உள்ளடக்கத்துக்குச் செல்

பரட்டை என்கிற அழகுசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரட்டை என்கிற அழகுசுந்தரம்
இயக்கம்சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்புகே.ஆர்.யோகேஷ்
கதைபிரேம்
அ.வி. துரை சாகிப்
சாய் ரமணி
ராஜ் கண்ணன்
இசைகுருகிரன்
யுவன் சங்கர் ராஜா
நடிப்புதனுஷ்
மீரா ஜாஸ்மின்
அர்ச்சனா
நாசர்
சந்தானம்
லிவிங்ஸ்டன்
ரியாஸ் கான்
ஒளிப்பதிவுஆர்.வேல் ராஜ்
படத்தொகுப்புசுரஜ் கவி
விநியோகம்கேஆர் இன்போடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்.
வெளியீடு27 ஏப்ரல் 2007 (2007-04-27)
ஓட்டம்157 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பரட்டை என்கிற அழகுசுந்தரம் என்பது 2007-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் 2005-இல் வெளிவந்த ஜோகி என்னும் கன்னடத் திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ஆகும்.

விமர்சனம்

[தொகு]

பிலிமி பீட் வலை தளத்தில் எழுதிய விமர்சனத்தில் "ஒரிஜினல் கதையை மாற்ற வேண்டாம் என நினைத்துப் படத்தை இயக்கியிருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா. ஆனால் அதற்காக தனுஷின் உடல்வாகு, நடிப்புத் திறன் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்ததுதான் தப்பாகப் போய் விட்டது. தாய், மகனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களை திருப்திப்படுத்தாமல், எரிச்சலடைய வைத்து விட்டது" என்று எழுதியிருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பரட்டை..அழுக்கு சுந்தரம்!- விமர்சனம்". filmibeat.com. 2007-04-03. Retrieved 2025-05-24.

வெளியிணைப்புகள்

[தொகு]