அரண்மனை கிளி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரண்மனை கிளி
அரண்மனை கிளி (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை குடும்பம்
காதல்
எழுத்து சி. முத்து செல்வம்
இயக்கம் அணில்
நடிப்பு
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் டிவி
முதல் ஒளிபரப்பு 24 செப்டம்பர் 2018 (2018-09-24)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

அரண்மனை கிளி விஜய் டிவியில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப பின்னையை கொண்ட தொடர். இந்த தொடர் பிக் பாஸ் 2 ஒளிபரப்பாகி வந்த நேரத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரை அணில் இயக்க, புதுமுக நடிகை மோனிஷா ஜானுவாகவும், அர்ஜுனாக புதுமுக நடிகர் சூர்யா தர்ஷன் மற்றும் மீனாட்சியாக நடிகை பிரகதியும் நடிக்கின்றனர். வில்லியாக நீலிமா ராணி நடிக்கிறார்.[1][2]

கதைச்சுருக்கம்[தொகு]

மாற்றுத்திறனாளியான அர்ஜுனுக்கும் மற்றும் அவன் தாய் மீனாட்சிக்கும் ஜானுவை சுத்தமாகப் பிடிக்காத நிலையில், சர்ந்தர்ப்ப சூழ்நிலையால் அருஜுனை திருமணம் செய்யும் ஜானு, அந்த வீட்டுக்கு வாழ வருகிறாள். எல்லோருடைய வெறுப்புகளையும் மீறி, அந்த வீட்டிலுள்ளவர்களில் மனதில் ஜானு இடம்பிடிப்பாளா? என்பதுதான் இந்த தொடரின் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • மோனிஷா - ஜானு
  • கிராமத்தை சேர்ந்த ரொம்பவே வெகுளிப் பெண், அர்ஜுனின் மனைவி.
 • சூர்யா தர்ஷன் - அர்ஜுன்
  • பணக்கார வீட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜானுவின் கணவன்.
 • பிரகதி - மீனாட்சி
  • அர்ஜுனின் தாய், மிகப்பெரிய தொழிலதிபர். தன் மகனுக்குப் பிடித்த பெண்ணைத்தான் அவனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது அவருடைய கனவு.
 • நீலிமா ராணி - துர்கா ராகவன்
  • அர்ஜுனின் உறவினர், மீனாட்சியை பழி வாங்க நினைக்கிறாள்.

ஜானு குடும்பத்தினர்[தொகு]

 • காயத்ரி யுவராஜ் - ரேணுகா (ரேணு, ஜானகியின் சகோதரி)
 • அரவிந்தராஜ்--- - நடராஜன் (ஜானகி மற்றும் ரேணுவின் அப்பா)

அர்ஜுனின் குடும்பத்தினர்[தொகு]

 • --- - சுந்தரேசர் (மீனாட்சியின் கணவன், அர்ஜுனின் தந்தையார்)
 • விஷ்ணு உன்னிகிருஷ்ணன் அரவிந்த் சுந்தரேசர் (அர்ஜுனின் சகோதரர்)
 • மானஸ் சவாலி - ராகவன் (துர்காவின் கணவன்)
 • நவ்யா ஸ்வாமி - ஷில்பா (அர்ஜுனின் குழந்தைப் பருவ நண்பர்)
 • "மைனா" நந்தினி - வியஜா
 • வி.ஜே. விஷால் - ஆகாஷ் (யமுனாவின் மகன்)
 • சத்ர ராவ் சச்சின் → நித்திய ரவீந்திரன் - யமுனா
 • ஷியாம் - செல்வம் (அர்ஜுனின் கவனிப்பாளர்)
 • மதுமிதா - ஆர்த்தி (யமுனாவின் மகள்)
 • சிவநாதராக - ரவிச்சந்திரன்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]