும்.
இந்த தொடர் 'நிம்கி முகியா' என்கிற இந்தி தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடரில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக அறிமுகமான ஜாக்குலின் முதல் முதலாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக சித்தார்த் அருள் என்ற காதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[1][2] இந்த தொடர் 13 நவம்பர் 2021 அன்று 491 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதை சுருக்கம்
[தொகு]இந்த தொடரில் வீட்டில் செல்ல மகளாக, சுதந்திரமாக வளரும் தேன்மொழி, இவர் ஊராட்சி மன்றத் தலைவராக ஆவதும், இதனால் அந்த ஊரை சேர்ந்த பெரிய மனிதர் இவரை தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இதை வைத்து மருமகளை கொடுமை படுத்த நினைக்கிறார் மாமியார், ஆனால் அவருக்கு சிரித்தவாரே செம மொக்கை கொடுக்கிறார். அதன் பிறகு நடக்கும் அமளி துமளிதான் கதை.
நடிகர்கள்
[தொகு]முதன்மை கதாபாத்திரம்
[தொகு]- ஜாக்குலின் - தேன்மொழி (அருளின் மனைவி)
- சித்தார்த் - அருள்
- உஷா எலிசபத் - பரபேஸ்வரி
துணைக் கதாபாத்திரம்
[தொகு]- அஞ்சலி பிரசாந்த அஷ்ரிதா - தமிழ்மதி
- நவீன் வெற்றி - அரவிந்த்
- ஜெகநாதன் → கண்ணன் → ஜெகநாதன் - தேவராஜ்
- வரலட்சுமி → சுமங்கலி - தெய்வானை
- அர்ச்சனா - தேவி
- மனுஷ் மனோகரன் - நாகராஜ் (தேவியின் கணவன்)
- வருண் உதய் - கனகவேல்
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
[தொகு]இந்த தொடர் முதலில் 26 ஆகத்து 2019 அன்று பிற்பகல் 3 மணிக்கு நீல குயில்[3] என்ற தொடருக்கு பதிலாக ஒளிபரப்பானது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த தொடர் பிப்ரவரி 17, 2020 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு அன்புடன் குஷி என்ற தொடர் ஒளிபரப்பானது.
கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூன் 10, 2020 முதல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 5 அக்டோபர் 2020 முதல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பானது.
ஒளிபரப்பான திகதி | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி |
---|---|---|---|---|---|---|
26 ஆகத்து 2019 - 15 பிப்ரவரி 2020 | பிற்பகல் 3 மணிக்கு | |||||
17 பிப்ரவரி 2020 - 27 மார்ச் 2020 | இரவு 10 மணிக்கு | |||||
10 ஜூன் 2020 - 3 அக்டோபர் 2020 | இரவு 9:30 மணிக்கு | |||||
5 அக்டோபர் 2020 - 4 சனவரி 2021 | இரவு 10:30 மணிக்கு | |||||
4 அக்டோபர் 2021 - 13 நவம்பர் 2021 | பிற்பகல் 3:30 மணிக்கு |
மதிப்பீடுகள்
[தொகு]கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2019 | 3.4% | 4.5% |
2020 | 3.2% | 4.9% |
2.1% | 2.9% | |
2021 | 2.4% | 3.9% |
2.3% | 3.4% |
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடர் விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஹாட் ஸ்டார் என்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் எடுத்த ஹீரோயின் அவதாரம்! இனி வேற லெவல் பாஸ்!".
- ↑ "Jaquline is back on TV with this serial".
- ↑ "தேன்மொழி பி.ஏ - புதிய தொடர்". Archived from the original on 2019-10-02. பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
வெளி இணைப்புகள்
[தொகு]விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி பிற்பகல் 3:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | தேன்மொழி பி.ஏ (4 அக்டோபர் 2021 - 13 நவம்பர் 2021) |
அடுத்த நிகழ்ச்சி |
- | முத்தழகு |
விஜய் தொலைக்காட்சி : திங்கள்- வெள்ளி இரவு 9:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | தேன்மொழி பி.ஏ (10 ஜூன் 2020 - 3 அக்டோபர் 2020 ) |
அடுத்த நிகழ்ச்சி |
அரண்மனை கிளி (11 நவம்பர் 2019 – 27 மார்ச் 2020) |
பிக் பாஸ் தமிழ் 4 (4 அக்டோபர் 2020 - 10 சனவரி 2021) |
விஜய் தொலைக்காட்சி : திங்கள்- வெள்ளி இரவு 10 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | தேன்மொழி பி.ஏ (10 ஜூன் 2020 - 27 மார்ச் 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
அன்புடன் குஷி (27 சனவரி 2020 – 14 பிப்ரவரி 2020) |
பிக் பாஸ் தமிழ் 4 (4 அக்டோபர் 2020 - 17 சனவரி 2021) |
விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி பிற்பகல் 3 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | தேன்மொழி பி.ஏ (26 ஆகத்து 2019 - 15 பிப்ரவரி 2020) |
அடுத்த நிகழ்ச்சி |
நீல குயில் (17 திசம்பர் 2018 – 24 ஆகத்து 2019) |
அன்புடன் குஷி (17 பிப்ரவரி 2020 - 13 ஆகத்து 2021) |
- விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் நகைச்சுவைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தியில் இருந்து மறு-ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தொலைக்காட்சியில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம்
- 2021 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்