ரைசா வில்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரைசா வில்சன்
பிறப்பு1 சனவரி 1989 (1989-01-01) (அகவை 32) பெங்களூர், கர்நாடகம்.
இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்சிந்துஜா
படித்த கல்வி நிறுவனங்கள்நாசரேத் கான்வென்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஊட்டி, ஜெ. எஸ். எஸ். சர்வதேச பள்ளி, ஊட்டி,
பணிவிளம்பரம் மற்றும் திரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2016 முதல் தற்போது வரை

ரைசா வில்சன் (Raiza Wilson), ஒரு இந்திய விளம்பர மாதிரி மற்றும் நடிகை. கமல்ஹாசனால் நடத்தப்பட்ட பிக் பாஸ் என்ற தமிழ் தொலைக்காட்சியின் நேரடி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதைத் தொடர்ந்து இவர் புகழ்பெற்றார்.[1]

தொழில்[தொகு]

ரைசா வில்சன் தனது பள்ளிப் படிப்பினை, நாசரேத் கான்வென்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் ஊட்டி நகரில் உள்ள ஜே.எஸ்.எஸ். சர்வதேசப் பள்ளியிலும் படித்தார். பின்னர் பெங்களூரில் கல்லூரிக்குச் சென்றார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, பெங்களூரில் உள்ள ஹின்ட் லாங்ஜ் மற்றும் கிளப்பின் , விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் மேலாளராகப் பணிபுரிந்தார்.[2] மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட பிறகு, 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வில்சன் மிஸ் இந்தியா தெற்கு 2011 போட்டியில் போட்டியிட்டு, ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல்" விருதைப் பெற்றார்.[3][4] தமிழ்த் திரைப்படமான வேலையில்லா பட்டதாரி 2 (2017) திரைப்படத்தில் ரைசா வில்சன் முதல் முறையாக நடித்துள்ளார். அதில், காஜோல் நடித்த வசுந்தரா பரமேஷ்வர் என்ற கதாபாத்திரத்தின் தனிப்பட்ட உதவியாளராக இவர் நடித்துள்ளார்.[5][6]

2017இன் நடுப்பகுதியில், பிக் பாஸ் (தமிழ்) - சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். 63 நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த செயல்முறைகளில் நீண்ட காலமாக இருந்த அசல் பெண் போட்டியாளர் ஆனார். அந் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின்னர், வில்சன் ஒரு பேட்டியில் "நிகழ்ச்சியின் ஒரு பாகமாக ஆகிவிட்டார்" எனவும் “எப்போதும் அந்த நிகழ்ச்சியைத் தான் நினைத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்”.[சான்று தேவை] பியார் ப்ரேமா காதலில் முன்னணி கதாபாத்திரத்தில் ரைசா நடித்துள்ளார், அதில் அவர் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணுடன் இணையாக நடித்துள்ளார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைசா_வில்சன்&oldid=2778097" இருந்து மீள்விக்கப்பட்டது