தேனி மாவட்டப் பொது நூலகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேனி மாவட்டத்தில், தேனி தாலுகா அலுவலகம் எதிர்புறம் மாவட்ட மையப் பொது நூலகம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில், மாவட்ட மையப் பொது நூலகம் தவிர 58 கிளை நூலகங்கள், 13 கிராம நூலகங்கள் மற்றும் 17 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

நூலகப் பயன்பாடு[தொகு]

தேனி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள நூல்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த விபரங்கள் கீழ்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. (நாள்: 13-10-2010)

பொருள் எண்ணிக்கை
உறுப்பினர்கள் 1,01,569
கிடைக்கக் கூடிய நூல்கள் 11,91,236
பயன்பாட்டாளர்கள் 14,33,782
காலக்கெடுவில் வழங்கப்பட்ட நூல்கள் 3,37,272
குறிப்புகளுக்காக வழங்கப்பட்ட நூல்கள் 11,05,579

புரவலர்கள்[தொகு]

நூலகத்தில் ரூபாய் ஆயிரம் செலுத்துபவர்கள் நூலகப் புரவலர்களாகவும், ரூபாய் ஐந்து ஆயிரம் செலுத்துபவர்கள் பெரும் புரவலராகவும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் இதுவரை 1029 பேர் புரவலர்களாகவும், இரண்டு பேர் பெரும் புரவலர்களாகவும் சேர்ந்துள்ளனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]