உள்ளடக்கத்துக்குச் செல்

திரி இயக்கம் (சுடுகலன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரியுடன் இருக்கும் முற்கால ஜெர்மானிய மசுகெத்து
திரியுடன் இருக்கும் முற்கால ஜெர்மானிய மசுகெத்து

திரி இயக்கம் (ஆங்கிலம்: matchlock, மேட்ச்லாக்) என்பது கையேந்திச் சுடுகலனின் சுடுதலை எளிதாக்க கண்டுபிடிக்கப்பட்ட முதல் இயங்குநுட்பம் ஆகும். இந்த வடிவம், எரியும் திரியை ஆயுதத்தின் எரியூட்டுங்கிண்ணியுள் கையால் இடும் அவசியத்தை நீக்கியது. இதனால், இரு கைகளாலும் ஆயுதத்தை இறுகப்பிடித்து, இலக்கைக் குறிவைத்து சுட முடிந்தது.

திரி இயக்கத்தைக் கொண்டு சுடப்படும் சுடுகலனை, 'திரியியக்கி' என்பர்.

இயக்கத்தின் தெளிவுரை [தொகு]

மரபார்ந்த ஐரோப்பிய திரியியக்க துப்பாக்கியில், அரவு (serpentine) எனப்படும், சிறிய வளைந்த நெம்புகோலின் நுனியில் இருக்கும் பற்றிரும்பில், ஓர் மந்தகதி திரி இருக்கும் (படத்தில் காண்க). துப்பாக்கியின் கீழுள்ள, (அரவுடன் இணைக்கப்பட்டிருக்கும்) நெம்புகோலை (விசை) இழுக்கையில், பற்றிரும்பு கீழே சாய்ந்து, கனந்துகொண்டிருக்கும் திரியை தாழ்த்தி, கிண்ணியில் உள்ள எரியூட்டும் துகளுக்கு தீமூட்டும். எரியூட்டியில் இருக்கும் தீ, தொடு துளை வழியாக துமுக்கிக் குழலுள் உள்ள முதன்மை உந்துபொருளை அடையும். நெம்புகோல் அல்லது விசையை விடுவிக்கையில், சுருள்வில்-பூட்டிய அரவு கிண்ணியை விட்டு பின்னால் நகரும். துப்பாக்கியை மீள்குண்டேற்றுவதற்கு முன், நிதர்சனமான பாதுகாப்பு காரணங்களுக்காக, திரி அகற்றப்படும். வழக்கமாக திரியின் இரு முனைகளிலும் கங்கு இருக்கும். ஒரு முனை எதிர்பாராமல் அணைந்தாலும், மற்றொன்றை பயன்படுத்தலாம்.

அரவு சுடும் நிலையில், ஒரு வலுவற்ற சுருள்வில்லால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும்;[1] ஓர் பொத்தானை அழுத்துதல், விசையை இழுத்தல், அல்லது இயக்கத்திற்கு இடையே உள்ள சிறு கம்பியை இழுப்பதன் மூலமாகக்கூட, இந்த சுருள்வில் விடுவிக்கப்படலாம். இவ்வகை இயக்கத்தை சுருள்வில் திரியியக்கம் எனலாம்.[2] கிண்ணியில் திரி வேகமாக மோதுவதால் அடிக்கடி அணைந்துவிடும், இதனால், வீரர்களால் இது விரும்பப்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட இலக்கை தாக்க இது அடிக்கடி உபயோகப்பட்டது.

பல ஜப்பானிய (சமுராய்), ஈடோ காலத்து திரியியக்கிகள் (டனேகசிமா)

திரியை தொடர்ந்து எரியும் நிலையிலேயே, வைத்திருப்பதன் அவசியம் தான் திரி இயக்கத்தின் பலவீனம். நீடித்த நேரத்திற்கு திரியை எரியவைக்க அது பொட்டாசியம் நைற்றேட்டில் தோய்க்கப்பட்டிருக்கும். வெடிமருந்தை தீமூட்ட இருக்கும் ஒரே மூலமான திரியும், துப்பாக்கியை சுட வேண்டிய நேரத்தில் அணைந்துவிட்டால், இந்த இயங்குநுட்பத்தால் ஏந்த பிரயோஜனமும் இல்லை. ஈரமான வானிலையில், ஈரம் கோர்த்த திரியை எரியும்படி வைத்திருப்பது கடினமாகும், இது மிகப்பெரும் பிரச்சனை. இரவின் இருட்டில் திரி எரிவது, சுடுநரின் இருப்பிடத்தை எதிரிக்கு காட்டிக்கொடுத்துவிடும். மேலும், திரி எரியும்போது வெளிவரும் தனித்துவ வாசம்கூட சுடுநரின் இருப்பிடத்தை மற்றுவற்கு தெரியப்படுத்திவிடும்.

