தஞ்சாவூரில் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தஞ்சாவூரில் NH 67 சாலை
தஞ்சாவூர் நகரில் புதுக்கோட்டை சாலை
தஞ்சாவூர் நகரில் பேருந்து ஒன்று

தஞ்சாவூரில் போக்குவரத்து என்பது தமிழ்நாடு, தஞ்சாவூர் நகரின் போக்குவரத்து வசதியைப்பற்றியது. தஞ்சாவூரில் நன்கு வளர்ந்த போக்குவரத்து வசதி உள்ளது. தஞ்சாவூர் நகரமானது சாலை மற்றும் தொடருந்து மூலம் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களூடன் இணைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் நகரமானது பேருந்துகள் நிறைந்த நகரம். தஞ்சாவூர் நகரமானது தஞ்சாவூர் சென்னை, கோயம்புத்துர், திருச்சிராப்பள்ளி, காரைக்கால், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, பெங்களரூ, எர்ணக்குளம் மார்த்தண்டம், நாகர்கோவில், திருப்பதி, திருவனந்தபுரம், ஊட்டி மற்றும் மைசூர் போன்ற நகரங்களூடன் பேருந்து சேவைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் நகரத்தின் மையத்தில் ஒரு பேருந்து நிலையம் அமைந்திருக்கிறது. தஞ்சாவூர் நகரப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதிய நிலையத்திலிருந்து நகரப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து கிராமங்கள், வல்லம் போன்ற புறநகரப் பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகிறது. தஞ்சாவூர் -திருச்சி நெடுஞ்சாலையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரெட்டிப்பாளையம் இடையே மினிப்பேருந்துகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]