பாளையங்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1800களில் பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை என்பது திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.திருநெல்வேலி மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக இப்பகுதி தனி நகராட்சியாகச் செயல்பட்டு வந்தது.

கல்விக்கு பெயர் போன இங்கு மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் ஏராளம் அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் இருப்பதாலும் மற்றும் தமிழ்நாட்டில் முதல் முறையாக பார்வையற்றவர் மற்றும் காதுகேளாதோர் பள்ளி துவங்கப்பட்டதால் இது தமிழகத்தின் "ஆக்ஸ்போர்ட்” என்று பாளையங்கோட்டை பெருமையுடன் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பழமையானது மற்றும் மிகவும் பெயர் பெற்றதும் கூட.[1] இங்கு வ.உ.சி நினைவு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது மற்றும் திருநெல்வேலியின் மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இங்குள்ள ”ஹைகிரவுண்ட்(தமிழில் பாளை மேட்டுப் பகுதி என்றழைக்கப்படுகிறது) என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அனைத்துவகையான நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. தற்போது திருநெல்வேலியின் புதிய பேருந்து நிலையம் இங்குள்ள வேய்ந்தான்குளம் பகுதியில் அமைந்துள்ளது என்பது தனிச் சிறப்பு.

மைசூர், குலசை தசராவிற்க்கு அடுத்த முக்கிய தசரா பாளையில் நடைபெரும் தசரா விழா ஆகும்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் கீழே இருக்கிறது.

இது சட்டமன்றத்தினை பொருத்தவரையில் பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)யின் கீழ் வருகிறது. இங்கு மேலப்பாளையம், வண்ணார்பேட்டை, ஹைக்கிரவுண்ட், பாளை மார்க்கெட், சமாதானபுரம், என்.ஜி.ஓ காலனிகள், சாந்தி நகர், கே.டி.சி. நகர், பெருமாள்புரம், மகாராஜநகர், தியாகராஜநகர் போன்ற பகுதிகள் குறிப்பிடத்தக்கவை.

சான்றுகள்[தொகு]

  1. "சிறைச்சாலை". 2014-02-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. அக்டோபர் 16, 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாளையங்கோட்டை&oldid=3249620" இருந்து மீள்விக்கப்பட்டது