அன்புடன் குஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்புடன் குஷி
வகைகாதல்
நாடகத் தொடர்
உருவாக்கம்கே.ராம்குமார் ராதா
எழுத்துகே.ரமேஷ் அரவிந்த்
இயக்கம்ஜெர்ரோல்ட் அரோக்கியா தர்மராஜ்
சிவ சேகர் (309-341)
நடிப்பு
 • பிரஜின்
 • மான்சி ஜோஷி
 • ரேஷ்மா வெங்கட்
 • ஷ்ரேயா அஞ்சன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்341
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்முத்து டிஜிட்டல் ஸ்டுடியோ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்
ஒளிப்பதிவுகே.ரமேஷ்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்முத்து ராஜ்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்27 சனவரி 2020 (2020-01-27) –
ஆகத்து 13, 2021 (2021-08-13)
Chronology
பின்னர்தென்றல் வந்து என்னைத் தொடும்

அன்புடன் குஷி என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் 9 ஜுலை 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி 13 ஆகத்து 2021 ஆம் ஆண்டு அன்று 341 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரில் பிரஜின், ஷ்ரேயா அஞ்சன், மான்சி ஜோஷி, ரேஷ்மா வெங்கட் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1][2][3]

கதை சுருக்கம்[தொகு]

ராஜஸ்தானி குடும்பத்தில் வேலை செய்யும் அன்பு. தனது முதலாளி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவன். இவரின் மகளான குஷி, இருவரும் சிறுவயதிலிருந்து ஒன்றாக வளந்தவர்கள். குஷிக்கு ஆடை வடிமைப்பராக அமெரிக்கா சென்று படிக்க ஆசைப்படுகிறார். ஆனால் ராஜஸ்தானி பையனை கல்யாணம் செய்து கொண்டால் இவரின் ஆசை நிறைவேறாமல் போகும் என்று நினைக்கின்றார். இவளின் ஆசை நிறைவேறுமா இல்லை விதியின் சத்தியால அன்புவை குஷி திருமணம் செய்கின்றாள் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • பிரஜின் - அன்பு
 • மான்சி ஜோஷி (1-50) → ரேஷ்மா வெங்கட் (51-259) → ஷ்ரேயா அஞ்சன் (260-341) - குஷி அன்பு
 • அரவிந்த் சிவகுமார் (1-50) → லோகேஷ் பாஸ்கர் (51-341) - சுதீஷ்

துணைக் கதாபாத்திரங்கள்[தொகு]

 • மீரா கிருஷ்ணன் - மாதுரி சிங் லால் (குஷியின் தாய்)
 • சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி - ஆதித்யா லால் (குஷியின் தந்தை)
 • ராஜேஷ் கோர்ன் - நரேஷ் (குஷியின் சகோதரன்)
 • சாதனா (1-50) → தீபா சங்கர் (51-) - ராஜேஸ்வரி (அன்புவின் தாய்)
 • சுனிதா - செல்வி (அன்புவின் சகோதரி)
 • கௌதமி - ரேவதி (அன்புவின் அத்தை)
 • சபரி கிரிஷ் - அறிவு (அன்புவின் சகோதரன்)
 • அஜய் பிரதி - தயாளன்
 • பிரீத்தி ரெட்டி
 • மது - கோகுல்
 • சுரேகா சுகுமார்
 • கே.எல்.மணி - அன்பு
 • சத்யா - தமாசு
 • ஆதி
 • நீது மோகன்

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரில் சின்னத்தம்பி தொடரில் நடித்த பிரஜின்[4] என்பவர் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக கன்னட தொலைக்காட்ச்சி நடிகை மான்சி ஜோஷி என்பவர் குஷி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் நடிக்கும் முதல் தமிழ் தொடர் இதுவாகும். இவரின் தாய் கதாபாத்திரத்தில் நாயகி தொடர் புகழ் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடிக்கின்றார்.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் முதலில் சனவரி 27, 2020 முதல் பிப்ரவரி 14, 2020 ஆம் ஆண்டு வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. தற்பொழுது இந்த தொடர் பிப்ரவரி 17, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு தேன்மொழி பி.ஏ என்ற தொடர் ஒளிபரப்பாகின்றது.

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2020 2.9% 3.5%
2.4% 3.1%
2021 2.2% 3.4%
2.1% 3.5%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "விஜய் தொலைக்காட்சியில் அன்புடன் குஷி". tamil.oneindia.com.
 2. "Vijay TV launches new serial 'Anbudan Kushi'". www.exchange4media.com.
 3. "Daily soap 'Anbudan Kushi' to premiere soon". timesofindia.indiatimes.com.
 4. "Anbudan Kushi set to premiere tonight; Actor Prajin Padmanabhan shares his excitement". timesofindia.indiatimes.com.

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி பிற்பகல் 3 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அன்புடன் குஷி அடுத்த நிகழ்ச்சி
தேன்மொழி பி.ஏ
(26 ஆகத்து 2019 - 15 பிப்ரவரி 2020)
தென்றல் வந்து என்னைத் தொடும்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அன்புடன் குஷி
(27 சனவரி 2020 - 20 பிப்ரவரி 2020)
அடுத்த நிகழ்ச்சி
அரண்மனை கிளி
தேன்மொழி பி.ஏ
(17 பிப்ரவரி 2020 - 27 மார்ச் 2020)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புடன்_குஷி&oldid=3242159" இருந்து மீள்விக்கப்பட்டது