மரியம் உசு-சமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியம் உசு-சமானி பேகம் சாகிபா
مریم الزمانی بیگم صاحبہ
முகலாயப் பேரரசி
மரியம் உசு-சமானியின் ஓவியம்
துணைவர்சலாலுதீன் முகமது அக்பர்
முழுப்பெயர்
இராச்குமாரி ஈரா குன்வாரி
அரச குலம்முகலாயர்
தந்தைபார்மல்
பிறப்புஅக்டோபர் 1, 1542
அமேர்
இறப்பு1622
அடக்கம்மரியத்தின் கல்லறை
சமயம்இந்து

மரியம் உசு-சமானி பேகம் சாகிபா அல்லது இராச்குமாரி ஈரா குன்வாரி அல்லது உருக்மாவத்தி சாகிபா அல்லது அர்கா பாய் (मारियम उज़-ज़मानी बेगम साहिबा அல்லது राजकुमारी हिरा कुंवरी அல்லது रुक्मावती साहिबा அல்லது हर्खाबाई, பாரசீகம்: مریم الزمانی بیگم صاحبہ) என்பவர் முகலாயப் பேரரசரான அக்பரைத் திருமணஞ்செய்த பின்பு, முகலாயப் பேரரசியாகிய இராசபுத்திர இளவரசி ஆவார். மரியம் உசு-சமானி ஆமேரின் அரசரான பார்மலின் மூத்த மகள் ஆவார்.[1] இவர் பேரரசர் சகாங்கீரின் தாயும் ஆவார்.[2]

முகலாய வரலாற்றில் இவர் பெயர் மரியம் உசு-சமானி என்றே பதிவாகியுள்ளது. இதனாலேயே இலாகூரின் அரணமைக்கப்பட்ட நகரத்தில் (இப்போது பாக்கித்தானில் அமைந்துள்ளது.) மரியம் சமானி பேகத்தின் பெயரால் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.[3] இந்தப் பள்ளிவாசல் மரியம் உசு-சமானியின் மகனான சகாங்கீரால் கட்டப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

இராச்குமாரி ஈரா குன்வாரி பேரரசர் அக்பரை பெப்ரவரி 6, 1562 இல் இந்தியாவில் இராச்சசுத்தானிலுள்ள சாம்பார் எனும் இடத்தில் திருமணஞ்செய்தார். இவர் பேரரசர் அக்பரின் மூன்றாவது மனைவி ஆவார். பேரரசர் அக்பரின் முதலாவது மனைவி உருக்காயா பேகம் ஆவார். இரண்டாவது மனைவி சலீமா சுல்தான் ஆவார். திருமணத்தின் பின்பு, இராச்குமாரி ஈரா குன்வாரிக்கு மரியம் உசு-சமானி என்ற பெயர் வழங்கப்பட்டது.[4]

இவர் 1622 ஆம் ஆண்டு இறந்தார்.

சோதா பாய்[தொகு]

பேரரசர் அக்பரின் மனைவி, சகாங்கீரின் தாய் சோதா பாய் என்று அறியப்பட்டதாகவும் ஒரு பார்வை உண்டு. சகாங்கீரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் துற்கு-இ-சகாங்கிரி என்ற நூலில் சோதா பாய் என்று யாருமே குறிப்பிடப்படவில்லை. அக்பர்நாமாவிலோ முகலாயர் கால வரலாற்றாதாரங்களிலோ மரியம் உசு-சமானிக்குச் சோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாகத் தகவலில்லை.

சிரின் மூசுவியின் கருத்துப்படி, 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளிலேயே வரலாற்று இலக்கியங்களில் பேரரசர் அக்பரின் மனைவியைக் குறிக்கச் சோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.[5] இம்தியாசு அகமதின் கருத்துப்படி, பேரரசர் அக்பரின் மனைவிக்குச் சோதா அக்பர் எனும் பெயர் முதன்முறையாக அன்னல்சு அண்டு ஆண்டிக்குட்டீசு ஆவு இராச்சசுத்தான் என்ற நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரைப்படத்தில்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ["'பரிமாற்றம், ஆக்கிரமிப்பு இந்தியாவுக்கு இசுலாத்தைக் கொண்டு வரவில்லை (ஆங்கில மொழியில்)'" இம் மூலத்தில் இருந்து 2012-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121019212837/http://articles.timesofindia.indiatimes.com/2007-06-24/india/27967423_1_asoka-islam-throne/2.  'பரிமாற்றம், ஆக்கிரமிப்பு இந்தியாவுக்கு இசுலாத்தைக் கொண்டு வரவில்லை (ஆங்கில மொழியில்)']
  2. "ஆக்ரா பற்றி (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2012-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120526025222/http://www.ercotravels.com/travel-guide/north-india-travel-guide/agra.html. 
  3. மரியம் சமானிப் பள்ளிவாசல் (1614இல் கட்டப்பட்டது) (ஆங்கில மொழியில்)
  4. சோதாபாய் உண்மையாகவே இருந்தாரா (ஆங்கில மொழியில்)?
  5. ["அக்பர்-சோதாபாய் பற்றிய மீள்பார்வையில் உண்மைச் செய்தி, புனைவுக் கலப்பு (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2012-12-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121208132134/http://articles.timesofindia.indiatimes.com/2005-12-10/mumbai/27860291_1_anarkali-myth-jodhabai-he.  அக்பர்-சோதாபாய் பற்றிய மீள்பார்வையில் உண்மைச் செய்தி, புனைவுக் கலப்பு (ஆங்கில மொழியில்)]
  6. ஐஸ்வர்யா ராய் ஹிருத்திக்ரோஷன் நடித்த 'ஜோதா அக்பர்' வசூலில் புதிய சாதனை!
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியம்_உசு-சமானி&oldid=3793010" இருந்து மீள்விக்கப்பட்டது