காயத்திரி ரகுராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காயத்திரி ரகுராம்
பிறப்பு23 ஏப்ரல் 1984 (1984-04-23) (அகவை 35)
சென்னை
பணிநடிகை, நடன அமைப்பாளர், அரசியல்வாதி
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002–தற்பொழுது வரை

காயத்ரி ராகுராம் (Gayathri Raguramm) தென்னிந்திய திரைப்படத் துறையில் பணிபுரிந்த ஒரு இந்திய நடனக் கலைஞர் மற்றும் நடிகை ஆவார். பிரபலமான நடன இயக்குனரான ரகுராம் அவர்களின் மகள். காயத்ரி 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஒரு நடிகையாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார், சில வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் 2008 இல் திரைப்படங்களில் நடன அமைப்பு செய்யத் தொடங்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராம் ஆகிய நடன அமைப்பாளர் தம்பதிகளுக்கு இரண்டாவது மகளாக பிறந்தார் காயத்திரி.[1] அவரது மூத்த சகோதரி சுஜா ஒரு முன்னணி நடனக் கலைஞர் ஆவார். இவரது அக்காவும் முன்பு நடிகையாக பணிபுரிந்தார்.[2] இயக்குனர் கே. சுப்ரமணியம் அவர்களின் கொள்ளு பேத்தி ஆவார். இவரது தாயார் கிரிஜா அவர்களும் நடனக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அம்மாவில் தங்கைகளில் இருவர் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்கள் கலா மற்றும் பிருந்தா.[3] 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கலிபோர்னியாவில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் உடன் காயத்ரி திருமணம் செய்தார். பின்னர் திசம்பர் 2006இல் தமிழ்நாட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். அதில் பலதமிழகத்தைச்சேர்ந்த நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர். 2008 இல், தீபக் மற்றும் அவரது பெற்றோர்கள் தன்னை கொடுமை செய்ததாக கூறி அதன் அடிப்படையில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். விவாகரத்து 2010 இல் வழங்கப்பட்டது.[4]

நவம்பர் 2015 இல், காயத்ரி தமிழ்நாட்டில் கலைகளுக்கான பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பி.ஜே.பி தலைவர் அமித் ஷா முன்னிலையில் 2014 ஆம் ஆண்டில் கட்சியில் சேர்ந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". பார்த்த நாள் 18 July 2018.
  2. "Suja Manoj - Film Connection Students". பார்த்த நாள் 18 July 2018.
  3. "Archived copy". பார்த்த நாள் 30 November 2013.
  4. "Gayathri Ragurama's marriage on the rocks?". பார்த்த நாள் 18 July 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்திரி_ரகுராம்&oldid=2725913" இருந்து மீள்விக்கப்பட்டது