ஜோதா அக்பர்
ஜோதா அக்பர் | |
---|---|
Theatrical release poster | |
இயக்கம் | அசுதோஷ் கோவாரிகர் |
தயாரிப்பு | ரோனி ஸ்க்ரூவாலா அசுதோஷ் கோவாரிகர் |
கதை | கே.பி.சக்சேனா (உரையாடல்) |
திரைக்கதை | ஹைதர் அலி அசுதோஷ் கோவாரிகர் |
கதைசொல்லி | அமிதாப் பச்சன் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | கிருத்திக் ரோஷன் ஐஸ்வர்யா ராய் |
ஒளிப்பதிவு | கிரண் தியோஹன்ஸ் |
படத்தொகுப்பு | பல்தேவ் சலுஜா |
கலையகம் | அசுதோஷ் கோவாரிகர் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் |
விநியோகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 15, 2008 |
ஓட்டம் | 214 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி உருது |
ஆக்கச்செலவு | ₹40 கோடி[1] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹120 crores[2][3] |
ஜோதா அக்பர் (Jodhaa Akbar) என்பது 2008 ஆம் அண்டைய இந்திய இந்தி மொழி வரலாற்று காதல் நாடக இசை புனைகதை திரைப்படமாகும்.[4] அசுதோஷ் கௌரிகர் இயக்கிய இப்படத்தில் கிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். 16 ஆம் நூற்றாண்டில் பின்னணியில் உருவாக்கபட்ட இந்தப் படமானது முகலாயப் பேரரசின் முஸ்லிம் பேரரசர் அக்பர் மற்றும் அம்பர் இந்து இளவரசி ஜோதா பாய் ஆகியோருக்கு இடையிலான கற்பனையான[5] வாழ்க்கை, காதல் அவர்களின் அரசியல் திருமணம் ஆகியவற்றை சித்தரிக்கிறது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இசையானது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. தூம் 2 (2006) படத்திற்குப் பிறகு இந்த படம் ரோஷனுக்கும் ராய் பச்சனும் இணைந்து நடித்த இரண்டாவது படமாகும்.[6]
ஜோதா அக்பர் 15, பிப்ரவரி, 2008 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.[7][8] வெளியானதும், இது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. மேலும் 2008 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த நான்காவது இந்தித் திரைப்படம் என்ற இடத்தைப் பெற்றது.
ஜோதா அக்பர் சாவோ பாலோ சர்வதேச திரைப்பட விழாவில்[9] சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான பார்வையாளர் விருதையும், கோல்டன் மின்பார் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளையும் பெற்றது.[10] 56 வது தேசிய திரைப்பட விருதுகளில், இப்படம் சிறந்த நடன அமைப்பிற்கான விருது (சினி பிரகாஷ் மற்றும் "அசீம்-ஓ-ஷான் ஷஹேன்ஷா" ரேகா பிரகாஷ்) மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு . (நீதா லுலா) என இரண்டு விருதுகளைப் பெற்றது. 54வது பிலிம்பேர் விருதுகளில், சிறந்த நடிகை (ராய் பச்சன்), சிறந்த துணை நடிகர் (சூத்), சிறந்த இசையமைப்பாளர் (ரஹ்மான்) உட்பட 11 பரிந்துரைகளைப் பெற்றது மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் (கோவாரிகர்), சிறந்த நடிகர் உட்பட 5 விருதுகளைப் பெற்றது. இது 10 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் மற்றும் 7 ஸ்டார் ஸ்கிரீன் விருதுகளைப் பெற்றது. மேலும் 3வது ஆசிய திரைப்பட விருதுகளில் இரண்டு பரிந்துரைகளைப் பெற்றது.[11]
கதை
[தொகு]முகலாயப் பேரரசின் பேரரசராக உள்ள சிறுவன் ஜலாலுதீன், போருக்குப் பிறகு தோற்கடிக்கபட்ட எதிரிகளை இரக்கமின்றி கொல்ல பைராம் கானால் கற்பிக்கபடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, வளர்ந்துவிட்ட ஜலாலுதீன் மற்றொரு போருக்குப் பிறகு, பைராம் கானை முதன்முறையாக எதிர்த்து, கருணை, மரியாதை, இராஜதந்திரம் ஆகியவையே தான் முன்னோக்கி செல்லும் வழி என்று முடிவு செய்கிறார்.
