தேனி மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி மாவட்டத்தில் தொகுதி மறுவரையறைக்குப் பின்பு தேனி சட்டமன்றத் தொகுதி நீக்கம் செய்யப்பட்டது. தற்போது ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி, கம்பம் சட்டமன்றத் தொகுதி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி[தொகு]

தேனி மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியில் இது ஒரு பொதுத் தொகுதி ஆகும். இத் தொகுதியில் தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி தாலுகா பகுதி முழுமையாகவும், உத்தமபாளையம் தாலுகா வின் கீழக்கூடலூர், நாராயணத்தேவன்பட்டி மற்றும் வண்ணாத்திப்பாறை (ஆர்.எப்) வருவாய்க் கிராமங்கள்,காமயக்கவுண்டன்பட்டி (பேரூராட்சி), கூடலூர் (நகராட்சி) மற்றும் ஹைவேவிஸ் (பேரூராட்சி) ஆகிய பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி[தொகு]

தேனி மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியில் இது ஒரு தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித் தொகுதி ஆகும். இத்தொகுதியில் தேனி மாவட்டத்தின் பெரியகுளம் தாலுகா பகுதி முழுமையாகவும், தேனி தாலுகா பகுதியில் ஊஞ்சாம்பட்டி வருவாய்க் கிராமமும், தேனி- அல்லிநகரம் (நகராட்சி)பகுதி முழுமையாகவும் இடம் பெற்றுள்ளன.

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி[தொகு]

தேனி மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியில் இது ஒரு பொதுத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் தாலுகா பகுதி முழுமையாகவும், தேனி தாலுகாவில் கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு மற்றும் ஜங்கால்பட்டி வருவாய்க் கிராமப் பகுதிகளும், பழனிசெட்டிபட்டி (பேரூராட்சி) மற்றும் வீரபாண்டி (பேரூராட்சி) பகுதிகளும், உத்தமபாளையம் தாலுகாவில் பொட்டிபுரம், சங்கரபுரம், பூலாநந்தாபுரம், மற்றும் புலிகுத்தி வருவாய்க் கிராமப் பகுதிகளும், குச்சனூர் (பேரூராட்சி) மற்றும் மார்க்கையன்கோட்டை (பேரூராட்சி) பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

கம்பம் சட்டமன்றத் தொகுதி[தொகு]

தேனி மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியில் இது ஒரு பொதுத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் தேனி மாவட்டத்தின் உத்தமபாளையம் தாலுகாவில் தேவாரம், தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், உத்தமபாளையம், மல்லிங்காபுரம், கோகிலாபுரம் இராயப்பன்பட்டி, அழகாபுரி, முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மலை, வேப்பம்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை வருவாய்க் கிராமப் பகுதிகளும், தேவாரம் (பேரூராட்சி), பண்ணைப்புரம் (பேரூராட்சி), கோம்பை (பேரூராட்சி), உத்தமபாளையம் (பேரூராட்சி), அனுமந்தன்பட்டி (பேரூராட்சி), க.புதுப்பட்டி (பேரூராட்சி), கம்பம் (நகராட்சி), சின்னமனூர் (நகராட்சி) மற்றும் ஓடைப்பட்டி (பேரூராட்சி) பகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன.