சினேகன் (Snehan) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகருமாவார்.[1][2].2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.[3] விவசாயக் குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்த இவருக்கு 6 மூத்த சகோதரர்களும் ஒரு மூத்த சகோதரியும் உள்ளனர். இடைநிலை ஆசிரியரான இவர் 2000-ஆம் ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடலாசிரியரானார். 2009 ஆம் ஆண்டில் யோகி என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.