இஸ்லாம் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்லாம் ஷா சூரி
173 islam-11.jpg
A coin of Islam Shah
Sultan of the Suri Empire
ஆட்சிக்காலம்26 May 1545 – 22 November 1554
முடிசூட்டுதல்26 May 1545
முன்னையவர்Sher Shah Suri
பின்னையவர்Firuz Shah Suri
இறப்பு22 November 1554
குடும்பம்உறுப்பினர்Firuz Shah Suri
பெயர்கள்
Jalal Khan
மரபுSur dynasty
அரசமரபுSur dynasty
தந்தைSher Shah Suri
மதம்இசுலாம்

இஸ்லாம் ஷா சூரி( 1545-1554)டில்லியை ஆண்ட சுல்தான் ஷெர்ஷாவின் இரண்டாம் மகன். இவரது இயற்பெயர் ஜலால் கான். ஷெர்ஷா மரணமடைந்தபின் பெருவாரி பிரபுக்களின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்களின் ஆதரவோடு மூத்த சகோதரர் ஏதில்கான் இருக்க கி.பி. 1545 - ஆம் ஆண்டு 'இஸ்லாம் ஷா' என்ற பட்டத்தோடு முடிசூட்டிக் கொண்டார்.

ராந்தம்பாரில் தங்கியிருந்த ஏதில்கான் இஸ்லாம் ஷாவின் ஆட்சியினை ஏற்க மறுத்தார். அவரை தலைநகர் ஆக்ராவிற்கு அழைத்துவந்து சமாதானம் செய்து வைக்க முயன்றனர் பிரபுக்கள் சிலர். அதே நேரம் இஸ்லாம் ஷா தம் தமையனை கொல்ல சதித்திட்டம் தீட்டினார். தப்பிய ஏதில்கானை சிறைபிடிக்க தொடர்ந்து முயன்றார் இஸ்லாம் ஷா. இச்செயல்களால் பல பிரபுக்கள் ஏதில்கானை ஆதரிக்க தொடங்கினர். முடிவில் ஏதில்கானுக்கும், இஸ்லாம் ஷாவிற்கும் ஆக்ரா அருகில் போர் நடைபெற்றது. இப்போரில் தோல்வியடைந்த ஏதில்கானும் அவர் ஆதரவு பிரபுக்களும் தப்பியோடினர்.

முக்கிய பிரபுக்கள் பலர் ஏதில்கானை ஆதரித்ததால் இஸ்லாம் ஷா பிரபுக்கள் மீது சந்தேகமும், கோபமும் அடைந்தார். பல்வேறு காரணங்களைச் சொல்லி பிரபுக்களை ஒவ்வொருவராக சிறைபடுத்தியும், போர் தொடுத்தும் கொன்றார். இறுதியில் இஸ்லாம் ஷா கி.பி. 1554 நவம்பர் 22 - ஆம் நாள் இயற்கை மரணம் எய்தினார்.

மேற்கோள்[தொகு]

  • Abraham Eraly The Mughal Throne (Phoenix, 2003 edition) pages 94–97
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாம்_ஷா&oldid=3603151" இருந்து மீள்விக்கப்பட்டது