சோனு நிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோனு நிகம்
SonuNigam02.jpg
சோனு நிகம்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு30 சூலை 1973 (1973-07-30) (அகவை 48)[1]
அம்பாலா, அரியானா, இந்தியா
இசை வடிவங்கள்செவ்விசை, பரப்பிசை
தொழில்(கள்)நடிகர், பாடகர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)பியானோ
இணையதளம்sonunigam.in

சோனு நிகம் (Sonu Nigam) (பிறப்பு: சூலை 30, 1973) [2] என்பவர் இந்தியத் திரைப்படப் பாடகர், இசையமைப்பாளர், இசைத் தயாரிப்பாளர், ஒலிப்பதிவாளர், நேரலை நிகழ்த்துநர், நடிகரும் ஆவார். இவர் இந்தி மற்றும் கன்னட மொழிப்பாடல்கள் அதிகம் பாடியுள்ளார். இது மட்டுமின்றி , குஜராத்தி, மராத்திய மொழி, துளுவம், ஒடியா மொழி, மைதிலி மொழி , அசாமிய மொழி, வங்காளம், தமிழ், தெலுங்கு, மலையாளம், , நேபாளி மொழி மற்றும் பல இந்திய மொழிகளிலும் பாடியுள்ளார். இவர் பல முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.

மேலும் பல இந்திய பாப் பாடல் தொகுதிகளில் இவர் நடித்து, வெளியிட்டுள்ளார்.[3] சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதிக சம்பளம் பெறும் இந்தியப் பாடகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.[4][5]

ஆரம்பகால வாழ்க்கை, பிண்ணனி[தொகு]

நிகம் ஹரியானாவில் உள்ள பரீதாபாதுவில் சூலை 30, 1973 இல் பிறந்தார்.[6] இவருடைய தந்தை அகம் குமார் நிகம், தாய் சோபா நிகம். இவர் கயஸ்தா வகுப்பைச் சேர்ந்தவர். இவருடைய சகோதரி தீஷா நிகமும் தொழில்முறைப் பாடகராக உள்ளார்.[7]

நிகம் தனது நான்காம் வயதிலிருந்தே பாடத் துவங்கினார். அவர் தனது தந்தையுடன் இனைந்து மேடைகளில் முகமது ரபியின் கியா ஹுவா எனும் பாடலைப் பாடினார்[8][9]. அதிலிருந்தே திருமணம் போன்ற நிகழ்வுகளின் போது தனது தந்தையுடன் சேர்ந்து பாடினார். தனது பதினெட்டாவது வயதில் மும்பை சென்று பாலிவுட் திரைப்படங்களில் பாடல்களைப் பாடினார்[10]. குலாம் முஸ்தபா கானிடம் இந்துஸ்தானி இசை பயின்றார்.[11]

மாதுரிமா நிகம் ஷா என்பவரை பெப்ரவரி 15, 2002 இல் திருமணம் செய்தார்.[12]

இசை தொகுப்புகள், இசை நிகழ்ச்சிகள்[தொகு]

Sonu Nigam singing in the concert
2014 இசை நிகழ்ச்சியின் போது

நிகம், காதல் பாடல்கள், சோகப் பாடல்கள் , நாட்டுப்பற்றுள்ள பாடல்களை , குஜராத்தி, மராத்திய மொழி, துளுவம், ஒடியா மொழி, மைதிலி மொழி , அசாமிய மொழி, வங்காளம், தமிழ், தெலுங்கு, மலையாளம், , நேபாளி மொழி உருது மற்றும் பல இந்திய மொழிகள் உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார்.[10] மேலும் பாப் பாடல் தொகுப்பினை இந்தி, கன்னடம், ஒடியா மொழி, பஞ்சாபி மொழி போன்ற பல மொழிகளில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்து சமயம் மற்றும் முஸ்லிம் போன்ற சமயங்களின் பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். பௌத்தமதப் பாடல் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். மேலும் வட அமெரிக்கா,ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா,ஆசியா, ஆத்திரேலியா போன்ற பல நாடுகளில் நடைபெற்ற பாடல் நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் கனடா மற்றும் ஜெர்மனியில் சிம்ப்ளி சோனு எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியப் பாடகர் இவர் ஆவார்.[13]

