கஸ்தூரி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கஸ்தூரி
பிறப்பு1 மே 1974 (1974-05-01) (அகவை 46)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை, நடனம்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
ரவிக்குமார்

கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆத்தா உன் கோயிலிலே (1991), ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.[1]

இளமைக்காலம்[தொகு]

இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் மே 1, 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் சென்னையில் படித்து முடித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்.[2] இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.[3]

ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர்.[4][5] கஸ்தூரி சிறிது காலம் திரைத்துறையிலிருந்து விலகியிருந்தாலும் தி பைபாஸ் என்னும் இந்தி குறும்படத்திலும், 2010இல் தமிழ் படத்தின் வாயிலாகம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.[6]

நடித்த படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1991 ஆத்தா உன் கோயிலிலே கஸ்தூரி தமிழ்
சக்கரவர்த்தி பிரசீதா மலையாளம்
ராசாத்தி வரும் நாள் இராதா தமிழ்
1992 சின்னவர் மீனா தமிழ்
செந்தமிழ்ப் பாட்டு சண்மதி தமிழ்
உரிமை ஊஞ்சலாடுகிறது உமா தமிழ் நிந்து சம்சாரம் (தெலுங்கு)
அபிராமி தனம் தமிழ்
கவர்மெண்ட் மாப்பிள்ளை மல்லரியா தமிழ்
கேங் வார் தெலுங்கு
காட் பாதர் தெலுங்கு
1993 ஆத்மா தமிழ்
ராக்காயி கோயில் தமிழ்
பாஸ் மார் தமிழ்
புதிய முகம் தமிழ் மதிப்புறுத்தோற்றம்
நிப்பு ரவ்வா பாரதி தெலுங்கு
உடன் பிறப்பு சுமதி தமிழ்
எங்க முதலாளி கல்யாணி தமிழ்
1994 அமைதிப்படை தாயம்மா தமிழ்
தென்றல் வரும் தெரு நளினி தமிழ்
ஜானா கஸ்தூரி கன்னடம்
ராஜபாண்டி பொன்னுத்தாயி தமிழ்
ஆகாயப்பூக்கள் தமிழ்
வாட்ச்மேன் வடிவேல் தமிழ்
1995 அனியன் பவா சேட்டன் பவா அம்மு மலையாளம்
சிந்துபாத் தமிழ் தெலுங்கில் கஜூல ராமையா
சின்னமணி சின்னமணி தமிழ்
கோலங்கள் உமா தமிழ்
அகரஜன் சிறீதேவி மலையாளம்
ரோதோல்சவம் மலையாளம்
1996 இப்பர நடுவே முடின்னா ஆட்டா கன்னடம்
இந்தியன் கஸ்தூரி தமிழ்
கிருஷ்ணா தமிழ்
சோக்கடி பெல்லம் தெலுங்கு
மெருப்பு பிரேமா தெலுங்கு
1997 சில்லோகொட்டுது கஸ்தூரி தெலுங்கு
அன்னமய்யா அக்கலம்மா தெலுங்கு
மா ஆயன பங்காரம் தெலுங்கு
1998 மாங்கல்ய பல்லக்கு சீதாலக்சுமி மலையாளம்
துட்டா முட்டா டாக்டர் சீமா கன்னடம்
ஒன் மேன் ஆர்மி கன்னடம்
சினேகம் இராதிகா மலையாளம்
காதல் கவிதை கஸ்தூரி தமிழ்
1999 சுயம்வரம் உமா தமிழ்
ஹப்பா கன்னடம்
லேடிஸ் ஸ்பெசல் தமிழ்
பஞ்சபாண்டவர் நந்தினி மலையாளம்
2001 ஆகாச வீதிலோ பத்மா தெலுங்கு
தோஸ்த் தமிழ் சிறப்புத்தோற்றம்
எங்களுக்கும் காலம் வரும் பூஜா தமிழ்
பிரேமக்கே சாய் வேதா கன்னடம்
2002 மச்சக்கன்னி தமிழ்
2002 அதீனா தமிழ்
2003 தி பைபாஸ் வுமன் இன் ஜீப் இந்தி குறும்படம்
2009 மலை மலை இலக்சுமி தமிழ்
2010 தமிழ் படம் தமிழ் சிறப்புத்தோற்றம்
குடு குடு குஞ்சம் பல்லீசுவரி தெலுங்கு
டான் சீனு இலக்சுமி தெலுங்கு
2011 பதினாறு இளவரசி தமிழ் மதிப்புறுத்தோற்றம்
தூங்கா நகரம் தமிழ் சிறப்புத்தோற்றம்
2012 நாங்க தமிழ்
2013 அழகன் அழகி தமிழ் சிறப்புத்தோற்றம்
நான் ராஜாவாகப் போகிறேன் பாரதி தமிழ்
2014 வடகறி சதீசின் உறவுப்பெண் தமிழ்
நான் பொண்ணு ஒன்று கண்டேன் தமிழ் சிறப்புத்தோற்றம்
காதல் 2 கல்யாணம் தமிழ்
2017 அன்பானவன் அசராதவன் அடங்காதவன் முகவர் ரூபி தமிழ்
சாமந்தகாமனி கிருஷ்ணாவின் தாய் தெலுங்கு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தூரி_(நடிகை)&oldid=3051725" இருந்து மீள்விக்கப்பட்டது