பிந்து மாதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்து மாதவி
Bindu-Madhavi.jpg
பிறப்புசூன் 14, 1986 (1986-06-14) (அகவை 36)
மதனப்பள்ளி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா,
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008 – தற்போதுவரை

பிந்து மாதவி (தெலுங்கு: బిందు మాధవి) ஒர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தொழில்[தொகு]

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி.[1] அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், அவரது சிறுவயதில் திருப்பதி, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஹைதராபாத் எனப் பல நகரங்களில் வசித்தார்.[1] பின்னர் சென்னையில் நிரந்தரமாக அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கிய போது அங்கு பிந்து மாதவி படித்தார்.[2] வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.[1][3]

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார்.[1][2] டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்தது, இவர் தெலுங்கு திரைப்பட உலகுக்குள் நுழைய உதவியது.[1][4] இவரது பெற்றோர் இவர் திரைப்பட நடிகையாவதை விரும்பவில்லை.[5] தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.[4] அதைத் தொடர்ந்து மேலும் இரு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.[3]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
2008 பொக்கிஷம் தமிழ்
2008 ஆவக்காய் பிர்யாணி லட்சுமி ஜந்தியாலா தெலுங்கு
2009 பம்பர் ஆஃபர் ஐஸ்வர்யா தெலுங்கு
2010 ஓம் சாந்தி நூரி தெலுங்கு
2010 ராம ராம கிருஷ்ண கிருஷ்ண நந்து தெலுங்கு
2010 பிரதி ரொஜு (Prathi Roju) பானு தெலுங்கு
2011 வெப்பம் விஜி தமிழ்
2011 பில்லா ஜமீந்தார் அம்ருதா தெலுங்கு
2012 கழுகு (2012) கவி தமிழ்
2013 தோழன் தமிழ் படப்பிடிப்பில்
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா மித்ரா மீனலோசினி தமிழ்
2013 தேசிங்கு ராஜா தாமரை தமிழ்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் கல்யாணி தமிழ்
2013 இது பூக்களின் தேசம் தமிழ் தயாரிப்பு துவக்கத்துக்கு முந்தின நிலையில்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Bindu Madhavi interview – Telugu Cinema interview – Telugu film actress". Idlebrain.com. 2008-11-03. 2012-06-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Exclusive Interview With Bindu Madhavi – Interviews". CineGoer.com. 2009-07-13. 2012-09-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-01 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 Vishnupriya Bhandaram (2011-08-02). "Life & Style : No looking back for her". The Hindu. 2012-08-01 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 Sreedhar Pillai, TNN Nov 9, 2010, 12.00am IST (2010-11-09). "Veppam to give Bindu a break – Times Of India". Timesofindia.indiatimes.com. 2012-08-01 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: multiple names: authors list (link)
  5. "If You're Willing, She's Reddy | T.S. Sudhir". Outlookindia.com. 2012-08-01 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்து_மாதவி&oldid=3563371" இருந்து மீள்விக்கப்பட்டது