செம்பருத்தி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செம்பருத்தி
செம்பருத்தி (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை காதல்
நாடகம்
இயக்கம் ராம் குமாரதாஸ்
கே. சுலைமான்
திரைக்கதை சபரிநாதன்
நடிப்பு
முகப்பிசைஞர் கிரண்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பு எம். ஜமால்
தொகுப்பு சி. சஜின்
ஒளிப்பதிவு கே.சி.ரமேஷ் - வி. சாய் ராகு
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 16 அக்டோபர் 2017 (2017-10-16)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

செம்பருத்தி என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் அக்டோபர் 16 2017 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழி தொடரான முத்த மந்தரம் என்ற தொடரின் கதை அம்சத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் மற்றும் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானா நடிக்கின்றனர்.[1][2] இந்த தொடர் தமிழ் மக்களால் அதிகம் பார்க்கப்படும் சிறந்த 5 தொடர்களுக்குள் முதன்மையானதாக இருந்து வருகிறது.

கதைச் சுருக்கம்[தொகு]

அகிலா என்ற பணக்காரப் பெண்மணியின் மகன் ஆதித்யா, பார்வதி என்ற வேலைக்காரப் பெண் மீது கொண்ட காதலினால் ஏற்படும் திருப்பங்களையும்,அவர்களுக்கு இடையே உள்ள காதல் நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்ட ஒரு குடும்பத் தொடர் ஆகும். இது முத்த மந்தாரம் என்ற தெலுங்கு தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட்ட தொடர் ஆகும்.

நடிகர்கள்[தொகு]

முக்கியகதாபாத்திரம்[தொகு]

துணைக்கதாபாத்திரம்[தொகு]

 • ரஷிமா ராஜு - சுந்தரம்
 • ஜனனி அசோக் குமார்- ஐஸ்வர்யா
 • சஞ்சய் குமார் - புருஷோத்தமன்
 • கதிர் - அருண்
 • லட்சுமி - வனஜா
 • ஷியாம் - ஷியாம்
 • ஜெனிஃர் - உமா
 • மௌனிகா - நந்தினி
 • பாரதா நாயுடு - மித்ரா
 • சஞ்சய் - கணேஷன்
 • பிரதீப் - ரகு

மறுதயாரிப்பு[தொகு]

இது ஒரு தெலுங்கு மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பு எனினும் இவ் தொடர் தமிழிருந்து மலையாளம் மற்றும் கன்னடம் மொழிக்கு மறுதயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே தருணம் இந்த தொடரின் பல காட்சிகள் தமிழ் நேயர்களுக்கேட்ப மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொழி தலைப்பு அலைவரிசை ஆண்டு
தெலுங்கு முத்த மந்தரம் ஜீ தெலுங்கு 2017
தமிழ் செம்பருத்தி ஜீ தமிழ் 16 அக்டோபர் 2017
மலையாளம் செம்பருத்தி ஜீ கேரளம் 25 நவம்பர் 2018
கன்னடம் பாரு ஜீ கன்னடம் 3 டிசம்பர் 2018

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த தொடர் செம்பருத்தி பரிந்துரை
சிறந்த நடிகர் கார்த்திக் ராஜ் பரிந்துரை
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[3] சிறந்த தொடர் செம்பருத்தி வெற்றி
சிறந்த கற்பனை தொடர் செம்பருத்தி பரிந்துரை
விருப்பமான கதாநாயகி சபானா வெற்றி
விருப்பமான கதாநாயகன் கார்த்திக் ராஜ் வெற்றி
சிறந்த நடிகை சபானா பரிந்துரை
சிறந்த நடிகர் கார்த்திக் ராஜ் பரிந்துரை
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் கதிர்வேல் பரிந்துரை
சிறந்த ஜோடி கார்த்திக் & சபானா பரிந்துரை
சிறந்த அம்மா பிரியா ராமன் வெற்றி
சிறந்த அப்பா நரசிம்மா வெற்றி
சஞ்சய் பரிந்துரை
சிறந்த துணை நடிகை ஜானகி பரிந்துரை
மௌனிகா பரிந்துரை
சிறந்த துணை நடிகர் கதிர்வேல் வெற்றி
சிறந்த வில்லி லட்சுமி வெற்றி
2018 மைலாப்பூர் அகாடமி விருதுகள் சிறந்த தொடர் செம்பருத்தி வெற்றி
சிறந்த நடிகர் கார்த்திக் ராஜ் பரிந்துரை
2019 விகடன் சின்னத்திரை விருதுகள் சிறந்த தொடர் செம்பருத்தி வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 9 மணிக்கு
Previous program செம்பருத்தி Next program
தலையணைப் பூக்கள் N/A