ஹன்னிபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹன்னிபால்
ஹன்னிபாலைச் சித்தரிக்கும் ஒரு பளிங்கு மார்பளவுச் சிலை, இத்தாலியின் பண்டைய நகர அரசான கபுவாவில் கண்டெடுக்கப்பட்டது
சுதேசியப் பெயர்
𐤇𐤍𐤁𐤏𐤋
பிறப்புகி. மு. 247
கார்த்திஜ், பண்டைய கார்த்தேஜ் (தற்கால தூனிசியா)
இறப்புகி. மு. 183 – கி. மு. 181 (அகவை 64–66)
லிபிச்சா, பித்தினியா (தற்கால கெப்சே, துருக்கி)
சார்பு
தரம்கார்த்தேஜினிய இராணுவத்தின் தலைவர்
போர்கள்
  • இசுப்பானியா மீதான பார்சித் படையெடுப்பு
சகுந்தும் முற்றுகை
இரண்டாம் புயூனிக் போர்
உரோன் கடப்பு யுத்தம்
திசினுசு யுத்தம்
திரேபியா யுத்தம்
திரசிமீன் ஏரி யுத்தம்
ஏசர் பலேர்னுசு யுத்தம்
செரோனியம் யுத்தம்
கன்னே யுத்தம்
நோலா யுத்தம் (கி. மு. 216)
நோலா யுத்தம் (கி. மு. 215)
நோலா யுத்தம் (கி. மு. 214)
தரேந்தும் யுத்தம் (கி. மு. 212)
கபுவா யுத்தம்
எர்தோனியா யுத்தம் (கி. மு. 212)
நுமிசிதிரோ யுத்தம்
கனுசியம் யுத்தம்
தரேந்தும் யுத்தம் (கி. மு. 209)
குருமேந்தும் யுத்தம்
குரோதோனா யுத்தம்
சமா யுத்தம்
  • உரோமானிய–செலூக்கியப் போர்
ஐரிமெதோன் யுத்தம் (கி. மு. 190)
  • பெர்கமீன்-பித்னியப் போர்
துணை(கள்)இமில்சே
பிள்ளைகள்ஒரு வேளை ஒரு மகன் இருந்திருக்கலாம்
உறவினர்கமில்கர் பார்கா (தந்தை)
கசுதுருபால் (சகோதரர்)
மாகோ (சகோதரர்)
வெளிரிய கசுதுருபால் (மைத்துனர்)
வேறு செயற்பாடுகள்அரசியல்வாதி

ஹன்னிபால் என்பவர் ஒரு கார்த்தேஜினியத் தளபதி மற்றும் அரசியல் மேதை ஆவார். இவர் இரண்டாம் புயூனிக் போரின் போது உரோமைக் குடியரசுக்கு எதிரான யுத்தத்தில் கார்த்தேஜின் படைகளுக்குத் தலைமை தாங்கினார். வரலாற்றின் மிகச் சிறந்த இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார்.

ஹன்னிபாலின் தந்தையான கம்ல்கர் பார்கா முதல் புயூனிக் போரின் போது ஒரு முன்னணிக் கார்த்தேஜினியத் தளபதியாக இருந்தார். இவரது தம்பிகள் மகோ மற்றும் கசுதுருபால் ஆகியோர் ஆவர். இவரது மைத்துனர் வெளிரிய கசுதுருபால் என்று அழைக்கப்படுகிறார். அவரும் கார்த்தேஜினிய இராணுவங்களுக்குத் தளபதியாக இருந்துள்ளார். நடு நிலக் கடல் வடிநிலப் பகுதியில் ஒரு மிகுந்த பதற்றமான காலத்தின்போது ஹன்னிபால் வாழ்ந்தார். முதலாம் புயூனிக் போரில் கார்த்தேஜைத் தோற்கடித்த பிறகு உரோமைக் குடியரசானது பெரிய சக்தியாக உருவாகியதனால் இந்தப் பதற்றம் ஏற்பட்டது. இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்ற எண்ணம் கார்த்தேஜில் இருந்தது. இது ஹன்னிபால் தனது தந்தையிடம் "என்றுமே உரோமின் நண்பனாக இருக்க மாட்டேன்" என்று செய்து கொடுத்த சத்தியத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.[1]

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Plutarch, Life of Titus Flamininus 21.3–4. Plutarch adds that "when asked what his choices would be if he had beaten Scipio, he replied that he would be the best of them all". However, Plutarch gives another version in his Life of Pyrrhus, 8.2: "Pyrrhus, Scipio, then myself".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹன்னிபால்&oldid=3612742" இலிருந்து மீள்விக்கப்பட்டது