அம்பர் இராச்சியத்தின் அரசர் பார்மலின் மகள் ஜோதாவுக்கும் அஜப்கரின் இளவரசர் ரத்தன் சிங்கிற்கு திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கபடுகிறது. அரசர் பார்மல் தன் மகன் பகவந்த் தாஸ் தனது அடுத்த வாரிசாக இருப்பார் என்றும், பகவந்த் தாசுக்குப் பதிலாக அரசரின் முடி வாரிசாக இருக்க விரும்பும் ஜோதாவின் ஒன்றுவிட்ட அண்ணனான சுஜாமல் அவருக்குக் கீழ் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவிக்கிறார். தனக்கு உரிமையான அரியாசனத்தை இழந்த சுஜமால் கோபத்துடன் இராச்சியத்தை விட்டு வெளியேறுகிறார். பின்னர் சக்கரவர்த்தியாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஜலாலுதீனின் மைத்துனரான ஷரிஃபுதீன் உசேனுடன் சென்று சேர்கிறார். ஒரு கட்டத்தில் ராஜா பர்மால் ஜலாலுதீனுடன் சமாதான உறவு கொள்ள விரும்புகிறார். தன் மகளை பேரரசருடன் திருமணம் செய்துவைப்பதன் மூலம் இராசதந்திர உறவுகளை வலுப்படுத்தும் யோசனையை முன்மொழிகிறார். அதற்கு ஜலாலுதீன் ஒப்புக்கொள்கிறார். ஆனால் இதனால் ராணா உதய் சிங் உட்பட இராஜபுதனத்தின் மற்ற மன்னர்களுடனான பார்மலின் கூட்டணி உடைக்கிறது. ஜோதா தான் ஒரு அரசியல் பகடைக்காயாக பயன்படுத்தப்படுவதை உணர்கிறாள். அவள் சுஜாமாலுக்கு தன்னை மீட்கும்படி ஒரு கடிதம் எழுதுகிறாள், ஆனால் அதை அனுப்பமல் இருந்துவிடுகிறாள்.
ஜோதா ஜலாலுதீனை சந்திக்க வேண்டுகிறாள். மேலும் திருமணத்திற்குப் பிறகும் தனது சமயத்தைக் கடைப்பிடிக்க அனுமதி வேண்டும் என்றும், அவளுக்காக ஆக்ரா கோட்டையில் ஒரு இந்து கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் கோருகிறாள்.[12] அவள் ஆச்சரியமடையும் விதமாக, ஜலாலுதீன் அதற்கு ஒப்புக்கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு, ஜோதா ஜலாலுதீனுடன் தாம்பத்திய வாழ்வு நடத்த தயக்கப்படுகிறாள். அவர் ஜோதாவிடம் தங்களுக்கு இடையிலான இடைவெளியை சரிசெய்வதாக உறுதியளிக்கிறார்.
பேரரசர் ஜலாலுதீனின் வளர்ப்புத் தாயான மகம் அங்காவின் மகனும், சகோதரர் உறவு உள்ள ஆதாம் கான் ஒரு தளபதியாக உள்ளார். ஜலாலுதீனின் தலைமை அமைச்சரான அட்கா கானைக் ஆதம் கானின் போர்க்குற்றங்கள் அம்பலப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக அவரைக் கொல்கிறான். இதனால் ஆத்திரம் அடைந்த ஜலாலுதீன் ஜோதா பார்ப்பதை அறியாமல் அரண்மனை மாடியில் இருந்து ஆதம் கானை கீழே எறிந்து கொல்லச் செய்கிறார். ஜலாலுதீனின் வன்முறைமீது அச்சுபவளாகவும் , நீதி பரிபாலனத்தின் மீதான அவனது தீவிரமான நடவடிக்கையை மதித்து நடப்பதற்கும் இடையே அவள் ஊசலாடுகிறாள்.
