சிந்தனை செய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிந்தனை செய்
இயக்கம்ஆர். யுவன்
தயாரிப்புகில்லி சேகர்
அம்மா இராஜசேகர்
கதைஆர். யுவன்
இசைதமன் (இசையமைப்பாளர்)
நடிப்புஆர். யுவன்
மது சர்மா
ஒளிப்பதிவுபவன் சங்கர்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்கிரீன் ஆப்பில் பிக்சர்ஸ்
ஆர்.எம்.ஏ பிலிம் பேக்டரி
வெளியீடுசூலை 31, 2009 (2009-07-31)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிந்தனை செய் (Sindhanai Sei) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநரான ஆர். யுவன் எழுதி இயக்கிய, இந்த படத்தில் ஆர். யுவன், மது சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மேலும் ஷாபி, நிதிஷ் வீரா, சசாங்க், பாலா, தர்ஷா, அஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை கில்லி சேகர் மற்றும் அம்மா ராஜசேகர் ஆகியோர் தயாரித்தனர். இப்படத்திற்கான இசையை எஸ். தமன் அமைத்தார். இப்படமானது 2009 சூலை 31 அன்று வெளியானது. இந்த படம் தெலுங்கில் பீபட்சம் . என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

கதைச்சுருக்கம்[தொகு]

யுவன், நிதிஷ், பாலா, சோக்கத், சபி ஆகியோர் பள்ளியிலிருந்து நண்பர்கள். வளர்ந்த பிறகு ஐவரும் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இப்படி சிறுகசிறுக திருடுவதற்கு பதிலாக பெரிய அளவில் திருடி பணக்காரராக திட்டமிடுகின்றனர். அதன்படி திட்டடமிட்டு ஒரு வங்கியில் ஐந்து கோடியை கொள்ளை அடிக்கின்றனர். அந்த ஐந்து கோடியை பணத்தாசையால் முழுமையாக அபகரிக்க நினைத்து நண்பர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரை கொல்ல திட்டமிடுகின்றனர். அதில் யார் வெற்றிபெற்றார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

தெலுங்கு திரைப்பட நடன இயக்குனரான அம்மா ராஜசேகரின் சகோதரர் ஆர். யுவன் (பிரபு சேகர்) சிந்தனை செய் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவர் படத்தின் நாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி படத்தை இயக்கியுள்ளார். [1] எஸ். தமன், படத்தின் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆர். யுவனின் சகோதரர் கில்லி சேகர் சண்டை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த படம் ஐந்து இளைஞர்களின் உளவியலைப் படப்பிடிக்கிறது. [2]

இசை[தொகு]

இப்படத்திற்கான பாடல் இசை, பின்னணி இசை போன்றவற்றை இசையமைப்பாளர் எஸ். தமன் மேற்கொண்டார்.

தமிழ் பதிப்பின் இசை 2008 நவம்பர் 9 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. விழாவின் முக்கிய விருந்தினராக அர்ஜுன் கலந்து கொண்டார். மேலும் பூபதி பாண்டியன், தரணி, டி. சிவா, வெங்கட் பிரபு, ஏ. எம். ரத்னம் ஆகியோரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். [1] [3] [4] இதன் தெலுங்கு பதிப்பின் இசை 2008 நவம்பர் 7 அன்று ஐதராபாத்தில் உள்ள பிரசாத் லேபில் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் எஸ். எஸ். ராஜமௌலி, விவி விநாயக், கே. விஜய பாஸ்கர், ஸ்ரீஹரி ஆகியோர் விழாவில் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். [2] [5]

தமிழ் பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சிந்தனை செய்"  கிருஷ்ணமூர்த்தி 04:01
2. "எல்லாமே எல்லாமே"  நவீன் மாதவ் 04:19
3. "மண்ணு நீ"  ரஞ்சித் 03:19
4. "தப்பும் இல்லை"  ராகுல் நம்பியார் 05:25
5. "நா காக்கிநாடா"  சுசித்ரா 04:09
6. "உச்சிமீது"  தமன் (இசையமைப்பாளர்) 03:46
மொத்த நீளம்:
24:59

வெளியீடு[தொகு]

இந்த படம் 2009 சூலை 31 அன்று வெளியான பிற நான்கு படங்களுடன் வெளியிடப்பட்டது. [6]

வணிகம்[தொகு]

இந்தப் படம் சென்னையில் சராசரியான துவக்க வசூலை ஈட்டியது. [7] [8]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "A film on five teenagers". The New Indian Express (11 November 2008).
  2. 2.0 2.1 "Bheebatsam audio function". Idlebrain.com (7 November 2008).
  3. "Sindhanai Sei Songs". jiosaavn.com.
  4. "Arjun carries heavy burden alone". behindwoods.com (10 November 2008).
  5. "Bheebatsam Songs". raaga.com.
  6. "Friday Fury - July 31". Sify (1 August 2009).
  7. "Sindhanai Sei - Behindwoods.com - Tamil Top Ten Movies". behindwoods.com (3 August 2009).
  8. "Sindhanai Sei - Behindwoods.com - Tamil Top Ten Movies". behindwoods.com (10 August 2009).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தனை_செய்&oldid=3244345" இருந்து மீள்விக்கப்பட்டது