செந்துறை
செந்துறை | |
ஆள்கூறு | 11°15′25″N 79°10′50″E / 11.257036°N 79.180527°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
வட்டம் | செந்துறை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
செந்துறை (ஆங்கிலம்: Sendurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டம் மற்றும் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.[4] [5]இது அரியலூருக்கு வடகிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செந்துறை நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
போக்குவரத்து
[தொகு]செந்துறை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள பேரூர் ஆகும். அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகியவை சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பேருந்துப் போக்குவரத்து
[தொகு]செந்துறை பேருந்து நிலையத்திலிருந்து, அரியலூர், ஜெயங்கொண்டம், கும்பகோணம், தஞ்சாவூர், விருத்தாச்சலம், மயிலாடுதுறை, திருச்சி, சென்னை மற்றும் திட்டக்குடி ஆகிய நகரங்களுக்கு புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களிலிருந்து செந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடருந்து போக்குவரத்து
[தொகு]செந்துறை தொடருந்து நிலையத்தில், கடலூர் துறைமுகம்- திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு- திருச்சிராப்பள்ளி சந்திப்பு ஆகிய சாதாரன பயணிகள் வண்டியும், விழுப்புரம் சந்திப்பு- மதுரை சந்திப்பு விரைவு வண்டியும் இந்நிலையத்தில் நின்று செல்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-23. Retrieved 2013-02-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. Retrieved 2013-02-02.