மகம் அங்க ஜோதாவை வெறுக்கிறாள். ஜலாலுதீனின் திருமண வாழ்வை அழிக்க அவள் சதி செய்கிறாள். ஜலாலுதீன் முன் ஜோதாவை அவமானப்படுத்துகிறாள். சுஜாமாலுக்கு ஜோதா முன்னர் எழுதி வைத்திருந்த கடிதம் மகம் அங்கவினால் கண்டுபிடிக்கப்படுகிறது. அதை சுஜாமனுக்கு அனுப்புகிறாள். கடிதத்தைக் கண்ட சுஜாமால் ஜோதாவைச் சந்திக்க ரகசியமாக வரும்போது, ஜோதா தன் காதலனைச் சந்திக்கச் சென்றதாக ஜலாலுதீனிடம் பொய்யான தகவலைக் கூறுகிறாள். ஜோதா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைக்கும் ஜலாலுதீன் சுஜாமாலை கைது செய்ய தனது ஆட்களை அனுப்புகிறார். ஆனால் சுஜாமல் தப்பிச் சென்றுவிடுகிறான். ஜலாலுதீன் ஜோதாவை மீண்டும் அம்பரிடம் திருப்பி அனுப்புகிறார். தன் நடத்தை மீது ஐயமடைந்ததற்காக கோபமடைந்த ஜோதா ஜலாலுதீனிடம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. பின்னர் ஜலாலுதீன் உண்மையைக் கண்டுபிடித்து அம்பர் சென்று, ஜோதாவிடம் மன்னிப்பு கேட்டு, தன்னுடன் திரும்பி வருமாறு கேட்கிறார். ஆனால் அவள் மறுக்கிறாள். அதற்கு பதிலாக, ஜோதா அவர் தனது உறவுகளையும், பேரரசின் செயல்பாட்டையும் விசாரிக்கச் சொல்கிறாள்.
ஜலாலுதீன் திரும்பி வந்து தன் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்ள மாறுவேடத்தில் சாமானிய மக்கள் வழியாக பயணிக்கிறார். அப்போதுதான், முஸ்லீம் அல்லாதவர்கள் மீதான ஜிஸ்யா வரியால் குடிமக்கள் முகலாய ஆட்சியில் மகிழ்ச்சியடையவில்லை என்பதை அவர் உணர்கிறார். ஜலாலுதீன் அதை ஒழித்து, அனைத்து சமயத்தினருக்கும் தனது பேரரசில் உரிமைகள் இருப்பதாக அறிவிக்கிறார். இது ஜோதாவை ஈர்க்கிறது அவள் அவரிடம் திரும்பி வருகிறாள். அவரது குடிமக்கள் அவருக்கு அக்பர்(பெரியவர்) என்ற பட்டத்தை வழங்குகிறார்கள். ஒரு கொண்டாட்டத்தின் போது, ஷரிஃபுதீன் உசேன் அனுப்பிய ஒரு கொலையாளி அக்பர் மீது நச்சு பூசிய அம்பை எய்கிறான். ஜோதா செவிலியாக இருந்து அக்பர் மீண்டும் ஆரோக்கி வாழ்வுக்குத் திரும்ப உதவுகிறாள். இதனால் மேலும் இந்த இணையர் உண்மையிலேயே ஆழமாக காதலிக்கத்துவங்குகின்றனர்.
