தஞ்சாவூர் மராத்தியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தஞ்சாவூர் மராத்தியர்
மொத்த மக்கள்தொகை
~70,000 (2001)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா (தமிழ்நாட்டின் சோழநாட்டு பகுதி, சென்னை, தருமபுரி, கேரளா)
மொழி(கள்)
தாய் மொழி: தஞ்சாவூர் மராத்தி, கன்னடம், தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மராத்தியர், தேசஸ்த் பிராமணர், தமிழர்

தஞ்சாவூர் மராத்தியர் என்னும் சொல், தமிழ்நாட்டின் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் வசித்து கொண்டு மராத்தி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். இவர்கள் தஞ்சாவூர் மராத்திய ஆட்சியின் போது தமிழகத்துக்கு வந்த ஆட்சியாளர்கள் மற்றும் சிப்பாய்களின் சந்ததியினர் ஆவார்.

மக்கட்தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 0.1% பேர் மராத்தி மொழியை தாய்மொழியாக கொண்டு பேசுபவர்கள் வாழ்கின்றனர்.[1] சரியான மாவட்ட அளவிலான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் மதிப்பீடுகளின்படி, மராட்டியர்கள் பெரும்பாலும் சென்னை நகரத்திலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, வேலூர், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் மகாராட்டிரா, பெங்களூர், வட இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்ததால், தமிழகத்தில் மராத்தி மக்கள் தொகை சமீபத்தில் குறைந்துள்ளது.[2]

மொழி[தொகு]

தஞ்சாவூர் மராத்தி மக்களின் தாய்மொழி தஞ்சாவூர் மராத்தி மொழியாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]