உள்ளடக்கத்துக்குச் செல்

சுரேஷ் கோபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேஷ் கோபி
2024 இல் சுரேஷ் கோபி
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பதவியில்
பதவியில்
11 ஜூன் 2024
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்ஹர்தீப் சிங் பூரி
முன்னையவர்இராமேஷ்வர் தெலி
சுற்றுலாத் துறை அமைச்சகம்
பதவியில்
பதவியில்
11 ஜூன் 2024
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்கஜேந்திர சிங் செகாவத்
முன்னையவர்ஸ்ரீபாத் யசோ நாயக், அஜய் பட்
18வது மக்களவையின் இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
4 ஜூன் 2024
முன்னையவர்டி. என். பிரதாபன்
தொகுதிதிருச்சூர்
பதவியில்
29 ஏப்ரல் 2016 – 24 ஏப்ரல் 2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 சூன் 1958 (1958-06-26) (அகவை 66)
ஆலப்புழா, கேரளம், இந்தியா[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
ராதிகா நாயர் (தி. 1990)
பிள்ளைகள்நடிகர் கோகுல் உட்பட 5 [note 1]
பெற்றோர்கே. கோபிநாதன் பிள்ளை (தந்தை)
ஞானலட்சுமி (தாயார்) [2]
உறவினர்ஆறன்முளா பொன்னம்மா (மனைவியின் பாட்டி)
வாழிடம்(s)திருவனந்தபுரம், கேரளம்
கல்விகேரளப் பல்கலைக்கழகம்
வேலை
விருதுகள்தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா
கேரள மாநில திரைப்பட விருதுகள்
சுரேஷ் கோபி
செயற்பாட்டுக்
காலம்
1965, 1986–தற்போது வரை

சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி (Suresh Gopi) என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் சூன் 26, 1960ல் பிறந்தார்.[3] இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ் என நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.

அரசியல்

[தொகு]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது அமைச்ச்ரவையில் சுற்றுலாத் துறை இணை அமைச்சராக பொறுபேற்ற சுரேஷ் கோபி

அக்டோபர் 2016 இல், சுரேஷ் அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[4] இந்தியக் குடியரசுத் தலைவரால் புகழ்பெற்ற குடிமக்கள் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட சுரேஷ் கோபி 29 ஏப்ரல் 2016 அன்று, நாடாளுமனற்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.[5][6] இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்டமாகத் தேர்ந்தெடுத்தார்.[7] மே 2016 இல், அவர் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிலைக்குழுவிலும் மற்றும் இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். 2019 முதல் 2022 வரை, பழங்குடியினர் தொடர்பான அமைச்சகம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[8]

2019 இல் நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் கேரளாவில் பாஜக வேட்பாளராக திருச்சூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.[9] இவர் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளர் டி. என். பிரதாபன் மற்றும் இந்தியப் பொதுவுடைமை கட்சி (சிபிஐ) வேட்பாளர் ராஜாஜி மேத்யூ தாமஸ் (இரண்டாவது இடம்) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவர் 293,822 வாக்குகளைப் பெற முடிந்தது. இது முந்தைய தேர்தலில் பாஜக்வின் வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.[10]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட தன்னைக் கேட்டுக் கொண்டதாக கூறி 2021 ஆம் ஆண்டில், 2021 ஆம் ஆண்டு கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் கேரள சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.[11] இவர் திருச்சூர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். இருப்பினும், இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (சிபிஐ) P. பாலச்சந்திரனிடம் தோற்றார். மொத்தம் 40,457 வாக்குகளைப் பெற்று காங்கிரசு வேட்பாளர் பத்மஜா வேணுகோபாலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு வந்தார்.[12]

மார்ச் 2024 இல், இவர் 2024 இந்தியப் பொதுத் தேர்தலுக்கான திருச்சூர் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலில் 74,000 வாக்குகளுக்கு மேல் பெரும்பான்மையுடன் தொகுதியை வென்றார். கேரளாவிலிருந்து முதல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைவை உறுப்பினர் ஆனார்.[13][14][15][16][17]

தேர்தல் வருடம் கட்சி தொகுதி முடிவுகள் வித்தியாசம் வாக்கு சதவீதம்(%)
மக்களவை 2019 பாரதிய ஜனதா கட்சி திருச்சூர் மக்களவைத் தொகுதி தோல்வி 1,21,267 28.19
கேரள சட்டமன்றம் 2021 பாரதிய ஜனதா கட்சி திருச்சூர் சட்டமன்றத் தொகுதி தோல்வி 3,806 31.30
மக்களவை 2024 பாரதிய ஜனதா கட்சி திருச்சூர் மக்களவைத் தொகுதி வெற்றி 74,686 37.80

சொந்த வாழ்க்கை

[தொகு]