சுஜமால், ஷரிஃபுதீன் உசேன் மற்றும் அவரது கூட்டாளிகள் அம்பர் மீது தாக்குதல் நடத்த அணிவகுத்துச் செல்கின்றனர். ஷரிபுதீன் பேரரசரை கொல்ல சதி செய்வதை சுஜாமால் அறிகிறான். இந்த சதி குறித்து அக்பரை எச்சரிக்க அவன் விரைவாக அவர்களிடமிருந்து வெளியேறுகிறான். ஷெரீஃபுதீனின் வீரர்கள் சுஜாமாலைத் துரத்திச் சென்று அம்புகளைப் பாய்ச்சுகின்றனர். அவன் இறப்பதற்கு முன் பேரரசருக்கு உள்ள ஆபத்து குறித்து அவரிடம் தெரிவிக்கிறான். அக்பர் ஷெரீஃபுதீனை சண்டையில் தோற்கடித்து, பின்னர் தனது ஒன்றுவிட்ட சகோதரி பக்ஷி பானு பேகத்துக்காக அவனைக் கொல்லாமல் விடுகிறார். இறுதியில், மக்கள் ஒருவருக்கொருவர் பிறர் சமயங்களை மதித்து மரியாதை செய்தால் இந்துஸ்தான் அமைதியான, வளமான பூமியாக இருக்கும் என்று அக்பர் அறிவிக்கிறார். அவர்களின் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றாலும், ஜோதாவும் அக்பரும் அமைதியாக இணைந்து வரலாறு படைத்தனர் என்ற குரல்வழியில் படம் முடிகிறது.
நடிகர்கள்
[தொகு]- கிருத்திக் ரோஷன்... பேரரசர் அக்பர்
- பார்த் டேவ்... இளம் அக்பர்
- ஐஸ்வர்யா ராய்... இளவரசி ஜோதா பாய்
- ருச்சா வைத்யா இளம் ஜோதா பாய்
- சோனு சூத்... இளவரசர் சுஜமால்
- குல்பூஷன் கர்பந்தா... ராஜா வீர் பர்மல்
- சுஹாசினி முலே... ஜோதாவின் தாய் அரசி பத்மாவதி
- ராசா முராத்... ஷம்சுதீன் அட்கா கான்
- பூனம் சின்ஹா... அமீதா பானு பேகம்
- ராஜேஷ் விவேக்... சுக்தாய் கான், அக்பர் தளபதி
- பிரமோத் மௌத்தோ... தோடர் மால், அக்பர் அரசவையில் நிதி அமைச்சர்
- இலா அருண்... மகம் அங்கா
- நிகிடின் தீர்... சரிபுதீன் உசைன்
- திக்விஜய் புரோகித்... அரசர் பகவந்த் தாஸ்
- யூரி சூரி... பைராம் கான்
- சுரேந்திர பால்... இராஜபுதன ஆட்சியாளர் இராணா உதய சிங்
- விஸ்வ மோகன் படோலா... அக்பரின் அரசவையாளர் மற்றும் ஹுசைனின் கூட்டாளியான சதிர் அதாசி
- பிரத்மேஷ் மேத்தா... சந்திரபன் சிங்
- ஷாஜி சவுத்ரி... ஆதாம் கான்
- மானவ நாயக்... ஜோதாவின் வேலைக்காரன் நீலாக்சி
- திஷா வகானி... ஜோதாவின் வேலைக்காரி மாதவி
- கவி குமார் ஆசாத்... அக்பர் தனது மாறுவேட பயணத்தில் பார்க்கும் ஒரு கோதுமை விற்பனையாளர்.
