தென்றல் வந்து என்னைத் தொடும் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்றல் வந்து என்னைத் தொடும்
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
உருவாக்கம்சொல் புரோடக்சன்ஸ்
மூலம்கெலகோர்
(வங்காள மொழி தொடர்)
எழுத்துசினேகிஷ் சக்கரவர்த்தி
பழனி பாரதி
இயக்கம்வி.அருணாசலம்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஆர்.ராஜேஷ்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுவி.எஸ் சரவண குமார்
தொகுப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சொல் புரோடக்சன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஹாட் ஸ்டார்
ஒளிபரப்பான காலம்16 ஆகத்து 2021 (2021-08-16) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்அன்புடன் குஷி
தொடர்புடைய தொடர்கள்கெலகோர்

தென்றல் வந்து என்னைத் தொடும் என்பது 16 ஆகத்து 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இது ஸ்டார் ஜல்சா என்ற வங்காள மொழித் தொடரான 'கெலகோர்' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்த தொடரை 'சொல் புரோடக்சன்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் 'ஆர்.ராஜேஷ்' என்பவர் தயாரிக்க, 'வி.அருணாசலம்' என்பவர் இயக்ககத்தில் வினோத் பாபு[3] மற்றும் பவித்ரா ஜனனி[4] ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

கதை சுருக்கம்[தொகு]

இந்த தொடரில் அமெரிக்காவில் படித்து விட்டு வந்த அபிநயாவிற்கு திடீரென தாலி கட்டி அதிர்ச்சி கொடுக்கிறார் வெற்றி அதன் பிறகு என்ன நடக்க போகிறது என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரில் கதாநாயகியாக ஈரமான ரோஜாவே என்ற தொடரில் மலராக நடித்து பிரபலமான பவித்ரா ஜனனி நடிக்கிறார். இவர் கதாநாயகியாக நடிக்கும் இரண்டாவது தொடர் இது ஆகும். இவருக்கு ஜோடியாக நகைச்சுவையாளர் மற்றும் நடிகர் வினோத் பாபு நடிக்கிறார். வினோத் பாபு ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார். அதை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடரான சிவகாமி (2018) மற்றும் விஜய் தொலைக்காட்சி தொடரான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (2019-2021) போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

சர்ச்சை[தொகு]

இந்த தொடரின் முன்னோட்ட காட்சியில்

  • பெற்றோரை எதிர்த்து நடந்த காதல் திருமணம் செல்லாது என கூறி தகராறு செய்கிறார் கதாநாயகன் வெற்றி. அப்போது கதாநாயகியான அபிநயா வந்து அவரை தடுக்க, கோபத்தில் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை அவர் எடுத்து அபி கழுத்தில் போட்டுவிடுகிறார். வெறும் மஞ்சள் கயிறை கட்டினால் போதுமா.. இப்போது நான் உன் புருஷன் ஆகிவிடுவேனா என கோபத்துடன் பேசிவிட்டு போகிறார்

இந்த காட்சியை பார்த்த பல பெண்ணியவாதிகள் மட்டுமின்றி பரவலாக அனைத்து தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.[5][6] இந்த விளம்பர காணொளி காட்டப்படும் காட்சிகள், சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று, திருவள்ளூர் காவல் அதிகாரி எஸ்பி 'வருண் குமார்' ஐபிஎஸ், தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.[7][8][9][10]

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புதிய சீரியலை களமிறக்கும் விஜய் டிவி : ஹீரோ யாருனு பாருங்க". https://tamil.indianexpress.com/entertainment/thendral-vanthu-ennai-thodum-serial-tamil-news-comedy-actor-vinoth-babu-as-a-hero-in-vijay-tvs-news-serial-326295/. 
  2. "என்ன நடக்கப் போகுதோ?.. எதிர்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கும் தென்றல் வந்து என்னைத் தொடும்!". https://tamil.oneindia.com/television/thendral-vandhu-ennai-thodum-serial-to-hit-fans-on-august-16/articlecontent-pf581673-429626.html. 
  3. "Vinoth Babu's wife annouces her pregancy in Mrs.Chinnathirai". 21 July 2021. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/mr-and-mrs-chinnathirai-fame-sindhu-announces-pregnancy-with-a-sweet-post/articleshow/84942188.cms. 
  4. "Eeramana Rojaave to go off-air soon; Pavithra Janani thanks everyone for the love". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/eeramana-rojaave-to-go-off-air-soon-pavithra-janani-thanks-everyone-for-the-love/articleshow/85322537.cms. 
  5. "விஜய் டிவியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! புது சீரியல் டீசர் தான் காரணம்". https://tamil.samayam.com/tv/news/netizens-troll-vijay-tv-for-new-serial-thendral-vanthu-ennai-thodum-teaser/articleshow/84770947.cms. 
  6. "இது பொறுக்கித்தனம், இப்படி ஒரு கெளவமான சீரியலை ஒளிபரப்ப கூடாது – சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவியின் புதிய சீரியல்". https://tamil.behindtalkies.com/vijay-tvs-new-serial-thendral-vanthu-ennai-thodum-upsets-audience/. 
  7. "கட்டாய தாலி கட்டுனா பொண்டாட்டியாம்.. விஜய் டிவி சீரியலால் சர்ச்சை.. போலீஸ் எஸ்.பி. வைத்த "குட்டு"". 29 July 2021. https://tamil.oneindia.com/news/chennai/thendral-vanthu-ennai-thodum-serial-promo-justifying-harassment-of-women-and-varun-kumar-ips-remind-428142.html. 
  8. "Vijay TV serial promo shows forced marriage, Tamil Nadu cop reminds them of law". https://www.hindustantimes.com/india-news/vijay-tv-serial-promo-shows-forced-marriage-tamil-nadu-cop-reminds-them-of-law-101627297314524.html. 
  9. ""இந்த மாதிரிலாம் தாலி கட்டுனா 3 வருஷம் ஜெயில்!".. சீரியல் ப்ரோமோவுக்கு ஐபிஎஸ் Viral ரியாக்‌ஷன்!". https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/tn-ips-viral-tweet-over-thendral-vanthu-ennai-thodum-promo.html. 
  10. "Vijay TV serial promo shows forced marriage, Tamil Nadu cop reminds them of law". https://www.hindustantimes.com/india-news/vijay-tv-serial-promo-shows-forced-marriage-tamil-nadu-cop-reminds-them-of-law-101627297314524.html. 
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி பிற்பகல் 3 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி தென்றல் வந்து என்னைத் தொடும் அடுத்த நிகழ்ச்சி
அன்புடன் குஷி முத்தழகு