உள்ளடக்கத்துக்குச் செல்

இலா அருண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலா அருண்
இலா அருண்
பின்னணித் தகவல்கள்
பிறப்புசோத்பூர், ராஜஸ்தான், இந்தியா
இசை வடிவங்கள்இந்திய திரை இசை, பின்னணிப் பாடகர், இந்திய பாரம்பரிய இசை, பாப் பாடகர்
தொழில்(கள்)பாடுதல், நடிகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1979 முதல் தற்போது வரை

இலா அருண் (Ila Arun) ஒரு பிரபலமான இந்திய நடிகையும், தொலைக்காட்சி ஆளுமையும் மற்றும் ராஜஸ்தானிய நாட்டுப்புற பாப் பாடகரும் ஆவார். ஒரு தனித்துவமான, ''ஹஸ்கி''குரல் நாட்டுப்புற பாப் பாடல்களுக்கு ஒரு தனித்துவத்தை அளிக்கிறது. இவரது மகள் இஷிதா அருண், லாமே , ஜோதா அக்பர் , ஷாடி கே சைட் எஃபெக்ட்ஸ் மற்றும் சமீபத்தில் பேகம் ஜான் போன்ற பல முக்கிய பாலிவுட் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சோத்பூரில் பிறந்த இவர் செய்ப்பூரில் வளர்ந்தார். அங்கு மகாராணி பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்றார். கடற்படை அதிகாரியான அருண் பாஜ்பாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது சகோதரர்கள் பியுஷ் பாண்டே மற்றும் பிரசூன் பாண்டே ஆகியோர் விளம்பர நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். மேலும் இவரது சகோதரிகள், ரமா பாண்டே இவர் ''பிபிசி'' பத்திரிகையாளர் மற்றும் ''தூர்தர்ஷன்'' தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் ஆவார், மற்றொரு சகோதரி திரிப்தி பாண்டே ஒரு கலாச்சார ஆர்வலர் மற்றும் சுற்றுலா நிபுணர் ஆவார். இலா அருணின் தாயும் ஒரு நடிகையாவார்.

பின்னணி பாடல்கள்[தொகு]

அருண் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். நடிகை மாதுரி தீட்சித் நடித்த கல்நாயக் என்ற படத்தில் இடம் பெற்ற''சோலி கே பீச்சே'' என்ற மிக பிரபலமான திரைப்பட பாடலை ஆல்கா யாக்னிக்குடன் இணைந்து பாடியுள்ளார், அப்பாடலுக்காக சிறந்த திரைப்பட பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[1] கரன் அர்ஜூனின் ஸ்ரீதேவி நடித்த லம்ஹே திரைப்படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற ''குப் சுப்'' என்ற ம்ற்றொரு பாடலை லதா மங்கேஷ்கருடன் சேர்ந்து பாடியுள்ளார். "மோர்னி பாகா மா போலே" என்ற பாடலாலும் இவர் நன்கு அறியப்படுகிறார். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த மிஸ்டர் ரோமியோ என்ற தமிழ்ப் படத்தின் "முத்து முத்து மழை" என்ற பாடலும் இவருக்கு புகழ் சேர்த்தது.[2]

நடிப்பு[தொகு]

அருண் முதலில் லைஃப்லைன் என்ற இந்தி தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடரில் ஜீவன்ரேகா என்ற மருத்துவர் வேடத்தில், தன்வி ஆஸ்மியுடன் இணைந்து நடித்தார். 2008 ஆம் ஆண்டில் ஜோதா அக்பரில், அக்பரின் புத்திசாலித்தனமான செவிலி மற்றும் அரசியல் ஆலோசகரான மஹாம் அஞ்கா வேடத்தில் நடித்தார். சைனா கேட், சின்கரி, வெல் டான் அபா, வெல்கம் டோ ஜஜ்ஜன்பூர், வெஸ்ட் ஈஸ் வெஸ்ட் மற்றும் கதாக் போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார். பேகம் ஜானின் ஷாதி கே சைட் எபெக்ட்ஸ் படத்தில் நடிகர்களான வித்யா பாலன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோருடன் நடித்திருந்தது இவரது மிகச் சமீபத்திய முயற்சியாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Award
  2. "Slumdog Millionaire music review : glamsham.com" (in ஆங்கிலம்). Archived from the original on 2018-07-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
இலா அருண்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலா_அருண்&oldid=3989441" இலிருந்து மீள்விக்கப்பட்டது