ரம்யா பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரம்யா பாண்டியன்
பிறப்புஆகத்து 13, 1990 (1990-08-13) (அகவை 33)[1]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2016 – தற்போதுவரை
உறவினர்கள்அருண் பாண்டியன் (சித்தப்பா)

ரம்யா பாண்டியன் (Ramya Pandian) என்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் ஜோக்கர்,[2] [3] ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். 2020 பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்றி, நான்காவதாக வந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ரம்யா பாண்டியன் அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரிமருத்துவப் பொறியியல் படித்தார் மேலும் வணிக மேம்பாட்டு மேலாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வாளராக பணியாற்றத் தொடங்கினார். [4] இவரது தாய்மொழி தமிழ் ஆகும். [5] இவரது சித்தப்பா நடிகர் அருண் பாண்டியன் ஆவார். இவர் தமிழ் மொழி படங்களில் பணிபுரிகிறார். [6] இவரது பூர்வீகம் திருநெல்வேலி ஆகும்.[7] இவர் கரிம தோட்டக்கலைகளில் ஆர்வம் கொண்டவர். [8]

தொழில்[தொகு]

மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் அந்தப் படம் இடையில் கைவிடப்பட்டது. பின்னர் இவர் குறைந்த செலவில் எடுக்கபட்ட டம்மி டபாசு (2015) படத்தின் மூலம் திரைப்பட நடிப்பில் அறிமுகமானார். [9] [10] ரா ரா ராஜசேகர் குழு இவரை ராஜு முருகனுக்கு பரிந்துரை செய்தது, பின்னர் இவரை ஜோக்கர் (2016) படத்தில் ஒப்பந்தம் செய்தனர். [11] இவர் அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்தார். [12] ஜோக்கரில் ரம்யாவின் பரணிடப்பட்டது 2020-10-09 at the வந்தவழி இயந்திரம் நடிப்பைப் பாராட்டிய சமுத்திரக்கனி ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் தாயாக ஆண் தேவதை (2018) படத்தில் நடிக்க ஆர்வமா என்று கேட்டார் . [7] ரம்யா பரணிடப்பட்டது 2020-10-09 at the வந்தவழி இயந்திரம் கதை கேட்ட பிறகு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். [13] இவர் தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளிஸ், நிகழ்ச்சியில் புகழுடன் இணைந்து தோன்றினார். மேலும் நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாருவில் நடுவராக இருந்தார். [14] [15] [16] [17] [18] குக்கு வித் கோமளி இறுதிச் சுற்றில் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் . [19] [20] இவருடைய வரவிருக்கும் திரைப்படங்களில் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் தயாரித்த ஒரு படத்திலும், சி. வி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் தயாரித்த திரைபடம் ஆகியவை அடங்கும். [21] [22] [23] [24]

திரைப்படவியல்[தொகு]

குறிப்பு
Films that have not yet been released இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள் Ref.
2015 டம்மி டப்பாசு சௌமியா [6]
2016 ஜோக்கர் மல்லிகா [13]
2018 ஆண் தேவதை ஜெசிகா
பெயரிடப்படாத 2 2டி என்டேர்டைன்மென்ட் தயாரிப்புdagger அறிவிக்கப்படும் படப்பிடிப்பில் [21]
பெயரிடப்படாத திருகுமாரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்புdagger அறிவிக்கப்படும் படப்பிடிப்பு

