தொடு துளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீரங்கியின் வரைபடம் 
தீக்கோலை கொண்டு 17-ஆம் நூற்றாண்டின் கள பீரங்கியை சுடுதல்  

தொடு துளை (ஆங்கிலம்touch hole அல்லது vent), என்பது பீரங்கி அல்லது வாய்குண்டேற்ற துப்பாக்கியின் பின்பகுதிக்கு அருகாமையில் இருக்கும் ஒரு சிறு துளை — அதாவது, எறியம் வெளியேறும் சன்னவாயிற்கு எதிர்முனையில், வெடிப்பு நிகழும் பகுதி  ஆகும். தொடுதுளை தான் அணுகுவழி, அதன் வழியாகத்தான் உந்தும் வெடிபொருள் தீமூட்ட/பற்றவைக்கப்படும். துப்பாக்கிகளில், கிண்ணியில் இருக்கும் எரியூட்டியில் உள்ள சிறிய தீயே, வெடிபொருளை பற்றவைக்க போதுமானது.[1] பீரங்கிகளில், எரியூட்டிப் பொடி, திரி, அல்லது ஊசிவெடி போன்றவற்றை தொடுதுளையுள் செருகப்பட்டு இருக்கும்.

தொடுதுளையில் உள்ள பொடியை பற்றவைக்க மந்தகதி திரி - தீக்கோல், அல்லது பீரங்கி இயக்கம் (கன்லாக்) எனப்படும், தீக்கல் இயக்கத்தை கொண்டு பற்றவைக்கப் பட்டது.

பீரங்கியில் ஆணியடித்தல் [தொகு]

பீரங்கியில் ஆணியடித்தல் என்பது, தொடுதுளைக்குள் ஒரு எஃகு ஆணியை சுத்தியலால் அடித்து விடுவதன் மூலம், தற்காலிகமாக பீரங்கியை செயலிழக்க செய்யும் ஒரு முறை ஆகும்; இதை மீண்டும் வெளியே எடுப்பது, மிகக்கடினம். ஒருவேளை எதிரியால் கைப்பற்றப்படும் அபாயத்தில் பீரங்கி இருந்தால், அதை தங்களுக்கு எதிராக பயன்படுத்துவதை தவிர்க்க படைக்குழுவே அதில் ஆணி அடித்து விடுவர். கைப்பற்றப்பட்ட பீரங்கியை இழுத்து செல்ல முடியாவிட்டாலும், அல்லது திரும்ப கைப்பற்றபடுவது போல் இருந்தாலும், அதில் ஆணி அடித்து விடுவர்.

ஒருவேளை, பிரத்தியேக ஆணி எதுவும் இல்லாவிட்டால், துப்பாக்கிமுனைக் கத்தியை தொடுதுளையில் செலுத்தி, கத்தியின் கூர்முனை பொதிந்து இருக்கும்படி வைத்து, உடைத்து விடுவர்.[2]

எதிர்தாக்குதலையும் தவிர்க்கவும், பின்வாங்கும்போது கப்பல்களை பாதுகாக்கவும், எதிரியின் பீரங்கிகளில் ஆணி அடிக்க, இரகசிய திட்டம் தீட்டி அரங்கேற்றுவர். அமெரிக்க புரட்சிப் போரின்போது, வைட்ஹவன் மீதான ஜான் பால் ஜோன்ஸின் தாக்குதலின்போது, இது நிகழ்ந்தது.

மேற்கோள்கள் [தொகு]

  1. Vauban and the French military under Louis XIV, Jean-Denis G. G. Lepage, p.38
  2. Richard M. Lytle (1 January 2004). The Soldiers of America's First Army, 1791. Scarecrow Press. பக். 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-5011-8. https://books.google.com/books?id=UDxBU0JfgjMC&pg=PA101. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடு_துளை&oldid=2208106" இருந்து மீள்விக்கப்பட்டது