புதிய தலைமுறை (இதழ்)
புதிய தலைமுறை | |
எம்.பி. உதயசூரியன் | |
வகை | சமூக விழிப்புணர்வு |
---|---|
இடைவெளி | வெள்ளிக்கிழமை |
நுகர்வளவு | 16,23,000 |
வெளியீட்டாளர் | புதிய தலைமுறை |
நிறுவனம் | நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பரேஷன் |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | www |
‘புதிய தலைமுறை’ வார இதழ் சென்னையிலிருந்து வெள்ளி கிழமைதோறும் வெளியாகும் முன்னணி தமிழ் வார இதழ் ஆகும். சமூக விழிப்புணர்வு வார இதழாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. இது அக்டோபர் 2009-ஆம் ஆண்டு முதல் பிரசுரமாகி வருகிறது.
எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு உட்பட்ட ‘நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பரேஷன்’ என்ற ஊடக நிறுவனத்தால் இவ்விதழ் வெளியிடப்படுகிறது. இதே ஊடக நிறுவனம் புதிய தலைமுறை கல்வி என்ற வார இதழையும், ‘புதிய தலைமுறை பெண்’ என்ற மாத இதழையும் வெளியிட்டு வருகிறது. மேலும் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியும் புதுயுகம் தொலைக்காட்சியும், இதே ஊடக நிறுவனம் சார்பில் ஒளிபரப்பாகி வருறது.
புதிய தலைமுறை இதழின் நிறுவன ஆசிரியர் ஆர்.பி. சத்தியநாராயணன் ஆவர். மூத்த பத்திரிகையாளர் எம்.பி. உதயசூரியன் செய்தி ஆசிரியர் ஆவார். இந்த இதழின் விற்பனை பதிப்பு, பதினாறு லட்சத்து இருபத்தி மூன்றாயிரமாக (16,23,000) உள்ளதாக, இந்தியன் ரீடர்ஷிப் சர்வே முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல், சினிமா, சாதனை, தன்னம்பிக்கை, விளையாட்டு தொடர்பான படைப்புகள் இதில் இடம்பெறுகின்றன.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]
வெளி இணைப்புகள்
[தொகு]- புதிய தலைமுறை இணையதளம்
- புதிய தலைமுறை இணைய தொலைக்காட்சி தளம் பரணிடப்பட்டது 2012-10-16 at the வந்தவழி இயந்திரம்
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "எக்ஸ்சேஞ்ச்4மீடியா, மார்ச் 15,2010". Archived from the original on 2010-03-17. பார்க்கப்பட்ட நாள் 2011-08-29.