8 பெப்ரவரி 1990யில்[18] சுரேஷ் நடிகை ஆறன்முளா பொன்னம்மாவின் பேத்தி ராதிகா என்பவரை மணந்தார். இவர்களுக்கு இவருக்கு கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ் என நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மகள் லட்சுமி ஒன்றரை வயதில் ஒரு விபத்தில் இறந்தார்.[19] சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார்.[20][21] இவரது மகன் கோகுல் என்பவரும் மலையாளத் திரைப்படங்களில் ஒரு நடிகராக உள்ளார்.[22][23]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Suresh Gopi asked to focus more in Thiruvananthapuram". 12 April 2017.
  2. https://sansad.in/rs/members/biography/2323
  3. http://www.goprofile.in/2017/04/Suresh-Gopi-Profile-family-wiki-Age-Affairs-Biodata-Height-Movie-list-Weight-Wife-Biography.html?m=1
  4. Chatterjee, Arunava. "Malayalam Superstar Suresh Gopi Makes It Official, Joins BJP". என்டிடிவி இம் மூலத்தில் இருந்து 26 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161226215224/http://m.ndtv.com/india-news/in-kerala-bjp-scores-superstar-suresh-gopi-the-honest-cop-of-films-1476308. 
  5. "Suresh Gopi sworn in as Rajya Sabha MP; becomes first RS nominated actor from Kerala". International Business Times. 30 April 2016. Archived from the original on 25 June 2016. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
  6. Correspondent, D. C. (2016-04-30). "Actor Gopi takes oath as Rajya Sabha member". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
  7. Binu, V. V. (8 November 2016). "Mohanlal teams up with Suresh Gopi; 'Kireedam' village to get a facelift". மலையாள மனோரமா இம் மூலத்தில் இருந்து 4 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190404171632/https://english.manoramaonline.com/news/kerala/mohanlal-suresh-gopi-model-village-scheme-kireedam.html. 
  8. தேசியத் தகவல் மையம் (இந்தியா). "Shri Suresh Gopi - Member's Bio-Profile". Sansad. பார்க்கப்பட்ட நாள் 3 June 2024.
  9. "BJP fields Malayalam star Suresh Gopi from Thrissur". பிசினஸ் ஸ்டாண்டர்ட் (India). 3 April 2019 இம் மூலத்தில் இருந்து 3 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190403114549/https://www.business-standard.com/article/news-ians/bjp-fields-malayalam-star-suresh-gopi-from-thrissur-119040300597_1.html. 
  10. "Suresh Gopi flick fails to click". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2019-05-24. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.
  11. Time News Network (19 March 2021). "Kerala Election 2021: Suresh Gopi files nomination, says PM Modi told him to contest". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/kochi/kerala-election-2021-suresh-gopi-files-nomination-says-pm-modi-told-him-to-contest/articleshow/81581930.cms. 
  12. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". இந்தியத் தேர்தல் ஆணையம். 2 May 2021. பார்க்கப்பட்ட நாள் 3 June 2024.
  13. "BJP to contest in 12 LS seats in Kerala: Suresh Gopi in Thrissur, Rajeev Chandrasekhar in TVM". English.Mathrubhumi (in ஆங்கிலம்). 2024-03-02. பார்க்கப்பட்ட நாள் 2024-03-04.
  14. "Lok Sabha election results: BJP makes Lok Sabha debut in Kerala as Suresh Gopi wins in Thrissur". Financialexpress (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  15. "Thrissur LS Election Result 2024: Thumping victory for Suresh Gopi". www.onmanorama.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  16. "Suresh Gopi: All You Need to Know About Malayalam Actor Behind BJP's Entry Into Kerala". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  17. "Congress' Thrissur dilemma: Where did 10% votes go?". www.onmanorama.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-10.
  18. "Shri Suresh Gopi". Rajyasabha.nic.in. மாநிலங்களவை. 29 April 2016. Archived from the original on 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  19. "Mollywood celebs and their less famous spouses". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011214843/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/photo-features/mollywood-celebs-and-their-less-famous-spouses/photostory/48670217.cms. 
  20. "Suresh Gopi, Shri". India.gov.in. National Portal of India. 29 April 2016. பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
  21. India Today Online (21 June 2012). "Malayalam actor Suresh Gopi's mother dies". இந்தியா டுடே இம் மூலத்தில் இருந்து 4 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190404172035/https://www.indiatoday.in/movies/celebrities/story/malayalam-actor-suresh-gopi-mother-dies-106455-2012-06-21. 
  22. "Mudhugauv fame Gokul is Suresh Gopi's son". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011214846/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/did-you-know. 
  23. "Pranav Mohanlal meets up Suresh Gopi's son Gokul". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 8 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191008195406/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/pranav-mohanlal-meets-up-suresh-gopis-son-gokul/articleshow/61362226.cms. 

குறிப்புகள்

[தொகு]
  1. லட்சுமி என்ற குழந்தை உயிரிழந்தது.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Suresh Gopi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_கோபி&oldid=4004587" இலிருந்து மீள்விக்கப்பட்டது