வரலாறு[தொகு]

8 குண்டு, திரியியக்க சுழல் கைத்துப்பாக்கி (ஜெர்மனி, தோராயமாக 1580)  
டனேகசிமாவை (திரியியக்கிகள்) கொண்டு சுடும், ஜப்பானியப் பதாதிகள் (அஷிகாரு).

திரியியக்கிகள் ஐரோப்பாவில் 15-ஆம் நூற்றாண்டின் மத்தியில் முதலில் தோன்றின, (1700-களிலேயே திரியியக்கிகள்  ஐரோப்பாவில் வழக்கொழிந்து போயின)[3] ஆனால் அரவு வடிவங்கள், இதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்திரிய சுவைகளில் இருந்தன. 16-ஆம் நூற்றாண்டிலேயே, இது உலகளாவில் பயன்படுத்தப் பட்டன. இந்த காலங்களில் தான், திரியியக்கிகளை வரிசையாக நின்று, ஒரே நேரத்தில் சுடும் யுக்தி பிறந்தது. இதை அதிர்வேட்டுச்சூடு என்பர். இது ஒற்றையாக ஆளாக நின்று, குறிப்பிட்ட இலக்கை சுடுவதைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.[4]

உதுமானியப் படையின், யேனிச்செரிப் படையினர், 1440-கள் முதல், திரியியக்க ஆயுதங்களை படிப்படியாக  அங்கேரியில் இருந்து பெற்றனர்.[5] கொக்கித் துப்பாக்கியின் மேம்படுத்தப்பட்ட ரகங்கள் இந்தியாவிற்கு, 1526-ல் பாபரால் கொண்டுவரப்பட்டது.[6][7]

வெடிமருந்தையும், சுடுகலன்களையும் கண்டுபிடித்தது சீனாவாக இருக்கலாம், ஆனால் திரியியக்கிகளை சீனாவிற்கு அறிமுகப்படுத்தியது, போர்ச்சுகீசியர்கள் தான். 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு வந்த கைபீரங்கிகளை, ஐரோப்பியர்கள் செம்மைப்படுத்தி, அதில் திரி இயங்குநுட்பத்தை சேர்த்தனர். சீனர்கள், திரியியக்க ஆர்க்பவெசின் தொழில்நுட்பத்தை போர்ச்சுக்கீசியர்களிடம் இருந்து 16-ஆம் நூற்றாண்டில் பெற்றனர், ஆனால் திரியியக்க சுடுகலன்கள் 19-ஆம் நூற்றாண்டில் தான் சீனர்களால் பயன்படுத்தப்பட்டது.[8]

ஜப்பானில், முதலில் ஆவணப்படுத்தப்பட்ட (டனேகசிமா என்றழைக்கப்பட்ட) திரியியக்கியின் அறிமுகம் 1543-ல், போர்ச்சுகீசியர்களால் வந்தது.[9] சுருள்வில் திரியியக்கிகளை அடிப்படையாகக் கொண்டு டனேகசிமா, போர்ச்சுகீசிய இந்தியாவில் இருந்த கோவாவின் ஆயுதக்கிடங்கில் தயாரிக்கப்பட்டது. 1510-ல் போர்ச்சுகீசியர்கள் கோவாவை கைப்பற்றினர்.[10]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. European & American arms, c. 1100–1850, Author Claude Blair, Publisher B. T. Batsford, 1962, Original from Pennsylvania State University, Digitized Jun 30, 2009 P.42
  2. The defences of Macau: forts, ships and weapons over 450 years Author Richard J. Garrett, Publisher Hong Kong University Press, 2010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 988-8028-49-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-988-8028-49-8 P.176
  3. Saidel, Benjamin (2000). "Matchlocks, Flintlocks, and Saltpetre: The Chronological Implications for the Use of Matchlock Muskets among Ottoman-Period Bedouin in the Southern Levant". International Journal of Historical Archaeology 4 (3): 197. http://download.springer.com/static/pdf/730/art%253A10.1023%252FA%253A1009551608190.pdf?auth66=1380681800_cd543ef05c35dc8cf696a3beffd1f0d9&ext=.pdf. பார்த்த நாள்: 24 September 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Weir, William (2005). 50 Weapons That Changed Warfare. Franklin Lakes, NJ: Career Press. pp. 71–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56414-756-1.
  5. Nicolle, David (1995). The Janissaries. Osprey. pp. 21f. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85532-413-X.
  6. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  7. https://sites.google.com/site/airavat/matchlock
  8. The defences of Macau: forts, ships and weapons over 450 years, Richard J. Garrett, Hong Kong University Press, 2010 P.4
  9. Tanegashima: the arrival of Europe in Japan, Olof G. Lidin, Nordic Institute of Asian Studies, NIAS Press, 2002 P.1-14
  10. The bewitched gun : the introduction of the firearm in the Far East by the Portuguese, by Rainer Daehnhardt 1994 P.26
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரி_இயக்கம்_(சுடுகலன்)&oldid=3759570" இலிருந்து மீள்விக்கப்பட்டது