இட்டார்சி

ஆள்கூறுகள்: 22°36′41″N 77°45′44″E / 22.6115°N 77.7623°E / 22.6115; 77.7623
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடார்சி
इटारसी
நகரம்
இடார்சி is located in மத்தியப் பிரதேசம்
இடார்சி
இடார்சி
ஆள்கூறுகள்: 22°36′41″N 77°45′44″E / 22.6115°N 77.7623°E / 22.6115; 77.7623[1]
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ஹோசங்காபாத்
ஏற்றம்
345.86 m (1,134.71 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,14,495
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் சுட்டு எண்
461111
தொலைபேசி குறியீட்டெண்+917572xxxxxx
வாகனப் பதிவுMP-05
பாலின விகிதம்1.08:1 /

இடார்சி (ஆங்கில மொழி: Itarsi) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஹோசங்காபாத் மாவட்டத்தில் அமைந்த ஒரு நகரமாகும். இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள நகரங்களை இணைக்கும் இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையம் இங்கு அமைந்துள்ளது. இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட தொடருந்துகள் நின்று செல்வதால் இடார்சி நகரம் முக்கிய வணிகச் சந்தையாக விளங்குகிறது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இடார்சி நகரத்தின் மக்கள்தொகை 114,495 ஆக உள்ளது.[2] மக்கள் தொகையில் ஆண்கள் 52%; பெண்கள் 48% ஆக உள்ளனர். சராசரி படிப்பறிவு 75% ஆகும். அதில் ஆண்களின் படிப்பறிவு 81% ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 69% ஆகவும் உள்ளது. இடார்சியின் மக்கள் தொகையில் 13 விழுக்காட்டினர் ஆறு வயதிற்குட்பட்ட குழுந்தைகளாக உள்ளனர்.

போக்குவரத்து[தொகு]

இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையம் இந்நகரத்தின் போக்குவரத்தை எளிமையாக்குகிறது. நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட தொடருந்துகள், இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையத்தில் நின்று செல்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=514441
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டார்சி&oldid=3811711" இலிருந்து மீள்விக்கப்பட்டது