பேச்சு:ஜீ தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

மதன், கட்டுரையின் தலைப்பை மாற்ற வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை, பொதுவாக Zee என்பது ஜீ அன்று என்பதை அனைவரும் அறிவோம். காற்றொலி சகரம் போன்ற ஒலி வர ஃசீ என்று எழுதலாம். பலரும் xerox என்னும் உலர்படி எடுக்கும் முறையை ஜெராக்ஸ் என்று எழுதுகின்றனர். இதனை செராக்சு என்றோ ஃசெராக்சு என்றோ ஃசெராக்ஃசு என்றோ எழுதலாம். பொதுவாக காற்றொலி சகரம் கட்டாயம் வர வேண்டும் எனில் அங்கு ஃச என்று இடலாம்.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

என்று திருக்குறளில் வரும் கஃசு = காற்பலம் என்பதைக் kahssuஅல்லது kaxzu என்பது போல ஒலிக்க வேண்டும். எனவே ஃசா என்பது காற்றொலி சகரத்தைக் குறிக்கப் பயன்படுத்தலாம். திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நூலிலும் ஓரிடத்தில் பார்த்திருக்கின்றேன். குறிப்பாக இது வல்லின ஒற்றுக்குப் பின் காற்றொலி சகரம் வரும் இடங்களில் பெரிதும் பயன்படு. ஆக்ஃசுபோர்டு, பீட்ஃசா (pizza என்பதைப் peetzaa என்பது போலவே இங்கு வட அமெரிக்காவில் ஒலிக்கின்றார்கள் (மெரியம் வெபுசிட்டர் அகராதி\ˈpēt-sə\ ). இதே போல Nazi என்பதையும் Naatzi என்பது போல ஒலிக்க வேண்டும். அது நாஜி அன்று. நாட்ஃசி = Nazi (மெரியம் வெபுசிட்டர் அகராதி \ˈnät-sē, ˈnat-\ என்கின்றது. ஒலிப்பை இங்கே கேட்கலாம்.

pha = ஃப
Fa = ஃவ
Sa, Za, = ஃச

என முறையாகக் குறிக்க முற்படலாம். இங்கே கருத்தைப் பகிர்ந்து கொள்வதே நோக்கம், கட்டாயம் எடுத்தாளவேண்டும் என்று கூறவில்லை. ஒலித்திரிபுகள் இயற்கை ,அது எல்லா மொழிகளிலும் உள்ளன. --செல்வா 15:09, 5 பெப்ரவரி 2012 (UTC)

இங்கே நடைபெற்ற உரையாடலையும் பார்த்து விட்டு, தலைப்பை மாற்ற முடியும் எனின், எழுத்துப் பெயர்ப்பு முறைப்படி தலைப்பை மாற்றி விடுங்கள். ஆனாலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் வலைப்பதிவில் ஜீ தமிழ் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தொடுப்பு --மதனாஹரன் 10:26, 6 பெப்ரவரி 2012 (UTC)
மதன், தலைப்பை மாற்றுவதற்காகச் சொல்லவில்லை. கருத்தைப் பகிர்வதே. இதே போல டாட்டா என்பதைட் டாடா (Taadaa) என்று எழுதுகின்றார்கள். ஆனால் டாட்டா என்று ஒலித்துத் தமிழின் ஒலிப்பு முறையையே மாற்றுகின்றார்கள். ஆங்கிலத்தில் happen, open என்று வரும் இரு சொற்களில் ஒன்றில் இரண்டு p மற்றொன்றில் ஒரு p தான் உண்டு. எனினும் அதன் ஒலிப்பு ஒன்றே: \ˈha-pən, -pəm\ (happen ஒலிப்பு, \ˈō-pən, -pəm\ (open ஒலிப்பு இதனை அறியாது பலரும் ஓபன் (Oban) என்றும் ஹாப்பன் என்றும் வேறுபடுத்தி எழுதுகிறார்கள். Physics என்பதை ப்ஹ்ஸிக்ஸ் என்று எழுதுவதில்லை. --செல்வா 12:24, 6 பெப்ரவரி 2012 (UTC)

சரியான முறைக்கேற்ப எழுதுவது தானே முறை... அநேகமானவர்களின் கருத்தைக் கேட்டு மாற்றலாம். ஏனென்றால், இது ஒரு வணிகப் பெயர் தானே... --மதனாஹரன் 12:43, 6 பெப்ரவரி 2012 (UTC)

ஜீ தமிழ் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜீ_தமிழ்&oldid=3492003" இலிருந்து மீள்விக்கப்பட்டது