- அபிர் அப்ரார்... பக்ஷி பானு பேகம்
- இந்திரஜித் சர்க்கார்... மகேஷ் தாஸ் / பீர்பால்
- அமன் தலிவால்... ராஜ்குமார் ரத்தன் சிங்
- பிரதீப் சர்மா... ஷேக் முபாரக்
- பப்பு பாலியஸ்டர்... முல்லா தோ-பியாசா
- பால்ராஜ்... ராஜா பால்ராஜ் சிங்
- சுதான்ஷு ஹக்கு... ஷிமல்மார்க் இராச்சியத்தின் ராஜா
- சையத் பத்ருல் ஹசன் கான் பகதூர்... முல்லா தோ-பியாசா
- தில்னாஸ் இரானி... சலீமா
- தேஜ்பால் சிங் ராவத்... ஆக்ரா கோட்டை நிர்வாகி
- ஷெஜோர் அலி... ஹெமு
- உல்ஹாஸ் பார்வே... மங்கேஷ்வர் அரசர்
- ஜஸ்ஸி சிங்... பத்ர சாம்ராஜ்ய அரசர்
- ராஜு பண்டிட்... பதி இராச்சிய அரசர்
- பாரத் குமார்... ராஜா சவுகான்
- ராஜீவ் சேகல்... விராட ராஜ்ஜியத்தின் அரசர்
- அதிவி சேஷ்... பாடல் பின்னணி நடிகர்கள்
- அமிதாப் பச்சன்... கதை சொல்லி (குரலில்)
குழு
[தொகு]- கதை :ஹைதர் அலி
- திரைக்கதை :ஹைதர் அலி மற்றும் அஷுதோஷ் கோவரீகர்
- வசனம்: கே.பி.சக்சேனா
- அலங்கார நிபுணர் :ஜேமீ வில்சன்
- தயாரிப்பு உத்தி :நிதின் சந்திரகாந்த் தேசாய்
- வரைகலை : பங்கஜ் கான்பூர் (டாடா எல்க்ஸ்சி விஷுவல் கம்ப்யுடிங் லேப்ஸ்)
- முதன்மை உதவி இயக்குனர் :கரன் மல்ஹோத்ரா
- ஒளிப்பதிவு :கிரண் தியோஹன்ஸ்
பாடல்கள்
[தொகு]அதிகாரப்பூர்வ இசைத்தட்டு ஐந்து பாடல்களையும் இரண்டு கருவி இசைக்கோப்புகளையும் கொண்டுள்ளது. இசைத்தட்டு ஜனவரி 18 ,2008 இல் வெளியிடப்பட்டது
பாடல் | பாடியவர்(கள்) | நிமிடங்கள் | குறிப்புகள் |
---|---|---|---|
அசீம்-ஓ-ஷான் ஷாகின்ஷா | முகமது அஸ்லாம், போனி சக்ரபோர்த்தி மற்றும் குழுவினர் | 5:54 | ரித்திக் ரோஷனும், ஐஸ்வர்யா ராயும் |
ஜான்-ஈ-பஹாரா | ஜாவேத் அலி | 5:15 | ரித்திக் ரோஷனும், ஐஸ்வர்யா ராயும் |
க்வாஜா மேரே க்வாஜா | ஏ. ஆர். ரகுமான் (பாடல் : காஷிப்) | 6:56 | ஹைதர் அலி [அமின் ஹாஜீ] [கரீம் ஹாஜீ] ரித்திக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா ராய் |
இன் லமோன் கே தாமன் மேய்ன் | சோனு நிகமும் மதுஸ்ரீயும் | 6:37 | ரித்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் |
மன் மோகனா | பேலா ஷிண்டே | 6:50 | ரித்திக் ரோஷனும், ஐஸ்வர்யா ராயும் |
ஜான்-ஈ -பஹாரா | வாத்தியம்- புல்லாங்குழல் | 5:15 | வாத்திய இசை |
க்வாஜா மேரே க்வாஜா | வாத்தியம் - ஒபோ | 2:53 | வாத்திய இசை |
- தமிழ்[13]
அனைத்து பாடல் வரிகளும் நா. முத்துக்குமாரால் எழுதப்பட்டன.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | கலைஞர்(கள்) | நீளம் | |||||||
