உன்னைப்போல் ஒருவன் (2009 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உன்னைப் போல் ஒருவன்
இயக்குனர்சக்ரி டொலெட்டி
தயாரிப்பாளர்கமலஹாசன்
எஸ். சந்திரஹாசன்
ரொனி ஸ்க்ரூவாலா
கதைநீராஜ் பாண்டே
கமலஹாசன்
ஈ.ஆர்.முருகன்
இசையமைப்புசுருதி ஹாசன்
நடிப்புகமலஹாசன்
மோகன்லால்
பாரத் ரெட்டி
லட்சுமி
கணேஷ் வெங்கட்ராமன்
அனுஜா ஐயர்
சிறிமன்
சந்தன பாரதி
எம். எஸ். பாஸ்கர்
ஒளிப்பதிவுமனோஜ் சோனி
படத்தொகுப்புரமேஷ்வர் எஸ். பகத்
விநியோகம்ராஜ்கமல் இன்டர்நசனல்
யூடிவி மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு18 செப்டம்பர் 2009
கால நீளம்106 நிமி
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்30 கோடி 57 கோடவஉலகளாவிய[1]

உன்னைப் போல் ஒருவன் 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். சக்ரி டோலட்டியால் இயக்கப்பட்டு கமலஹாசன் மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ஒரு வெற்றிப் படம். இது நீராஜ் பாண்டே இயக்கத்தில் 2008 இல் வெளியான எ வென்னஸ்டே (A wednesday) என்ற இந்தித் திரைப்படத்தின் தழுவல் ஆகும்.[2]

கதைச் சுருக்கம்[தொகு]

சென்னை காவல்துறை ஆணையரான ராகவ மராருக்கு (மோகன்லால்) மர்ம நபர் ஒருவர் போன் செய்கிறார் (கமல ஹாசன்). அந்த பெயர் கூறாத மர்ம நபர் சென்னை நகரத்தில் 5 இடத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டு வைத்துள்ளதாக கூறுகிறார். அவர் கோரிக்கையான 4 தீவிரவாதிகளை குறிப்பிட்ட இடத்தில் விடுவிக்க வேண்டுமெனவும் இல்லையெனில் குண்டுகள் வெடிக்கும் எனவும் கூறுகிறார். இறுதியில் 4 தீவிரவாதிகளும் காவல் துறை அதிகாரிகளான ஆரிஃப் கான் (கணேஷ் வெங்கட்ராமன்) மற்றும் சேதுராமன் (பாரத் ரெட்டி) ஆகியோரின் பாதுகாப்புடன் மர்ம நபர் குறிப்பிட்ட இடமான விமான நிலையத்தில் விடுவிக்கப்படுகின்றனர். அதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அதற்கான காரணங்களும்தான் கதையின் முடிவு.

கதா பாத்திரங்கள்[தொகு]

  • கமல ஹாசன் - பெயரிலி / மர்ம தொலைபேசி அழைப்பாளர் / சாதாரண மனிதன்
  • மோகன் லால் - ராகவ மரார்
  • கணேஷ் வெங்கட்ராமன் - ஆரிஃப் கான்
  • பாரத் ரெட்டி - சேது ராமன்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilfms.com/2009/09/unnai-pol-oruvan-box-office-collectiopn.html
  2. https://cinema.vikatan.com/tamil-cinema/a-tribute-to-unnaipol-oruvan-on-its-10th-year-anniversary