வொய் திஸ் கொலவெறி டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3
பாடல் to 3
அனிரூத்
வெளியீடு16 நவம்பர் 2011
ஒலிப்பதிவு2011
நீளம்4.08
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி
இசைத் தயாரிப்பாளர்அனிரூத்

வொய் திஸ் கொலவெறி டி (ஏனிந்த கொலைவெறி டி, Why this Kolaveri di) என்பது நவம்பர் 2011 வாக்கில் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர் தனுஷ் பாடிய 3 திரைப்படத்தின் பாடல். இப்பாடலின் வரிகள் தமிழிஷ் எனப்படும் ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் உள்ள காரணத்தால் இளைஞர்களிடையே சமூக வலைத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு பிரபலமானது. யூடியூபில் பதிவேற்றப்பட்ட சில நாட்களிலேயே 10 இலட்சம் முறை காணப்பட்டதுடன் தற்போது 10 மில்லியனுக்கும் மேற்பட்ட தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது [1]. நவம்பர் 21ஆம் தேதி 2011இல் டிவிட்டரின் இந்திய போக்குகளில் முதலாவதாக இடம் பெற்றது.

இதுகுறித்து நடிகர் தனுஷ் கூறியதாவது, கொலவெறி டி பாடலை ஆறே நிமிடங்களில் எழுதினேன். இந்தப் பாடல் வரிகள் மகா எளிமையானவை. அதில் நிறைய ஆங்கில வார்த்தைகளை நான் பயன்படுத்தியுள்ளேன். அனைவருக்குமே புரியும் படியாக பாடலை எழுத நினைத்தேன். அதன்படியே பாடலும் வந்தது. இதை ஒரு பாடலாக பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால் பாடலாக அமைந்தது தான் பெரிய சந்தோசம்.[2]

யு ட்யூப்பின் கோல்ட் விருது[தொகு]

வீடியோ இடம்பெறும் தனுஷ் என்ற திரை

ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் உள்ள இப் பாடலுக்கு யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற வகையில் 'யு ட்யூப்கோல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது.[3][4]

விமர்சனம்[தொகு]

இந்தப் பாடல் எந்தளவுக்கு பிரபலமாகியதோ அந்தளவிற்கு விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. தமிழிஷ் எனப்படும் ஆங்கிலம் கலந்த தமிழ் நடைதான் விமர்சனத்திற்கு முக்கிய காரணம். இதே மெட்டில் யாழ்ப்பாணக் கலைஞர் ஜெறி ஸ்டாலின் என் தமிழ் மொழி மேலுனக்கேனிந்தக் கொலைவெறிடா..? என்ற பெயரில் பாடல் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Why This Kolaveri Di Full Song Promo Video in HD". https://www.youtube.com/watch?v=YR12Z8f1Dh8. பார்த்த நாள்: 2011-11-29. 
  2. கொலைவெறி பாடல் எழுத 6 நிமிடங்கள் ஆனது: நடிகர் தனுஷ்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், திசம்பர் 4, 2011
  3. கொலவெறி... தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப் கோல்ட் விருது![தொடர்பிழந்த இணைப்பு], ஒன்இந்தியா, திசம்பர் 7, 2011
  4. Y this Kola Veri gets Gold Award from Youtube, யு ட்யூப், திசம்பர் 7, 2011
  5. Tamil Kolaveri HD (Jaffna Version)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வொய்_திஸ்_கொலவெறி_டி&oldid=3229564" இலிருந்து மீள்விக்கப்பட்டது