1. | "அசீம்-ஓ-ஷான் ஷாஹேன்ஷா" | முகமது அஸ்லாம், போனி சக்ரவர்த்தி, ராகுல் நம்பியார், கோபிகா பூர்ணிமா, பாத்திமா | 5:54 | |||||||
2. | "முழுமதி அவளது முகமாகும்" | ஸ்ரீநிவாஸ் | 5:15 | |||||||
3. | "குவாஜா எந்தன் குவாஜா" | ஏ. ஆர். ரகுமான் | 6:56 | |||||||
4. | "இதயம் இடம் மாறியதே" | கார்த்திக், சித்ரா | 6:37 | |||||||
5. | "மன மோகனா" (வரிகள்: மஷூக் ரஹ்மான்) | சாதனா சர்கம் | 6:50 | |||||||
6. | "முழுமதி" | இசைக்கருவி (புல்லாங்குழல்: நவீன்குமார்) | 5:15 | |||||||
7. | "குவாஜா எந்தன் குவாஜா" | இசைக்கருவி (ஓபோ) | 2:53 | |||||||
மொத்த நீளம்: |
39:43 |
வரலாற்று துல்லியம்
[தொகு]திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பல நிகழ்வுகள் கற்பனையானவை. சில ராஜ்புத்திரக் குழுக்கள் ஜோதாவை அக்பரின் மகன் , ஜஹாங்கீர், திருமணம் செய்து கொண்டதாகவும், அக்பர் அல்ல என்றும் கூறின.[14][15] இருப்பினும் ஜஹாங்கீரின் அந்த மனைவியின் பெயர் 'ஜோத் பாய்' இல்லை 'ஜோதா பாய்' என்று முன்மொழியப்பட்டது.
முகலாயர் காலத்தில் அக்பரின் ராஜபுத்திர மனைவி "ஜோதா பாய்" என்று அழைக்கப்படவில்லை என்றும், அவர் மரியம்-உஸ்-ஜமானி என்ற பட்டத்துடன் குறிப்பிடப்பட்டதாகவும் பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஷிரின் மூஸ்வியின் கூற்றுப்படி, அக்பர்நாமா (அக்பரால் அங்கீகரிக்கபட்ட அக்பரின் வாழ்க்கை வரலாறு) அல்லது அந்தக் காலத்தின் எந்த வரலாற்று நூலும் அவரை ஜோதா பாய் என்று குறிப்பிடவில்லை.[16] 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் வரலாற்று எழுத்துக்களில் அக்பரின் மனைவியைக் குறிக்க "ஜோதா பாய்" என்ற பெயர் முதலில் பயன்படுத்தப்பட்டது என்று மூஸ்வி குறிப்பிடுகிறார்.[16]
பட்னா உள்ள குடா பக்ஷ் ஓரியண்டல் பொது நூலகத்தின் இயக்குனரான வரலாற்றாசிரியர் இம்தியாஸ் அகமதுவின் கூற்றுப்படி, லெப்டினன்ட்-கர்னல் ஜேம்ஸ் டோட், தனது அன்னல்ஸ் அண்ட் ஆண்டிக்விட்டிஸ் ஆஃப் ராஜஸ்தான் புத்தகத்தில் அக்பரின் மனைவிக்கு "ஜோதா" என்ற பெயரை முதன்முறையாகப் பயன்படுத்தினார்.. அஹ்மத்தின் கூற்றுப்படி, டோட் ஒரு தொழில்முறை வரலாற்றாசிரியர் அல்ல.[17] ஜோதா பாய் என்பது அக்பரின் ராஜ்புத்திர ராணியின் பெயர் அல்ல; அது ஜஹாங்கீரின் ராஜ்புத்திர மனைவியின் பெயர் என்று என். ஆர். பரூக்கி கூறுகிறார்.
