தமன் (இசையமைப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமன்
இயற்பெயர்கண்டசாலா சாய் சீனிவாச தமன் சிவகுமார்
பிறப்புநவம்பர் 16, 1983 (1983-11-16) (அகவை 40)
பிறப்பிடம்ஆந்திர பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசை தயாரிப்பாளர்
இசை இயக்குனர்
பின்னணிப் பாடகர்
இசைக்கருவி இசைப்பவர்
திரைப்பட நடிகர்
இசைக்கருவி(கள்)மின்னணு இசைப்பலகை (கீபோர்டு)
குரலிசை
கிட்டார்
பியானோ
ஆர்மோனியம்
தாளம்

தமன் அல்லது எஸ். தமன் என்று அறியப்படும் கண்டசாலா சாய் சீனிவாச தமன் சிவகுமார் என்பவர் ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.[1][2]

இவர், சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்த ஐந்து இளைஞர்களில் ஒருவராக, இசைக்கருவிகளை வாசிப்பவராக நடித்தார். இதன்மூலமாக திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. சிந்தனை செய் திரைப்படம் இவர் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்.[3][4] கிக் திரைப்படம் இவரது இசையமைப்பில் வெளியான முதல் தெலுங்குத் திரைப்படமாகும்.[5]

திரைப்பட விபரம்[தொகு]

இசையமைத்த திரைப்படங்கள்.[தொகு]

  • காஞ்சனா
  • ஒஸ்தி

பாடிய பாடல்கள்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 பாய்ஸ் கிருஷ்ணா தமிழ்
2009 சிந்தனை செய் தமிழ் சிறப்புத் தோற்றம்
2010 அய்யனார் தமிழ் சிறப்புத் தோற்றம்
2011 வந்தான் வென்றான் தமிழ் சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமன்_(இசையமைப்பாளர்)&oldid=3781610" இருந்து மீள்விக்கப்பட்டது