அடிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அடிமுறை என்பது தமிழ்நாட்டுத் தற்காப்புக் கலை-விளையாட்டுகளில் ஒன்று.

தமிழகத் தற்காப்பு விளையாட்டுகள்[தொகு]

சிலம்பம் என்பது கோல்-சுற்றும் விளையாட்டு.
வர்மம் என்பது மயங்கி விழச் செய்யும் உடல்-புள்ளிகளைத் தாக்குவது.
அடிமுறை விளையாட்டில் கையாலும் காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர்.

அடிமுறையில் அடவுகள்[தொகு]

அடிமுறை பயில்வோருக்கு 18 அடவுகள் சொல்லித் தரப்படும்.
அடவு என்பது முன்னும் பின்னும் கால்-தப்படி வைத்துக் கையை ஓட்டும் பாங்கு.
இதில் எதிராளி வலிதாங்க மாட்டாமல் விழுவார்.
அவ்வளவுதான்.

அடிமுறையில் பாணிகள்[தொகு]

அடிமுறைத் தற்காப்பு விளையாட்டில் ஒற்றைச்சுவடு, அங்கச்சுவடு என இருவேறு பாணிகள் உண்டு

அங்கச்சுவடு[தொகு]

தேக்வொண்டோவில் உள்ள கால்உதை
கராத்தேயில் உள்ள கைக்குத்து
ஜுட்ஜூவில் உள்ள உள்பூட்டுகள்
ஜூடோவில் உள்ள தூக்கி எறிதல்
குங்பூவில் உள்ள கைவெட்டு
வர்மக்கலையில் உள்ள வர்ம-உறுப்பு தாக்கம்

ஆகிய அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கமாய்க் கொண்டிருப்பதுதான் அடிமுறை விளையாட்டின் அங்கச்சுவடு.

பாவலா[தொகு]

முன்னால் ஓரடிப் பாவலா
பின்னால் ஓரடிப் பாவலா
என்று இப்படி ஈரடி, மூவடி, நாலடிப் பாவலாக்களும் உண்டு.
மற்றும் முன்னுடான், பின்னுடான், துள்ளுடான் என்னும் பாங்குகளும் இதில் உண்டு.

இவற்றையும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

தமிழர் விளையாட்டு மடல், மாத இதழ், தமிழ்நாடு அரசு வெளியீடு, தொகுப்பு நூல் - மறைகின்ற விளையாட்டுகள் 2002
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிமுறை&oldid=2266805" இருந்து மீள்விக்கப்பட்டது