அரவு வடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஹோகார்த்தின் தி அனாலிசிசு ஆஃப் பியூட்டி-யில் இருந்த தட்டில் உள்ள அரவு வடிவங்கள்.

அரவு வடிவம் (Serpentine Shape) என்பது ஒரு பொருள்,அல்லது வடிவமைப்பின் வளைந்த வடிவமானது, பாம்பின் வடிவத்தை (அரவு/அரவம் என்றால் பாம்பு) ஒத்து இருப்பதாகும். கட்டிடக்கலை, தளபாடம், கணிதம் ஆகிய துறைகளில் அரவு வடிவங்களின் பயன்பாடு உள்ளது.

வர்ஜீனியா பல்கலைக்கழகதில் இருக்கும் அரவுச் சுவர் 

தளபாடத்தில் [தொகு]

அரவு வடிவ முகப்பு உடைய தளபாடம்.

தளபாடத்தில், அரவு-முகப்பு பேழைகளில் ஒரு குவிந்த பகுதியானது, இரு குழிந்த பகுதிகளுக்கு நடுவே இருக்கும்.[1]

கணிதத்தில் [தொகு]

அரவு வளைகோடு 

அரவு வளைகோடு என்பது y(a2 + x2) = abx என்ற காட்டீசியன் சமன்பாடு உடைய, ஐசக் நியூட்டன் விவரித்த ஒரு கன வளைகோடு ஆகும். இந்த வளைகோடானது, 2y = ±b என்ற இணைகோடுகளுக்கு இடையில் இருக்கும்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Popular Science, Feb 1932, p. 100.
  2. 1911 Encyclopædia Britannica
  3. *O'Connor, John J.; Robertson, Edmund F., "Serpentine", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவு_வடிவம்&oldid=2316816" இலிருந்து மீள்விக்கப்பட்டது