பிற பதிப்புகள்
[தொகு]இப்படத்தின் வெற்றியின் காரணமாக, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இதே தலைப்பின் கீழ் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.[18]
வரவேற்பு
[தொகு]பாக்ஸ் ஆபிஸ்
[தொகு]அமெரிக்க மற்றும் லண்டன் மக்களிடையே இத்திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. [1] வடஅமெரிக்க திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே இதன் வருமானம் 1.3 மில்லியன் டாலர்களை மிஞ்சியது, மொத்தமாக 3,440,718 டாலர்களை அள்ளியது. இந்திய திரையரங்குகளில் வருமானம் சற்றே குறைவாக இருந்தாலும், திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே ரூ.24.75 கோடியை தாண்டியது. திரை அபிமானிகளின் நேர்மறை விமர்சனம் காரணமாக நான்காம் வாரத்தில் ரூ.50 கோடியை தாண்டி , மொத்தம் ரூ.62 கோடியை எட்டியது.[19][20]
- சிறந்த திரைப்படம் -ரோனி ஸ்க்ருவாலா மற்றும் ஆசுதோஷ் கோவார்
- சிறந்த இயக்குநர் - ஆசுதோஷ் கோவாரிகர்
- சிறந்த நடிகர் -ரித்திக் ரோஷன்
- சிறந்த பாடலாசிரியர்-ஜாவேத் அக்தர்
- சிறந்த பின்னணி பாடல்-ஏ.ஆர்.ரஹ்மான்
- சிறந்த திரைப்படம் - [ரோனி ஸ்க்ருவாலா மற்றும் ஆசுதோஷ் கோவாரிகர்
- சிறந்த நடிகர் - ரித்திக் ரோஷன்
- சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
- சிறந்த நடனாசிரியர் - "க்வாஜா மேரே க்வாஜா"வுக்காக ராஜு கான்
- சிறந்த இயக்குநர் - அஷூதோஷ் கோவரிகர்
- சிறந்த பிரபல நடிகை - ஐஸ்வர்யா ராய் பச்சன்
- சிறந்த நடிகை- ஐஸ்வர்யா ராய் பச்சன்
- சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - ரவி தெவான்
- சிறந்த எதிர்மறை பாத்திரம்- இலா அருண்
- சிறந்த கலை - நிதின் சந்த்ரகாந்த் தேசாய்
- சிறந்த பாடல் வரிகள் - காஷிப் "க்வாஜா மேரே க்வாஜா" வுக்காக
- சிறந்த இசை- ஏ.ஆர்.ரஹ்மான்
- சிறந்த பாடகர் - ஏ. ஆர். ரஹ்மான் "க்வாஜா மேரே க்வாஜா" வுக்காக
- சிறந்த நுண்கலை - பங்கஜ் கான்பூர்
- வென்றது , ஸ்டார் ஆப் தி இயர் - ரித்திக் ரோஷன்
- வென்றது , ட்ரீம் இயக்குநர் - ஆசுதோஷ் கோவாரிகர்
- வென்றது , தி நியு மெனஸ் - நிகிடின் தீர்[21]
- சிறந்த கலை
- சிறந்த பின்னணி பாடல்
- சிறந்த ஆடை வடிவமைப்பு
- சிறந்த படத்தொகுப்பு
- சிறந்த ஒப்பனை
வீ.ஷாந்தாராம் விருதுகள்
[தொகு]- வென்றது , சிறந்த இயக்குனருக்கான வெண்கல விருது- ஆசுதோஷ் கோவாரிகர்
- வென்றது , சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராய்
- வென்றது , சிறந்த இசை - ஏ. ஆர். ரஹ்மான்
சர்வதேச விருதுகள்
[தொகு]- வென்றது , சிறந்த திரைப்படம் (கிராண்டு பிரிக்ஸ்) - அஷூதோஷ் கோவரீகர்
- வென்றது , சிறந்த நடிகருக்கான விருது - ரித்திக் ரோஷன்
- வென்றது , சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பார்வையாளர் விருது - அஷூதோஷ் கோவரீகர்
- சிறந்த திரைப்பட ஒளிப்பதிவு விருதுக்கென பரிந்துரைக்கப்பட்டது - கிரண் தியோஹான்ஸ்
- சிறந்த தயாரிப்பு நிபுணருக்கான விருதுக்கென பரிந்துரைக்கப்பட்டவர்-நிதின் சந்திர தேசாய்
- சிறந்த இசைஅமைப்பாளர் விருதுக்கென பரிந்துரைக்கப்பட்டவர்- ஏ. ஆர். ரஹ்மான்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bollywood goes minimalist with Jodhaa Akbar promotion". The Financial Express. 12 February 2008. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
- ↑ "Despite early lull, Bollywood ends 2008 on a high note". The Financial Express. 4 January 2009. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
- ↑ "Controversies notwithstanding, 'Jodhaa Akbar' grosses Rs 120 cr". Oneindia.com. 20 March 2008. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
- ↑ "Who was the real Akbar? The one played by Hrithik Roshan or that described by Abu'l Fazl". Quartz (in ஆங்கிலம்). 2019-10-21. பார்க்கப்பட்ட நாள் 2024-09-07.