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு பெயர் அலைவரிசை பாத்திரம் குறிப்புகள் Ref.
2019 குக்கு வித் கோமாளி விஜய் தொலைக்காட்சி போட்டியாளர் 3-வதாகத் தெரிவு [14]
2020 கலக்கப்போவது யாரு? (பருவம் 9) நடுவர் [15]
பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர் 4-வதாகத் தெரிவு [25]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Heartwarming gesture by fans leave Ramya Pandian overwhelmed". www.timesofindia.indiatimes.com. 15 August 2020.
  2. "Ramya Pandiyan requests people to fight against Coronavirus". The Times of India. 27 March 2020. Archived from the original on 26 April 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  3. Mohan, M. (8 March 2018). "எந்த சவாளிக்கும் தயார்!" [Ready for any challenge!]. இந்து தமிழ் (நாளிதழ்). பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  4. Lakshmi, V (16 August 2018). "Industry people didn't know I am from here, and it's my fault: Ramya Pandian". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  5. Lakshmi, V (9 September 2019). "There was no concept or idea behind this photoshoot and I'm surprised it has created a stir: Ramya Pandian". The Times of India. Archived from the original on 13 February 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  6. 6.0 6.1 "டம்மி டப்பாசு - முன்னோட்டம்" [Dummy Tappasu – Preview]. Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  7. 7.0 7.1 "Samuthirakani's next, a family Drama". The Times of India. Archived from the original on 7 April 2019. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  8. "தோட்டப்பிரியை ரம்யா பாண்டியன்" [Ramya Pandian is a gardener]. Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  9. "Ramya Pandian gets emotional about receiving unconditional love from fans - Times of India". The Times of India.
  10. Vidhya (13 April 2020). "Ramya Pandian Shares A Picture With This Handsome Gentleman – Guess Who!". Behindwoods. Archived from the original on 13 July 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  11. "Brave moves Guru Samasundaram (above) with Mu Ramaswamy (Left) and Ramya Pandian in Joker". The Hindu. 20 April 2017. Archived from the original on 15 June 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  12. Subramanian, Anupama (14 August 2018). "Ramya's acting and dubbing talent win her cash". Deccan Chronicle. Archived from the original on 27 August 2018. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  13. 13.0 13.1 Lakshmi, V (16 August 2018). "Industry people didn't know I am from here, and it's my fault: Ramya Pandian". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  14. 14.0 14.1 Pandiarajan, M. (26 February 2020). "செந்தமிழ்... சென்னை தமிழ்! - ரம்யா பாண்டியனிடம் 'கலகல' காதலை சொன்ன புகழ் #Video" [Classical Tamil ... Chennai Tamil! - Ramya Pandian and Pugazh, who expressed his love]. Vikatan. Archived from the original on 14 July 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  15. 15.0 15.1 "Comedy show Kalakka Povadhu Yaaru Season 9 to premiere on February 9". The Times of India. 6 February 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  16. "14fr_Tubewatch". https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/14frtubewatch/article30815199.ece. 
  17. "இடைவிடாத நகைச்சுவை!" [Continual humor!]. Hindu Tamil Thisai. Archived from the original on 7 February 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  18. Rajasekhar, Gopinath (26 February 2020). "`புகழ் என்ன பண்ணாலும் க்யூட்!' – ரம்யா பாண்டியன்" [Whatever Pugazh does is cute – Ramya Pandian]. ஆனந்த விகடன். Archived from the original on 13 July 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  19. "'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி நிறைவு: ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி" ['Cook with clown' concludes: Ramya Pandian's adaptability]. Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  20. "'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வெற்றியாளராக வனிதா தேர்வு" [The winner of 'Cook with Comali' is Vanitha]. Hindu Tamil Thisai. Archived from the original on 15 June 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  21. 21.0 21.1 "Ramya Pandian's next two movies backed by biggies". The Times of India. 1 April 2020. Archived from the original on 2 April 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  22. "Ramya Pandian signs two films". Cinema Express. 1 April 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  23. "சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்" [Ramya Pandian in Suriya's Production]. இந்து தமிழ் (நாளிதழ்). 31 March 2020. Archived from the original on 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  24. "Suriya to bankroll Ramya Pandian's upcoming film". India Today. 1 April 2020. Archived from the original on 8 April 2020. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  25. "Bigg Boss Tamil Season 4 launch LIVE UPDATES: Ramya Pandiyan enters house". 4 October 2020.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்யா_பாண்டியன்&oldid=3361769" இலிருந்து மீள்விக்கப்பட்டது