உள்ளடக்கத்துக்குச் செல்

தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளுக்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் போன்றவை மாவட்ட மருத்துவப் பணிகள் மற்றும் குடும்ப நல இணை இயக்குனர் அலுவலரின் கீழ் இயங்கி வருகின்றன.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை[தொகு]

தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 100 மாணவர்கள் வீதம் மருத்துவப் படிப்புக்காகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இந்தக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் படிப்புக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்ட மக்களும் இம்மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

அரசு மருத்துவமனைகள்[தொகு]

தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தில் 260 படுக்கை வசதிகளைக் கொண்ட மாவட்டத் தலைமை மருத்துவமனை ஒன்றும், ஆண்டிபட்டியில் 32 படுக்கை வசதிகளும் , போடிநாயக்கனூரில் 50 படுக்கை வசதிகளும், உத்தமபாளையத்தில் 48 படுக்கை வசதிகளும் கொண்ட தாலுகா மருத்துவமனைகளும், கம்பத்தில் 74 படுக்கை வசதிகளும், சின்னமனூரில் 38 படுக்கை வசதிகளும் கொண்ட அரசு மருத்துவமனைகள் என்று மொத்தம் ஆறு அரசு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆரம்பச் சுகாதார நிலையங்கள்[தொகு]

தேனி மாவட்டத்தில் முதன்மை ஆரம்பச் சுகாதார நிலையங்கள் 8, கூடுதல் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் 17 செயல்பட்டு வருகின்றன. இவை தவிர 162 துணைச் சுகாதார மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டக் காசநோய் மையம்[தொகு]

தேனி மாவட்டத்தில் காச நோய் மையம் ஒன்றும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.