சரவணன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரவணன்
Saravanan
பிறப்புசரவணன்
10 அக்டோபர் 1966 (1966-10-10) (அகவை 54)
இந்தியா, சேலம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991–1998 (முன்னணி நடிகர்)
2001–தற்பொதுவரை (துணை நடிகர்)
பிள்ளைகள்1

சரவணன் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். [1] இவர் 1991 முதல் 1998 வரை முன்னணி நடிகராக இருந்தார்.

குடும்பம் மற்றும் துவக்ககால வாழ்க்கை[தொகு]

சரவணன் சேலத்தில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். மொத்தம் ஐந்து குழந்தைகளில் இவர் இரண்டாவது பிள்ளையாவார். இவரது தந்தை காவல்துறை கண்காணிப்பாளராவார். இவரது தாய் ஒரு செவிலியராவார். சரவணன் சேலம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [2] கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள இவர் பல கவிதைகளை எழுதியுள்ளார். பின்னர் சென்னை சென்று அடையாறு திரைப்படக் கல்லூரியில் நடிப்புக் கல்வி பயின்றர். இவர் 1996 இல் சூரியசாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

தொழில்[தொகு]

1990 களில் சரவணன் தொடர்ச்சியாக முன்னணி வேடங்களில் நடித்தார், ஆனால் தசாப்தத்தின் பிற்பகுதியில் இவரது திரைப்பட வாழ்க்கை நின்றுபோனது. [3] இவர் தாயுமனவன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார் .

சிறிது காலத்திற்கு பிறகு அமீரின் பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக நடித்துத்து, விமர்சன ரீதியான பாராட்டையும் , தமிழில் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார் . இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதையும் பெற்றார். [4] [5] பருதிவீரனின் வெற்றிக்குப் பின்னர் வெங்கடேச பண்ணையாரின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சஞ்சய் ராமால் எடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான வீரமும் ஈரமும் படத்தில் நடிப்பது உள்ளிட்ட பல வாய்ப்புகளைப் பெற்றார். [6]

அண்மையில் இவர் பிக் பாஸ் தமிழ் 3 இல் 6 வது போட்டியாளராக நுழைந்தார்.

திரைப்பட வரலாறு[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1991 வைதேகி வந்தாச்சு
1992 பொண்டாட்டி ராஜ்ஜியம் கிருஷ்ணன்
1992 அபிராமி சரவணன்
1993 மாமியார் வீடு அரவிந்த்
1993 சூரியன் சந்திரன் மருது
1993 பெற்றெடுத்த பிள்ளை குமார்
1993 நல்லதே நடக்கும் பிரகாஷ்
1993 பார்வதி என்னை பாரடி சிவா
1993 அக்கரைச் சீமையிலே பிரகாஷ்
1993 முத்துபாண்டி
1994 வீட்டைப் பாரு நாட்டைப் பாரு
1994 செவத்த பொண்ணு செல்லப்பா
1994 தாய் மனசு சின்ன மருது
1996 திரும்பிப்பார் வீரையன்
1996 விஸ்வநாத் விஸ்வநாத்
1997 தம்பி துரை
1998 சந்தோசம் இந்திரன்
1998 பொன்மானைத் தேடி சுந்தரம்
2001 நந்தா துரை
2003 தாயுமானவன் இயக்குநராகவும்
2007 பருத்திவீரன் செவ்வாழை பிளிம்பேரின், சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு தேர்வு

சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதுகளுக்கு தேர்வு
2007 வீரமும் ஈரமும் சர்கர் ஐயா
2009 அழகர் மலை சிறப்புத் தோற்றம்
2009 பிஞ்சு மனசு துளசி
2010 விலை டிசிபி சண்முகவேல்
2011 தம்பி வெட்டோத்தி சுந்தரம் சாலை
2012 ஆரஞ்ச் தேவர் மலையாளத் திரைப்படம்
2013 அலெக்ஸ் பாண்டியன் பார்த்திபன்
2013 கீறிபுள்ள நாகா
2014 அரண்மனை அய்யனார்
2016 மீனாட்சி காதலன் இளங்கோவன் ஏ. சாமி
2016 சௌகார்பேட்டை சீனியர்
2016 எனக்கு இன்னொரு பெயர் இருக்கு "நைனா" தாஸ்
2017 பண்டிகை முனி
2018 கடைக்குட்டி சிங்கம்

தாமரை மணாள செண்டையார்

2018 கோலமாவு கோகிலா காவல் ஆய்வாளர் குரு
2019 100 கணேஷ்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு நிரல் / காட்சி பங்கு அலைவரிசை மொழி குறிப்புக்கள்
2019 பிக் பாஸ் தமிழ் 3 பங்கேற்பாளர் விஜய் தொலைக்காட்சி தமிழ் ரியாலிட்டி டிவி தொடர்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவணன்_(நடிகர்)&oldid=3051729" இருந்து மீள்விக்கப்பட்டது