பட்டாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பட்டாஸ்
Poster
இயக்கம்ஆர். எஸ், துரை செந்தில் குமார்
தயாரிப்புகுமார் தியாகராஜன்
அர்ஜூன் தியாகராஜன்
கதைஆர். எஸ், துரை செந்தில் குமார்
இசைவிவேக்-மெர்வின்
நடிப்புதனுஷ்
சினேகா
மெஹ்ரீன் பிர்சாதா
ஒளிப்பதிவுஓம் பிரகாஷ்
படத்தொகுப்புபிரகாஷ் மாபு
கலையகம்சத்ய ஜோதி படங்கள்
வெளியீடு15 சனவரி 2020
ஓட்டம்141 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்45 கோடி

[2]

பட்டாஸ் என்பது 2020 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படம் தற்காப்புக் கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது ஆர். எஸ். துரை செந்தில் குமார் என்பவரால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதில் தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்சாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவீன் சந்திரா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இது கொடிக்குப் பிறகு தனுஷுக்கும் இயக்குனர் துரை செந்தில்குமருக்கும் இடையிலான இரண்டாவது கூட்டு முயற்சியைக் குறிக்கிறது. இந்த படம் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த பழங்கால தற்காப்பு கலையான அடிமுறையை சித்தரிக்கிறது.[3] தங்களது கதாபாத்திரங்களுக்காக, தனுஷ் மற்றும் சினேகா படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு இந்தத் தற்காப்பு கலையில் பயிற்சி பெற்றனர்.[4] [5] [6]

இந்தப் படம் 15 ஜனவரி 2020 அன்று தைப்பொங்கலன்று திரைக்கு வந்தது. பொதுவாக சாதகமான விமர்சனங்கள் இத்திரைப்படத்திற்கு கிடைத்தன.[7]

நடிகர்கள்[தொகு]

  • சக்தி (பட்டாஸ்) மற்றும் திரவியம் பெருமாள் (இரட்டை வேடத்தில்) தனுஷ்
  • கன்னியாகுமரியாக சினேகா
  • சாதனா ஷாவாக மெஹ்ரீன் பிர்சாடா [8]
  • நிலப்பரை அல்லது நிலானாக நவீன் சந்திரா
  • வேலப்பன் ஆசானாக நாசர்
  • முனீஷ்காந்த்
  • பஞ்சராக கேபிஒய் சதீஷ்
  • போலீஸ் அதிகாரியாக கே.பி.ஒய் கோதண்டம்

தயாரிப்பு[தொகு]

இந்த படத்திற்காக, முன்னதாக கொடிக்காக இயக்குனர் துரை செந்தில்குமாருடன் இணைந்த பின்னர் முறையே படத்தொகுப்பாளர் மற்றும் கலை இயக்குநராக பிரகாஷ் மபு மற்றும் ஜி. துரைராஜ் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையில், ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டார். இது மாரி, அனேகன் மற்றும் மாரி 2 படங்களுக்குப் பிறகு தனுஷுடன் அவர் மேற்கொண்ட இணையும் நான்காவது திரைப்படம் ஆகும். இதே இயக்குனர்-நடிகர் கூட்டணியின் முந்தைய கொடி திரைப்படத்தைப் போலவே, பட்டாஸ் கூட தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் மற்றாெரு படமாகும். . சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் இயக்கியுள்ளார்.

பட்டாஸில் தனுஷ் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தனுஷ் தந்தையாக நடித்திருக்கும் பகுதியில் சினேகா அவரது கூட்டாளியாகவும், மகனின் பாத்திரத்திற்காக தனுஷின் கூட்டாளியாக மெஹ்ரீன் பிர்சாடாவும் ஒப்பந்தமாகியிருந்தனர். படத்தின் முதல் தோற்ற சுவரொட்டி நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு 28 ஜூலை 2019 அன்று வெளியிடப்பட்டது. தங்களது வேடங்களுக்காக, தனுஷ் மற்றும் சினேகா படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தற்காப்பு கலை பயிற்சி பெற்றனர்.[9]

இசை[தொகு]

பட்டாஸ்
Soundtrack by
விவேக்-மெர்வின்
வெளியீடு11 ஜனவரி 2020
ஒலிப்பதிவு2019
இசைப் பாணிதிரைப்படப்பாடல்கள்
நீளம்23:07
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்லஹரி மியூசிக்
டி-சீரீஸ்
இசைத் தயாரிப்பாளர்விவேக்-மெர்வின்
விவேக்-மெர்வின் chronology
சங்கத்தமிழன்
(2019)
பட்டாஸ்
(2020)

இந்த படத்திற்கான இசையை விவேக்-மெர்வின் செய்துள்ளனர். இயக்குனர் செந்தில்குமார் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருடன் முதல் முறையாக இணைந்துள்ளனர். பாடல் வரிகளை விவேக் மற்றும் தனுஷ் எழுதியுள்ளனர். ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் வாங்கியுள்ளது.

இந்த இசைத்தொகுப்பில் ஏழு பாடல்கள் உள்ளன. அவற்றில் மூன்று தனிப்பாடல்களாக வெளியிடப்பட்டன. மேலும் டிசம்பர் 1, 2019 அன்று வெளியான தனுஷ் பாடிய "சில் ப்ரோ" என்ற முதல் ஒற்றை பாடல் யூடியூபில் வைரலாகி காணொளி 3 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. [10] [11] பாடல்களின் பட்டியல் 9 ஜனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது மற்றும் முழு இசைத்தொகுப்பும் இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னையில் உள்ள சூர்யன் பண்பலை வானொலி நிலையத்தில் வெளியிடப்பட்டது.[12]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாஸ்&oldid=3142086" இருந்து மீள்விக்கப்பட்டது