யானைப் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமாயண இலைங்கைப் போர், 1649-53
யானைப்படை,ஹன்னிபால், 1878

யானைப் படை யானைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட படை. போர்களில் பயன்படுத்தபடும் இவ்வகைப்படைகள் பழங்காலத்தில் இருந்தன. இப்படையில் உள்ள யானைகள் போர்செய்யத்தக்க வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவையாக இருக்கும். இவை வேலிகள் கூடாரங்கள் போன்ற பெரிய தடைகளை தகர்க்கக்கூடியவையாக இருந்தன. தற்காலப் போர்களில் பீரங்கி வண்டிகள் செய்க்கூடிய அக்கால யானைப்படைகள் செய்தன. யானையின் கொம்புகளில் வாள்கள் அல்லது கிம்புரிகள் கட்டப்பட்டிருக்கும். யானையின் முதுகின் மேல் காப்பரண் அமைத்து அதில் இருந்து வீரர்கள் அம்பு எறிவர். போரில் ஈடுபடும் யானைகளுக்கு மதம் ஊட்டி (தேம் அல்லது மத்தம் ஊட்டி), மிகுந்த வெறியுடன் இயக்குவர். போர்களில் எதிரிப் படைகளின் கோட்டை தகர்த்தல் உள்ளிட்ட பல காரியங்களிலும் அவை பெரிதும் துணைநின்றுள்ளன.[1] யானை முதன்முதலாக போரில் பயன்படுத்தப்பட்டது தென்னிந்தியாவில்தான் என்று வரலாற்றாசிரியர் தாமஸ் ட்ரவுட்மன் குறிப்பிடுகிறார். பல ஆயிரம் ஆண்டுகளாக போர்களில் ஈடுபடுத்தப்பட்ட யானைப்படையானது கடைசியாக சாயம் நாட்டு மன்னர் 1833இல் கம்போடியாவுடன் போரிட்டபோது பயன்படுத்தப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "elephantry".. (1911). Century Company. 
  2. சு. தியடோர் பாஸ்கரன் (15 செப்டம்பர் 2018). "வேழத்துக்கு ஒரு திருவிழா". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  • ந. சி. கந்தையா பிள்ளை. (2006). தமிழர் பண்பாடு. அப்பர் அச்சகம்: சென்னை.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
யானைப் படை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைப்_படை&oldid=3578135" இலிருந்து மீள்விக்கப்பட்டது