- ↑ "Who was the real Akbar? The one played by Hrithik Roshan or that described by Abu'l Fazl". Quartz (in ஆங்கிலம்). 2019-10-21. பார்க்கப்பட்ட நாள் 2024-09-07.
- ↑ "Jodhaa Akbar Synopsis". apunkachoice.com. Archived from the original on 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-02-04.
- ↑ "25 January 2008". IndiaFM. 12 September 2007. பார்க்கப்பட்ட நாள் 9 January 2008.
- ↑ "Aishwarya gets summons by Customs Department". IndiaFM. 15 November 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-10-03.
- ↑ "Jodhaa Akbar wins 'Audience Award' at Sao Paulo International Film Festival". Bollywood Hungama. 3 November 2008. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
- ↑ 10.0 10.1 "Jodhaa Akbar, Hrithik win awards at Golden Minbar Film Festival in Russia". Bollywood Hungama. 23 October 2008. Archived from the original on 8 July 2011. பார்க்கப்பட்ட நாள் 31 January 2009.
- ↑ 11.0 11.1 "Awards for Jodhaa Akbar (2008)". ஐ. எம். டி. பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 31 January 2009.
- ↑ "A Hindutva informatics governs Jodhaa Akbar’ s utopic nostalgia for interreligious love [...] One of the conditions of marriage that the Hindu princess lays before the emperor is her refusal to convert to Islam. While this may be considered laudable feminist politics [...] this move (re)produces normative assumptions about Hindu indigeneity".
- ↑ "Jodha Akbar Songs – Jodha Akbar Tamil Movie Songs – Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews". Raaga.com. Archived from the original on 20 February 2014. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014.
- ↑ "Jodhaa Akbar:: Official Website". Jodhaaakbar.com. Archived from the original on 12 May 2009. பார்க்கப்பட்ட நாள் 27 October 2008.
- ↑ "Jodhaa Akbar not being screened in Rajasthan". https://www.bollywoodhungama.com/news/box-office-special-features/2008-30-screens-in-u-k/.
- ↑ 16.0 16.1 Ashley D'Mello (10 December 2005). "Fact, myth blend in re-look at Akbar-Jodha Bai". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 8 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121208132134/http://articles.timesofindia.indiatimes.com/2005-12-10/mumbai/27860291_1_anarkali-myth-jodhabai-he.
- ↑ Syed Firdaus Ashraf (5 February 2008). "Did Jodhabai really exist?". ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 15 February 2008.
- ↑ "Jodhaa Akbar Review".
- ↑ "BoxOffice India.com". Boxofficeindia.com. Archived from the original on 2012-07-28. பார்க்கப்பட்ட நாள் 2008-10-27.
- ↑ "And the rest isn't history- Hindustan Times". Hindustantimes.com. Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2008-10-27.
- ↑ http://www.bollywoodhungama.com/features/2009/02/16/4855/index.html
- ↑ http://www.indiantelevision.com/aac/y2k8/aac796.php
- ↑ "Jodhaa Akbar wins Audience Award at Sao Paulo International Film Fest". Business of Cinema. 2008-11-03. Archived from the original on 2009-02-14. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
{{cite web}}
: Unknown parameter|accesdsate=
ignored (help)