உள்ளடக்கத்துக்குச் செல்

முகமது ஆசம் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது ஆசம் ஷா
முகலாயப் பேரரசர்
ஆசம் ஷா
முகலாயப் பேரரசர் முகமது ஆசம் ஷாவின் ஓவியம்
7ஆம் முகலாயப் பேரரசர்
ஆட்சிக்காலம்14 மார்ச் 1707 – 8 சூன் 1707
முன்னையவர்அவுரங்கசீப்
பின்னையவர்முதலாம் பகதூர் சா
பிறப்பு(1653-06-28)28 சூன் 1653
புர்ஹான்பூர், இந்தியா
இறப்பு8 சூன் 1707(1707-06-08) (அகவை 53)
ஆக்ரா, இந்தியா
புதைத்த இடம்
துணைவியர்கள்ஜகான்செப் பானு பேகம்
மனைவிகள்ரகமத் பானு பேகம்
சகெர் பானு பேகம்
கிர்பாபுரி மகால்
குழந்தைகளின்
பெயர்கள்
பீதர் பக்த்
ஜவான் பக்த்
சிக்கந்தர் ஷான்
வாலா ஜா
சிக் ஜா
வாலா சான்
அலி தபார்
கிட்டி ஆரா பேகம்
இபித் ஆரா பேகம்
நசீப் உன்னிசா பேகம்
பெயர்கள்
அபுல் பைஸ் குத்புதீன் முகமது ஆசம்
மரபுதைமூரிய வம்சம்
தந்தைஅவுரங்கசீப்
தாய்தில்ரஸ் பானு பேகம்
மதம்இசுலாம்

அபுல் பைசு குத்புதீன் முகமது ஆசம் ஷா (Abu'l Faaiz Qutb-ud-Din Muhammad Azam) (28 சூன் 1653 – 8 சூன் 1707), பொதுவாக ஆசம் ஷா என அறியப்படும் அவுரங்கசீப்ப்பின் மூத்த மகன் ஆவார். ஆசம் ஷா 14 மார்ச் 1707 முதல் 8 சூன் 1707 முடிய முகலாயப் பேரரசை குறுகிய காலம் ஆண்டவர்.

முகமது ஆசம் ஷாவிற்கு, 12 ஆகஸ்டு 1681 அன்று, அவுரங்கசீப்பால் பட்டத்து இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.[2] இவர் பட்டத்து இளவரசராக இருந்த போது, தன் தாய் தில்ரஸ் பானு பேகத்தின் கல்லறையை, அவுரங்காபாத் நகரத்தில் பீபி கா மக்பாரா எனும் பெயரில் கட்டினார்.

ஆசம் ஷா, மால்வா, குஜராத், வங்காளம் மற்றும் தக்காணம் போன்ற முகலாயப் பேரரசின் மாகாணங்களின் ஆளுநராக இருந்தவர். 14 மார்ச் 1707 அன்று அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பின்னர் ஆசம் ஷா, அகமத்நகரில் முகலாயப் பேரரசராக முடிசூட்டிக்கொண்டார்.

ஆசம் ஷாவின் ஒன்றுவிட்ட சகோதரன் முதலாம் பகதூர் சா, ஆசம் ஷாவையும் அவரது மூன்று மகன்களையும் போரில் கொன்று 8 சூன் 1707 அன்று, தில்லியில் முகலாய அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Irvine, ப. 34.
  2. Sir Jadunath Sarkar (1925). Anecdotes of Aurangzib. M.C. Sarkar & Sons. p. 21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_ஆசம்_ஷா&oldid=3657637" இலிருந்து மீள்விக்கப்பட்டது