பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை அல்லது பாளையங்கோட்டை சிறை என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மத்திய சிறைச்சாலை ஆகும்.இந்த சிறையானது தற்பொழுது தமிழ்நாடு சிறைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளது.
வரலாறு
[தொகு]இந்த சிறைச்சாலை 1880ல் கட்டப்பட்டது. 1929 வரை மாவட்டச்சிறையாக செயல்பட்டு வந்தது. 1929 முதல் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியாக மாற்றப்பட்டது. பின் அங்கிருந்து சிறுவர் சீர் திருத்தப்பள்ளி புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் ஏப்ரல் 1, 1968 முதல் மத்திய சிறைச்சாலையாக செயல்பட்டு வருகிறது.
சுதந்திர போராட்டத்தில் சிறையின் பங்கு
[தொகு]இந்தப் பழைமையான சிறைச்சாலை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் விடுதலைக்காக போராடும் வீரர்களை அடைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்டது. சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார் போன்றோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டனர்.[சான்று தேவை]
தற்போதைய நிலை
[தொகு]தமிழகத்திலுள்ள பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு கொடுங்குற்றம் புரிந்தோர், அரசியல் கைதிகள் போன்றோரை அடைத்து வைக்கின்றனர். இதனால் இங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. சிறை வளாகத்தைச் சுற்றிலும் உயர்ந்த கோட்டை மதில்களும், அதன் மேல் மின்னூட்டப்பட்ட இரும்புக்கம்பி வளையங்களும், 24 மணி நேர கண்காணிப்புக் கோபுரங்களும் உள்ளன. வளாகச்சுவரைச் சுற்றிலும் 10அடிக்கு ஒரு காவலர் வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சிறை விபரம்
[தொகு]இந்த சிறை வளாகம் 117.75 ஏக்கரில் 47 அலகுகளுடனும், 297 அறைகளுடனும், 1332 கைதிகளை அடைத்து வைக்கும் திறன் கொண்டதாக எண்கோண வடிவில் உள்ளது.
வெளி இணைப்பு
[தொகு]- தமிழ்நாடு சிறைத்துறை பரணிடப்பட்டது 2014-02-17 at the வந்தவழி இயந்திரம்