உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயிசா சலால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிசா சலால்

ஆயிசா சலால்  (Ayesha Jalal)  என்பவர் பாகித்தானைச் சேர்ந்த அமெரிக்க வரலாற்றாய்வாளர் ஆவார். 1998 ஆம் ஆண்டில் இவர் மக்கார்த்தர் பெல்லோ ஆக மதிக்கப்பட்டார். இவர் டப்டஸ் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]

இலாகூரில் பிறந்த ஆயிசா சலால் வெல்லஸ்லி கல்லூரியில் பயின்று பின்னர் கேம்பிரிச்சில் உள்ள திரினிட்டி கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து 1983 இல் ஆய்வுப் பட்டம் பெற்றார்    1987 வரை கேம்பிரிச்சில் இருந்து திரினிட்டி கல்லூரி பேராசிரியராகப் பணி புரிந்தார் 1985 இல் வாசிங்டனில் உட்ரோ வில்சன் நடுவத்திலும், 1990 வரை ஆர்வர்ட் அகாதெமியிலும் , பின்னர் 1999 இல் டப்ட் பல்கலைக்  கழகத்திலும் சேர்ந்து பணி செய்தார்.[1][2][3][4]

பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி

[தொகு]

கேம்பிரிச் திரினிட்டி கல்லூரி, கேம்பிரிச் தெற்கு ஆசிய ஆய்வுப் பிரிவு, வாசிங்டனில் உட்ரோ வில்சன் நடுவம், ஆர்வர்ட் அகாதமி ஆகிய கல்வி நிலையங்களில் மதிப்புறு பேராசிரியராகவும்,  விஸ்கான்சின் -மடிசன், டப்டஸ் பல்கலைக்கழகம், ஆர்வர்ட் பல்கலைக் கழகம், இலாகூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆயிசா சலால் கற்பிக்கும் பேராசிரியராகவும் இருந்தார்.

விருதுகள்

[தொகு]

ஆயிசா சலால் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திரினிட்டி கல்லூரி பரிசு, மெக்கார்தர் பவுண்டேசன் மதிப்புறு உறுப்பினர்,[5] சிட்டாரா இமீடியாஸ் என்ற பாக்கித்தானின் உயர்ந்த விருது ஆகியன அவற்றில் அடங்கும்.[6]

மேற்கோள்

[தொகு]
  1. "Department of History - Tufts University". ase.tufts.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.
  2. "Jalal, Ayesha". Atlantic Council இம் மூலத்தில் இருந்து 2018-01-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180122072053/http://www.atlanticcouncil.org/about/experts/list/ayesha-jalal. 
  3. Chishty-Mujahid, Nadya (2015-02-01). "COVER STORY: The Struggle for Pakistan by Ayesha Jalal". DAWN.COM. http://www.dawn.com/news/1160651. 
  4. Chotiner, Isaac (2014-12-26). "Pakistan: The Land of the Pure". Wall Street Journal. https://www.wsj.com/articles/book-review-the-struggle-for-pakistan-by-ayesha-jalal-1419614523. 
  5. "Ayesha Jalal — MacArthur Foundation". www.macfound.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-10.
  6. "Ayesha Jalal: Borderline politics" (in en-US). The Express Tribune. 2014-04-20. https://tribune.com.pk/story/696410/ayesha-jalal-borderline-politics/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிசா_சலால்&oldid=3233004" இலிருந்து மீள்விக்கப்பட்டது