துமுக்கிக் குழல்
[[படிமம்:240mm_howitzer.jpg|thumb|1944-ல் உபயோகிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் [[240மி.மீ. தெறோச்சி]].]] துமுக்கிக் குழல் என்பது உலோகத்தால் ஆன ஓர் குழாய் ஆகும். அதிக வேகத்தில், எறியத்தை ஒரு முனையிலிருந்து வெளியே ஏவுவதற்கு ஏதுவாக, இதனுள் விரைந்து விரிவடையும் வாயுக்கள் வெளியிடப்படும். குழல்கள் சுடுகலன்கள் மற்றும் சேணேவி வகைகளின் ஒரு பகுதியாகும்.
கட்டுமானம்
[தொகு]ஒரு துப்பாக்கிக் குழல் என்பது, உந்துபொருட்களால் உருவாகும் விரிவடையக்கூடிய வாயுக்களை தாக்குப்பிடிக்க வல்லதாகவும், அவ்வாயுக்கள் எறியத்தை உகந்த சன்னவாய் திசைவேகத்தில் வெளியேற்றுவதை உறுதிசெய்யும் வகையிலும் இருத்தல் வேண்டும்.
முற்கால சுடுகலன்கள் வாய்வழியாக குண்டேற்றப்பட்டு, வெடிமருந்து இட்டு, பிறகு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் சுடும்-வேகத்தின் விகிதம் குறைந்தது. பின்வழியாக குண்டேற்றப்படுபவை அதிகமான சுடும்-வேக விகிதத்தை அளித்தன. முற்கால பின்வழி-குண்டேற்ற துப்பாக்கிகளில், வெளியேறும் வாயுக்கள், குழலின் பின்புறத்தில் கசிந்து, சன்னத்தின் திசைவேகத்தை குறைத்தது.[1] ஆனால் 19-ஆம் நூற்றாண்டில், ஸ்திரமான இயந்திர பூட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதைக்கொண்டு சுடுகலனின் பின்புறத்தை அடைத்து, இந்த பிரச்சனையை தீர்த்தனர்.[2]
மேலும் பார்க்க
[தொகு]- குழல் புகைபோக்கி
- குழற்கயிறு
- பீரங்கி
- சேணேவி
- சன்னவாய்
- பல்கோண மரையிடுதல்
- மரையிடுதல்
- Slug barrel
- மரையிடாக் குழல் / வழுக்குத்துளை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ James, Rodney (15 December 2010). The ABCs Of Reloading: The Definitive Guide for Novice to Expert. Iola, Wisconsin: Krause Publications. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4402-1787-4.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Moller, George D. (15 November 2011). American Military Shoulder Arms, Volume III: Flintlock Alterations and Muzzleloading Percussion Shoulder Arms, 1840-1865. UNM Press. pp. 98–99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8263-5002-2.