விருதுகள், அங்கீகாரங்கள்[தொகு]

1997[தொகு]

பார்டர் எனும் திரைப்படத்தில் , சந்தேசே ஆதே எனும் பாடலுக்காக ஜீ தொலைக்காட்சி சினிமா விருதுகளில் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விருது பெற்றார். அதே பாடலுக்காக ஆசிர்வாத் விருது மற்றும் சான்சுயி மக்கள் தேர்வு விருதுகளை அதே ஆண்டில் பெற்றார்.

2003[தொகு]

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விருதை கல் ஹோ எனும் பாடலைப் பாடியதற்காகப் பெற்றார்.[14] இதே பாடலுக்காக அப்சரா திரைப்படத் தயாரிப்பாளர்களின் கில்ட் விருது மற்றும் பாலிவுட் இசை விருதுகளையும் பெற்றார். மேலும் பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

வெளியிணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சோனு நிகம்

சான்றுகள்[தொகு]

 1. "Biography". The Times of India. TNN. 18 January 2011. Archived from the original on 23 September 2016. https://archive.is/Slpsi. பார்த்த நாள்: 22 September 2016. 
 2. "Happy Birthday Sonu Nigam: Lesser Known Facts and Popular Tracks of the Singing Sensation" (30 July 2015). பார்த்த நாள் 14 May 2016.
 3. "It's Nigam, not Niigaam, Says Sonu". தெ டைம்சு ஆஃப் இந்தியா. 8 செப்டம்பர்2010. Archived from the original on 2013-09-05. https://web.archive.org/web/20130905013636/http://articles.timesofindia.indiatimes.com/2010-09-08/news-and-interviews/28225350_1_sonu-nigam-change-phase. பார்த்த நாள்: 3 ஏப்ரல்2012. 
 4. "sonu nigam creates magic in kannada" (August 19, 2010).
 5. "The golden singer of Karnataka" (Jul 30, 2014).
 6. "Sonu Nigam: About Me". Sonu Nigam. பார்த்த நாள் 28 November 2015.
 7. "Say's Younger Sister Teesha Sings Like A Monster". Mid-Day. October 10, 2016. https://www.mid-day.com/articles/sonu-nigam-younger-sister-teesha-sings-music-debut-bollywood-news/17673162. 
 8. India Today: An Encyclopedia of Life in the Republic: An …, Volume 1. Books.google.co.in. 2011-09-23. https://books.google.com/books?id=VVxlfDHGTFYC&pg=PA404&dq=sonu+nigam+kayastha&hl=en&sa=X&ei=RNylUrqtB8TDrAewlYGABg&redir_esc=y#v=onepage&q=sonu%20nigam%20kayastha&f=false. பார்த்த நாள்: 2014-08-25. 
 9. "Sonu Nigam: My mother was my best ally — The Times of India". The Times Of India. Archived from the original on 2013-12-14. https://web.archive.org/web/20131214112625/http://articles.timesofindia.indiatimes.com/2013-03-03/news-and-interviews/37390250_1_sonu-nigam-mumbai-singer. 
 10. 10.0 10.1 "Sonu Nigam". மூல முகவரியிலிருந்து 15 செப்டம்பர் 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 July 2008.
 11. "A look at the rise and careers of Sonu Nigam and Atif Aslam ahead of their concert tomorrow". Abu Dahbi Media. பார்த்த நாள் 27 November 2015.
 12. "Sonu Nigam weds city belle". The Times of India. PTI. 15 February 2002. Archived from the original on 8 November 2016. https://archive.is/0TFMx. பார்த்த நாள்: 8 November 2016. 
 13. "Sonu Nigam's Tour to Germany". பார்த்த நாள் 25 July 2008.
 14. "51st National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்த்த நாள் 14 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனு_நிகம்&oldid=3246535" இருந்து மீள்விக்கப்பட்டது